வஇவர் அங்கம் வகித்த இந்திய வளை மட்டைப் பந்தாட்ட அணியை எதிர் கொள்ள துனிவில்லாமல் பிரட்டன் அணி 1948 வரை (இந்தியா சுதந்திரம் அடையும் வரை) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேர்கவில்லை. தனது காலனி நாட்டிடம் தோற்ப்பது அவமானம் என்று அவர்கள் நினைத்தார்கள்..
இட்லருக்கு சிம்மசொப்பனமாக இருந்த பிரிட்டனுக்கு சிம்மசொப்பனமாக இருந்த அணி இவர் அங்கம் வகித்த இந்திய அணி..
நாசிக்களின் ஜெருமானிய வளை மட்டைப் பந்தாட்ட அணியிடம் 1936ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் நடந்த பயிர்ச்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றது. அந்த ஒலிம்பிக்கின் முத்தாய்ப்பாக இறுதிப் போட்டியில் இந்திய ஜெருமானிய அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன் இந்தய வீரர்கள் கலக்கத்தில் இருந்தார்கள். நம்மவர்களோ இங்கிலாந்தின் அடிமைகள். களத்தில் எதிர் நிற்கும் அணியோ தாங்கள் தான் உலகின் உயர்ந்த இனம் என்று மார்தட்டும் ஜெருமானியர்கள். போட்டி துவங்கும் முன், நமது வீரர்கள் இந்திய தேசிய காங்கிரசின் மூவர்ணக் கொடியை விரித்து அதற்கு வணக்கம் வைத்துவிட்டு களத்திற்குப் போகிறார்கள், ஜெருமானியர்களை 8-1 என்ற கணக்கில் பந்தாடுகிறார்கள். தங்கம் வெல்கிறார்கள்.
அந்த போட்டியைக் கற்பனை செய்து பாருங்கள்.
அதே 1936 ஒலிம்பிக்கில் இட்லரின் செல்லமான லஸ் லாங்கை நீளம் தாண்டுதலில் வீழ்த்தி ஜெஸ்ஸி ஒவன்சு வென்ற தங்கப் பதக்கத்தை அமரிக்கர்கள் தங்களது மாபெரும் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். நாமும் நமது பள்ளிக்காலத்தில் அதைப் படித்தோம். ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு பிரம்மாண்டமான வெற்றியை நமது வளைப் பந்தாட்ட அணி பெற்றது. அந்த அணியை வழிநடத்தியவர் "தயான் சந்த்"..
மேலும் ஹாட்ரிக் தங்கப் பதக்கங்களை இவர் அங்கம் வகித்த இந்திய அணி (1928-1936) வென்றதும் வரலாற்றில் பொன்னெழுத்தில் பதிக்கப் பட்ட சாதனை.. இவர்களுக்குப் பின் வந்த தலைமுறையும் ஒரு ஹாட்ரிக் தங்கப் பதக்கங்களை (1948-1956) வென்றது.
ஹாக்கி விளையாட்டை நமது கிரிக்கட் மோகத்திர்க்கு தொலைத்து விட்டோம்.. நமது கிரிக்கெட் மோகம் நமது வளை மட்டைப் பந்தாட்ட அணியை அதன் உச்சத்திலிருந்து அதல பாதாளத்திற்கு கொண்டுபோய் விட்டது.
தயான் சந்த் மற்றும் அவரது சகாக்கள் யாவரும் சச்சினுக்கு இனையான திறமை கொண்ட விளையாட்டு வீரர்கள்... அவர்களுக்கான கவுரவத்தை நாம் வழங்க வேண்டும்..
அப்போதுதான் நமது இளைய சமுதாயத்தை கிரிக்கட் மோகத்திலிருந்து மீட்கவும் மற்ற விளையாட்டுக்களை வளர்க்க வழிகோலமுடியும்.
No comments:
Post a Comment