நமது நாட்டின் பாதுகாப்பு தொடர் சொதப்பல் முடிவுகள், தரமற்ற தளவாட இறக்குமதிகள் மற்றும் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முனையாமை ஆகியவற்றால் தற்போது என்றுமில்லாத அளவுக்கு கடும் ஆபத்திலிருக்கிறது.
நமது கடற்படையின் நீர்முழ்கி படைபலம் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு பாகிசுதானின் பலத்தோடு சமமாக இருக்கிறது. இதன் அர்த்தம் இருமுனை தாக்குதலை நம்மால் சமாளிக்க முடியாது... நமது பெரும் கடற்படைக்கலங்களின் பாதுகாப்பை நம்மால் உறுதி செய்யமுடியாத நிலை தற்பொழுது நிலவுகிறது. இதற்குமுன் 1971 வங்கதேச சுதந்திரப்போரின் போது நம்மைவிட வலிமையான நீர்மூழ்கியை பாகிசுதான் வைத்திருந்தது... பி.என்.எசு காசி எனும் அமரிக்காவிலிருந்து குத்தகைக்கு வாங்கப்பட்ட அந்த நீர்மூழ்கி நமது விமானம் தாங்கிக்கப்பலான விக்கிராந்திற்கு கடும் நெருக்கடியைத் தந்தது. அந்த ஆபத்தை நமது கடற்படை தந்திரமாக வெற்றிகொண்டது ஒரு வரலாற்று நிகழ்வு...
இன்றைய நிலை ஏன் வந்தது?? முதலில் நமது கடற்படையில் தற்போது இருக்கும் நீர்மூழ்கிகளைப் பார்ப்போம். மொத்தம் 15 நீர்மூழ்கிகள் இருக்கின்றன.. அவற்றில் ஒன்று கடந்த வருடம் மூழ்கிவிட்டது, இரண்டு படகுகள் புணரமைப்பில் இருக்கின்றன, ஒன்று தற்போது தீவிபத்தையடுத்து ஆய்விலிருக்கிறது. இருக்கும் ஒரேயெரு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கியையும் (ருசியாவிலிருந்து குத்தகைக்கு வாங்கப்பட்ட) பயிற்சிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும்... ஆக மொத்தம் 10 படகுகள் மட்டுமே இப்போது யுத்தகாலத்திற்கு பயன்படுத்த நம்மிடமிருக்கின்றன...அதில் 75% (பேராசை!) நம்பகத்தன்மை என்று வைத்துக்கொண்டால், நம்மால் அவசர காலத்தேவைக்கு 7-8 படகுகளை மட்டுமே பயன்படுத்தமுடியும்.
சரி இப்போது நமது படகுகளின் வயதைப்பார்ப்போம். 5 படகுகள் தங்களது முப்பதாவது அகவையை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. 6 படகுகளுக்கு இருபத்தைந்து வயதாகிறது. ஒன்றிற்கு இருபது வயதும் ஒன்றிற்கு 15 வயதுமாகிறது. மேற்கின் படைகளில் ஒரு நீர்மூழ்கியை அதிகபட்சமாக முப்பது ஆண்டுகளுக்கே பயன்படுத்துகின்றனர். அதன்படி பார்த்தால் நமது படையிலிருக்கக்கூடிய ஐந்து படகுகள் தங்களது ஆயுட்காலத்தைத் தாண்டி உழைத்துக்கொண்டிருக்கின்றன ஆறு படகுகளின் வாழ்நாள் முடியும் தருவாயிலிருக்கிறது. இதிலும் இவற்றில் மின்னுந்துகள் (மின் மோட்டார்கள்) இல்லை. தங்களது வெடியெண்ணை (டீசல் எஞ்சின்) உந்துகளைககொண்டே நீரில் மூழ்கியிருக்கும்போதும் நகர வேண்டும். எனவே இந்த படகுகள் தொடர்ந்து இயங்க அவ்வப்போது கடலின் மேற்பரப்புக்கு அருகில் வந்து சுவாசித்துக்கொள்ள வேண்டும். இதனால் இவை இன்றைய நவீன நீர்மூழ்கியெதிர்ப்பு சாதனங்களின் கண்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெரிந்துவிடும்.
அதுவே பாகிசுதானின் மூன்று நவீன நீர்மூழ்கிகளிலும் மின்னுந்து மற்றும் மாற்று மின்னுற்பத்தி அமைப்புகள் மற்றும் காற்று தேவைப்படாத உந்து அமைப்பும் இருக்கின்றன. எனவே அவற்றால் தொடர்ச்சியாக அதிகநேரம் நீருக்குள் மூழ்கியபடி இயங்கிட முடியும்.
நமக்கு ஏன் இந்த இக்கட்டான நிலை?? அரசியல் குறுக்கீடுகளும் நமது அலட்சியமுமே காரணம். கடற்படை தனது நீர்மூழ்கி பலம் சரிவடைவது குறித்து அரசுக்கு பலமுறை எச்சரிக்கை செய்துவிட்டது. ஆனால் அரசு தனது நெடிய மௌனத்தின் வழியே இன்று நம்மை இப்படியான ஒரு இக்கட்டிற்கு தள்ளிவிட்டது... குறிப்பாக மெத்தனம்.. என்பதுகளில் நாம் செருமனியிடம் 4 நீர்மூழ்கிகளை வாங்கினோம்.. அதில் இரண்டு செருமனியில் கட்டப்பட்டவை. இரண்டு மும்பையின் மசாகவுன் கப்பல் கட்டும் தளத்தில் வைத்து கட்டப்பட்டவை. இதற்காக செருமனி தொழில்நுட்பங்களை பகிரந்து கொண்டது. இந்த இரு படகுகளும் தொனினூறுகளின் தொடக்கத்தில் முடிக்கப்பட்டன. இதற்கு பிறகு நாம் எந்தவொரு நீர்மூழ்கியையும் கட்டவில்லை... மாறாக அந்த விலைகுடுத்து வாங்கிய தொழில்நுட்பத்தையும் பரணில் போட்டுவிட்டோம்...
இதற்கு பிறகு 1999இல் மத்திய அரசு ஒரு தேசிய நீர்மூழ்கி கொள்கையை அறிவித்தது. அதன்படி 2030க்குள் 24 நீர்மூழ்கிகளைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக திட்டம் 75ல் 6 நீர்மூழ்கிகளைக்கட்ட முடிவுசெய்யப்பட்டது.. இத்திட்டத்திற்காக பிரான்சு மற்றும் எசுபானிய நாடுகளின் கூட்டுத்தயாரிப்பான ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி தேர்வுசெய்யப்பட்டு, மும்பையின் மசாகவுன் கப்பல்கட்டும் தளத்தில் வைத்து கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த ரக நீர்மூழ்கிகளிலும் மின்னுந்து மற்றும் மாற்று மின்னுற்பத்தி அமைப்புகள் இல்லை. கடைசி இரண்டு படகுகளில் மட்டுமே அந்த அமைப்புகள் பொருத்தப்படும் (பாதுகாப்பு ஆராச்சி நிறுவனம் அதை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது). இத்திட்டம் 2005ல் துவங்கியது.. இதன்படி 2009ல் முதல் படகை வெள்ளோட்டம் விடவும் 2011ல் படையில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது... ஒப்பந்தப்படி எசுபானிய நாட்டின் நவன்தியா (Navantia) நிறுவனம் தனது பொறியாளர்களை தொழில்நுட்ப பகிர்வுக்கும், நமது பொறியாளர்களை பயிற்றுவிக்கவும் நான்காண்டுகளுக்கு அனுப்பியது. அவர்களிடம் நாம் கற்கவும் முனையவில்லை, தொழில்முட்பத்தை பெறவும் முனையவில்லை. அவர்கள் ஒப்பந்தகாலம் முடியும் வரை மும்பை நகரை சுற்றிவிட்டு ஒப்பந்தம் முடிந்தவுடன் வெளியேறிவிட்டார்கள். இன்னும் ஒரு படகைக்கூட வெள்ளோட்டம் வடவில்லை. 2017-18ல் தான் (பேராசை) முதல் கப்பல் படையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2030க்குள் 24 படகுகளை கட்டும் திட்டத்தில் இன்னும் ஒரு படகுகூட படையில் சேரவில்லை. இதில் அடுத்த கட்டமான திட்டம் 75ஐ (Project 75 I) க்கு இன்னும் நம்மால் தகுதியான நீர்மூழ்கியைத் தேர்வு செய்யமுடியவில்லை... ஆக 2020ல் நம்மிடம் 1-2 புதிய நீர்மூழ்கிகளும் (20 ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பம்) 8-9 அரதப்பழசான நீர்மூழ்கிகளும் இருக்கும்... பாகிசுதான் இப்போது சீனாவிடம் புதிய நீர்மூழ்கிகளை வாங்க பேசிக்கொண்டிருக்கிறது... இதை இன்னும் 2030 வரை தொலைநோக்கிப் பார்த்தோமானால் நம்மிடம் 6-7 நீர்மூழ்கிகளே இருக்கும்.
திட்டமிடல் மற்றும் முடிவெடுத்தலில் ஊழல் மற்றும் அரசியல் மற்றும் அதிகார வர்க்க தலையீடு, கடற்படையிடம் தனது தேவைகளில் தெளிவின்மை, அரதப்பழசான கப்பல் கட்டும் தளங்களும் தொழில்முட்பங்களும் நம்மை இன்றைய நிலைக்குத் தள்ளியிருக்கின்றன... தற்போது அரிகந்த் ரக நீர்மூழ்கிகளை நாம் கட்டிவருகிறோம்.. அந்த ரகத்தை இன்னும் சற்று குறுக்கி வெடியெண்ணை உந்து, மின்னுந்து மற்றும் மாற்று மின்னுற்பத்தி முறைகளை புகுத்தி தாக்குதல் நீர்மூழ்கிளை வடிவமைக்க நாம் முயல வேண்டும். திட்டம் 75ஐ (Project 75I ) க்கான நீர்மூழ்கிகளை இப்படியாக நமது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் கட்டிக்கொள்ளவேண்டும். மும்பையில் ஸ்கார்பீன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. துரிதமாக திட்டம் 75i க்கான கப்பலை கண்டறிந்து அதன் உற்பத்தியை 2020ல் துவங்கிட வேண்டும். இதற்கு ஏதேனும் ஒரு தனியார் அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட தனியார் கப்பல்கட்டும் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனியார் கப்பல் கட்டும் தளங்களும் தொழிற்சாலைகளும் ஆய்வகங்களும் அரிகந்த் ரக கப்பல்களைக் கட்டுவதில் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றன. எனவே அவர்களின் புதிய நீர்மூழ்கிகளைக் கட்டும் திறன் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாம் சரியாகப் பயன்படுத்தவேண்டும். ஆனால் உள்நாட்டு உற்பத்தியென்றால் அரசுக்கு எப்போதும் மாற்றான் தாய் மனப்பாண்மைதான். ஓரளவு கடற்படை உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பதால்தான் இன்று கடற்படைக்குக் கட்டப்படும் 45 கப்பல்களும் உள்நாட்டிலேயே கட்டப்படுகின்றன. ஆனால் நமது அரசாங்கமும் தரைப்படை மற்றும் விமானப்படையும் துரும்பு வாங்குவதற்கு கூட வெளிநாடுகளுக்கே செல்கின்றன. அவற்றைப் பற்றி பின்னர் ஒருநாளில் பார்ப்போம்.
பின்குறிப்பு: இங்கு பேசப்படுவது தாக்குதல் நீர்மூழ்கிகளைப்பற்றி தான்.. அரிகந்த் ரக ஏவுகனை தாங்கி நீர்மூழ்கிகளைப் பற்றியில்லை... ஏவுகனை தாங்கி நீர்மூழ்கிகளின் பணியானது அணுகுண்டுகளை தாங்கிய ஏவுகனைகளை ஏவுவதற்கு எதிரிகளால் எளிதில் கண்டடையமுடியாத மாற்று ஏவுதளமாக செயல்படுவதே.. அவை நீண்டகாலத்திற்கு நீரில் மூழ்கியவாரு சுற்றிக்கொண்டிருக்கும்... அவை அணுவாயுத தடுப்பு ரோந்துகளில் (Deterence Patrol) ஈடுபடுத்தப்படும் நாம் இங்கு பேசும் தாக்குகதல் நீர்மூழ்கிகள் கப்பல்களை தாக்கி அழிக்கும் நீர்மூழ்கி சுய உந்து வெடிகுண்டுகளையும் (டார்பீடோ ) தாழ்வாக பறந்து தாக்கும் ஏவுகனைகளையும் (Cruise missile) தாங்கிச்செல்பவை... இவற்றின் முன்பக்கத்தில் கிடைநிலையில் இருக்கும் குழாய்களின் வழியே குண்டுகளும் ஏவுகனைகளும் செழுத்தப்படும்... இவை பெரிய கப்பல்களை அழிக்கவும் நமது கப்பல்களை எதிரி நீர்மூழ்கிகளிடமிருந்து காக்கவும் பயன்படும்... அதுவே அரிகந்த் ரக கப்பல்களின் முதுகுப்பகுதியில் செங்குத்தாகவோ சற்று சாய்வாகவோ இருக்கும் குழாய்களின் வழியே கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுதம் தாங்கிய ஏவுகனைகளைச் செலுத்தலாம்.
நீர்மூழ்கிகளின் வகைகள்,
ssk - பிற கப்பல்களை வேடேடையாடி அழிக்கும் நீர்மூழ்கி.(Hunter Killer) (Eg: All current Diesel electric submarines of Indian Navy)
ssn - அணுசக்தியில் இயங்கி பிற கப்பல்களை வேட்டையாடும் நீர்மூழ்கி(Ship Submersible Nuclear) (Eg: INS Chakra)
ssbn - அணுசக்தியால் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகனை தாங்கிய நீர்மூழ்கி(Ship Submersible Ballistic Nuclear) (Eg: Arihant Class)
ssgn - அணுசக்தியால் இயங்கும் குறுகிய தூர வழிதொடர் ஏவுகனை தாங்கிய நீர்மூழ்கி(Ship Submersible Guided Nuclear)(Eg: Arihant Class is speculated to be a crossover of both ssbn and ssgn)
ssi - மாற்று மின்னுற்பத்தி அமைப்புகளால் இயங்கும் மின்னுந்து நீர்மூழ்கி. (Air Independent propulsion) (Eg: Scorpene and future P75I submarines)

No comments:
Post a Comment