இன்று நமது நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலிருக்கிறது. வருமானம் குறைகிறது. அதனால் செலவுசெய்யும் திறன் குறைகிறது. இதற்கு அடிப்படைக்காரணம் விவசாயத்தின் தேக்கம் மற்றும் உற்பத்தித்துறையின் வீழ்ச்சி ஆகிய இரண்டும்.
விவசாயத்திலும் நமது உற்பத்தி குறைவு. அதனால் உள்நாட்டுத்தேவை போக ஏற்றுமதி செய்யுமளவு உற்பத்தியில்லை. ஏற்றுமதியாகும் போது அதிக வருவாயீட்டமுடியும்.
உதாரணமாக ஆலைக்கரும்பிற்கு டன் ஒன்றிற்கு இன்று 2550 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் உற்பத்தி என்று பார்த்தால் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 60 டன். இப்போது வெட்டுக்கூலி, ஆலைக்கு கரும்பை கொண்டு செல்ல லாரி வாடகை எல்லாம் சேர்த்து 600 ரூபாய் போக ஒரு டன்னிற்கு 1900 ரூபாய் கிடைக்கும். இப்போது ஒரு ஏக்கருக்கு 45 டன் என்றால் 45X1900=85,500 கிடைக்கிறது. இதைக்கேட்டால் நல்ல வருமானம் போல் தெரியும். ஆனால் இந்த பணம் கிடைக்க ஒரு வருடம் உழைக்க வேண்டும். இதில் கங்குடைக்க, கால்மாற, மூன்று முறை தோகையுரிக்க என பல முறை ஆட்கள் உள்ளே வேலை செய்யவேண்டும். வாரம் ஒருமுறை தன்னீர் பாய்ச்சவேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை உரமிடவேண்டும். அந்த குடும்பம் அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு அடுத்த ஒரு வருடம் வாழ்க்கையோட்ட வேண்டும். அதோடு அடுத்த வருடத்திற்கான முட்டுவலி (முதலீடு) போடவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 80 டன் எடுக்கவும் முடியும், சில விவசாயிகள் சாதித்திருக்கிறார்கள், இதுவே எல்லா விவசாயிகளும் இவ்வாறு உற்பத்தி செய்யமுடியுமென்றால்!.
இது கரும்பு எனும் ஒற்றை பயிரின் கதை மட்டுமல்ல. அரிசி உற்பத்தியும் இவ்வாறே. சீனாவில் ஒரு ஏக்கரில் 2.6 டன் நெல் சராசரியாக உற்பத்தியாகிறது. இந்தியாவில் இதுவே 1.1 டன். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என எல்லா விவசாயப்பொருட்களின் உற்பத்தியும் சர்வதேச உற்பத்தியளவுகளைவிட மிகக்குறைவாகவே இருக்கிறது. இதுதான் விவசாயம் தோற்பதற்கு முக்கியமான காரணமும்கூட. நமது நாட்டில் நிலவளம் குறைவு. அதனால் சராசரியாக ஒரு விவசாயி 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் அவரது வருமானம் குறைவாகவேயிருக்கும். காரணம் உற்பத்தி குறைவு. நமது சராசரி உற்பத்தி ஆகவேண்டிய உற்பத்தியில் 40 சதவீதமாக இருக்கிறது. இது 60 சதவீத வருமான இழப்பைக்குறிக்கிறது. இதுதான் அடிப்படைப்பிரச்சினை.
தொழில்களிலும் இதுவே பிரச்சினை. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி அதிக முதலீட்டுடன் கூடிய பெரும் தொழில்களின் பெருக்கத்திலில்லை. மாறாக சிறு மற்றும் குறுந்தொழில்கள் எவ்வளவு அதிகமாக நல்ல நிலையிலிருக்கின்றன என்பதைப்பொருத்தே அந்த நாட்டின் தொழில் வளரச்சியிருக்கிறது. இப்போது நாம் அதிகமாக இறக்குமதியை சார்ந்திருக்க நேர்வதற்கு காரணமும் இந்த சிறு மற்றும் குறந்தொழில்களின் வீழ்ச்சியே. உதாரணமாக ஒரு மரத்தச்சு செய்யும் பத்துபேர் வேலைபார்க்கும் ஒரு சிறு நிறுவனம் சீனாவிலிருந்து குவிக்கப்படும் மரப்பொருட்களுடனும் பிலாஸ்டிக் பொருட்களுடனும் போட்டியிடமுடியாது. நம்மவர்களிடம் மிகக்குறைவான வடிவமைப்புகளேயிருக்கும். ஆனால் சீனர்கள் கணினி மற்றும் பயிர்ச்சிபெற்ற வடிவமைப்பாளர்கள் உதவியுடன் பல புதிய மற்றும் கவர்ச்சியான வடிவமைப்புகளில் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். இங்கும் நம்மவர்களுக்கு தோல்வியே. அடுத்து நம்மவர்கள் வைத்திருக்கும் எந்திரங்களும் பழைய தொழில்நுட்பத்தைக்கொண்டவையாகவே இருக்கும். பயிற்சியில்லாத ஊழியர்கள். ஒரு நல்ல ஆர்டர் வருகிறது என்றாலும் நம்மவர்களால் அந்த ஆர்டரை முடிக்க அதிக நாட்கள் செலவாகும். ஆனால் கடைகளிலோ போதும் போதுமென்று சொல்லுமளவு சீனத்தயாரிப்பு கிடைக்கிறது.
இந்த நிலைமை ஏதோ ஒரு மரத்தச்சு செய்யும் நிறுவனத்தின் நிலை மட்டுமல்ல. BHEL, BEL, BEML, HAL, GRSE, CIL, SAIL, MDL, NTPC என பெரும் நிறுவனங்களின் கதையும் இதுவே. குறிப்பாக BHEL நிறுவனம் தனது கையாளாகாத்தனத்தால் இந்தியாவின் மின்னுற்பத்திக்கு பெரும் இடையூறாக விளங்குகிறது. CIL ன் கையாளாகாத்தனத்தால் இந்தியா கடந்த நிதியாண்டில் 20 பில்லியன் டாலர் அல்லது ஒரு லச்சத்தி இருபதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யவேண்டிய நிலையேற்பட்டது. இந்நிலை மேலும் பல வருடங்களுக்குத்தொடரும்.
இராணுவத்திற்குத்தேவையான தளவாடங்களில் பெரும்பங்கு இறக்குமதியின் வழியே ஈடுசெய்யப்படுகிறது. ஒருவருடத்திற்கு சராசரியாக 50-60 ஆயிரம் கோடி ரூபாய் இதற்கு செலவாகிறது. அதிநவீன தளவாடங்களை இறக்குமதி செய்யலாம். ஆனால் குளிர் தாங்கும் உடைகள், கவச தொப்பிகள் போன்றவற்றையும் இறக்குமதி செய்வது நமது அடிப்படைத்தொழில்களின் வீழ்ச்சியையே காட்டுகிறது.
எல்லா மட்டங்களிலும் நமது உற்பத்தி மிகக்குறைவாகவே இருக்கிறது. நமது கல்வி, ஆராய்ச்சி, திரன் வளர்ப்பு, நிதியாதாரங்களை பயன்படுத்துதல், உற்பத்தி முறைகள், திட்டங்கள், சட்டங்கள் என எல்லாவற்றிலும் மாற்றம் வந்தாலொழிய இன்னிலை மாறாது.

No comments:
Post a Comment