Friday, 18 April 2014

பாலும் சாராயமும் ஒரு பொருளாதார கண்ணோட்டம்

ஒரேயொரு சந்தேகம். 80ரூபாய் குடுத்து சாராயம் (வெறும் 180 மிலி தான்) குடிக்கும் குடிமகன்கள் ஏன் 24ரூபாய் குடுத்து பால் (1000 மிலி'ங்க) வாங்கக்கூடாது???

குவார்ட்டர் (காப்படி (அதாவது 250 மிலி) கிடையாது, வெறும் 180 மிலி தான்) குடித்தும் போதையில்லைனு வசனம் பேசறவங்க அவங்க வீட்டுக்கு லிட்டர் (1000 மிலி) வாங்கிட்டுப்போனா அவங்க குடும்பமே நல்ல ஆரோக்கியமா இருக்குமே... அதோட பெரு முதலாலிகளோட வயித்த கொழுக்கவைக்காம ஏழை விவசாயிகளோட வயித்துல பால் வார்க்களாமே...

பால் அதிகமா விற்பனையானா நிறைய நல்ல விசயங்கள் தானா நடக்கும். அதிகமான பால் விற்பனைனா மாநிலத்துல அதிகமான கால்நடைகள் இருக்கும், அதிகமான கால்நடைகள்னா அதிகமா சாணம் கிடைக்கும், அதிகமா சாணம் கிடைத்தா விவசாயிகள சாண எரிவாயு தயாரித்து பயன்படுத்த ஊக்கப்படுத்தலாம், நிறைய சாண எரிவாயு கலன்கள் இருந்தா இந்தியாவோட எரிவாயு இறக்குமதியில கணிசமான அளவ குறைக்கலாம், அதிகமான சாணம் கிடைக்கும்னா இயற்க்கை வேளாண்மைக்கு அதிகமான இயற்கை உரம் கிடைக்கும், நிறைய இயற்கை உரம் போட்டா விவசாயிகள் ரசாயனம் வாங்கறது குறையும், ரசாயனம் வாங்கறது குறைந்தா வேளான் பொருட்களோட உற்பத்தி செலவு குறையும், மண்ணோட உயிர்தன்மை அதிகரிக்கும், உற்பத்தியும் அதிகரிக்கும், உற்பத்தி செலவு குறைந்து உறபத்தி அதிகரிச்சா குறைவான விலைக்கு வித்தாலே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும், விலை குறைஞ்ச தரமான உணவுப்பொருட்கள் எல்லாருக்கும் கிடைக்கும், அதிகமான பால் குடிப்பது எல்லாருக்கும் நல்லதும் கூட...

இங்க முக்கியமான விசயமே, நம்ம உழவர்கள் மாடுகளுக்கு எந்தவிதமான ரசாயனத்தையும் உணவுல குடுக்கறது கிடையாது. அதாவது ஊட்டச்சத்து மருந்துகள், ஊசிகள் கிடையாது. தவிடு, புன்னாக்கு, பருத்திக்கொட்டை, சோளம்,  வைக்கோல், பசுந்தீவனம், புற்கள். கீரைகள், சோளத்தட்டு, கடலைக்கொடி, வாழைத்தண்டு, வாழையிலை, வாழைப்பழம், பிற பழங்கள், கரும்புத்தோகை, கரும்பு, பச்சரிசி, ராகி, கம்பு, கம்பந்தட்டு, தேங்காய்ப்பால், கொடிகள்னு இப்படி பல இயற்கையான பொருட்கள்தான் கால்நடைகளுக்கு உணவா கொடுக்கப்படுது. அதோட பல விவசாயிகள் தாங்களாவே பால் கரந்து விக்கிறாங்க. பால்கரக்கும் எந்திரங்களும் குறைவே.

சாராயத்த விட்டுட்டு இளநீர், பால், பதனீர்னு நல்ல இயற்கையான பாணங்கள குடிங்க. நம்ம உழவர்களும் நல்லாயிருப்பாங்க, நாமலும் நல்லா இருப்போம், நாடும் நல்லாயிருக்கும்.

சாராயம் குடித்தா குடிதான் கெடும். வாழ்வோம் வாழவைப்போம்!!!

No comments:

Post a Comment