கோரியின் முகமது, பிரித்திவிராஜ சவுகானை 1192ஆம் ஆண்டு தரைன் போர்க்களத்தில் தோர்க்கடிக்கிறார். இந்த யுத்தத்தில் சவுகானின் உறவுக்கார ராஜபுத்திர மன்னர்கள் உதவிக்கு வராததால் அவர் தோற்க்கிறார். மேலும் முகமது, பிரித்திவிராஜின் படைகளை பகலவன் உதிக்கும் முன் தாக்கி அழிக்கிறார் (பரத கண்ட படைகள் உதயத்துக்கும் மறைவுக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் போரிடுவார்கள்). இந்த தந்திரத்தால் சவுகானின் படைகள் தோற்க்கின்றன. அடுத்து ஆஜ்மீர் அரசு கோரியின் முகமதுவுக்கு அடிபனிகிறது. அடுத்தடுத்து மளமளவென சரசுவதி, சாம்னா, கோக்ரம், அன்சி ஆகிய அரசுகள் கோரிப்படைகளிடம் தோற்கின்றன. 1194ஆம் ஆண்டு தில்லியின் மீது நடந்த தாக்குதலில் தில்லி வீழ்கிறது. தொடர்ந்து தில்லியில் முதல் சுல்தானிய அரசு நிறுவப்படுகிறது.
1206 தில்லியின் முதல் வெளியின வம்சம், அதாவது அடிமை வம்சம் ஆட்சிக்கு வருகிறது. இப்போது வட இந்தியாவின் பிரதேசங்கள் பலவும் சுல்தானிய ஆட்சிக்கு உட்படுகின்றன. தொடரந்து 1290 ஆண்டுவாக்கில் கில்ஜி வம்சம் ஆட்சிக்கு வருகிறது. இப்போது தில்லியின் பிடியில் சிந்து கங்கை சமவெளிப்பகுதிகள் (சிந்து முதல் வங்கம் வரை) முழுதாக கட்டுப்படுகின்றன.
இப்போது தில்லி வீழ்ந்து சரியாக நூறாவது ஆண்டு. 1306. அலாவுதீன் கில்ஜி தில்லியின் அரியனையில். மாலிக் கபூர் என்ற படைத்தலைவனிடம் தக்கான இந்து அரசுகளை தில்லிக்கு கப்பம் கட்ட வைக்கும் பணியை குடுக்கிறார். தக்கான படையெடுப்பு துவங்குகிறது. தேவகிரி, வாரங்கள், ஆலபீடம் என வரிசையாக தலைநகர்கள் வீழ்கின்றன. காக்காத்தியர்கள், ஒய்சாலர்கள் என பழமைவாய்ந்த அரசுகள் வீழ்கின்றன.
தமிழகத்துக்குள் 1311ஆம் ஆண்டு மாலிக் கபூரின் படைகள் நுழைகின்றன. தமிழக வரலாற்றில் முதல்முறையாக விந்திய மலைகளுக்கு வடக்கிலிருந்து வந்த படை ஒன்று நுழைகிறது. திருச்சிக்குத் தெற்கே நடந்த போரில் பாண்டிய படைகள் தோற்க சுந்திரபாண்டியன் கைது செய்யப்படுகிறார். மதுரை முற்றுகை தொடங்குகிறது. வீரபாண்டியரின் படைகள் தாக்குப்பிடித்து திருப்பி அடிக்கின்றன. முடிவில் மாலிக் கபூர் பெரும் பொன்னும் பொருளும் ஈடாக பெற்றுக்கொண்டு சுந்திரபாண்டியரை விடுவிக்கிறார். இதற்கடுத்து மீண்டும் இருமுறை தமிழகத்துக்குள் வந்த முகமதிய படைகள் மதுரையைக் கைப்பற்றுகின்றன. 1333 ஆம் ஆண்டு (அதாவது தில்லி வீழ்ந்து சரியாக 140 வருடங்களில்) மதுரையில் சுல்தானிய அரசு நிறுவப்படுகிறது. பாரதம் முழுவதும் கைப்பற்ற அவர்களுக்கு 140 ஆண்டுகளே பிடித்தன.
இது ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்ததாக தோன்றலாம். ஆனால் இன்றைய நிலையும் அதுவே. இந்தியா சிதற வேண்டும், சிதறிய ஒருவருடத்தில் பாகிஸ்தானிய சீன கூட்டுப்படைகள் குமரி முனையில் தங்கள் கொடியேற்றியிருப்பார்கள். ஒன்றுபட்ட பாரதம் தான் இங்கு இருக்கும் எல்லா இனக்குழுக்களுக்கும் வேலி. அதை உடைக்க நினைப்பது நம் தலையில் நாமே மண்ணள்ளிப்போடுவதற்கு சமம். நமது தேவைகளையும் இலக்குகளையும் மக்களாட்சி வழங்கும் தேர்தல் எனும் மாபெரும் போர்க்களத்தில் மோதி பெறவேண்டும். அதைவிட்டு, இந்தியா உடைய வேண்டும் என்று கூப்பாடு போடுவது அறிவீனமானது. ஒன்றுபட்ட பாரதத்திற்குள் நமது காரியங்களைச் சாதிக்கும் வல்லமையை நமக்கு பொருளாதார பலமும் நம்மினத்தவர்களுக்குள் ஒற்றுமையும் தரும். நமக்குத் தேவையானதை, எல்லாருக்கும் லாபமானதை நாம் நமது செல்வாக்கினை வைத்தும், தந்திரங்களைக் கையாள்வதன் மூலமும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒன்றுமட்டும் உறுதி. ராசேந்திரச் சோழன் வடக்கே படையெடுத்தபோது கிழக்காக திரும்பி வங்கத்திற்குச் செல்லாமல் மேற்கே திரும்பி சிந்துவெளிக்குப் போய் அராபியர்களையும் துருக்கர்களையும் வீழ்த்தி, ஆப்கானித்தானத்திலிருந்தும் அவர்களைத் துரத்தியிருந்தால் வரலாறு இன்று வேறாக இருந்திருக்கும். அன்று துருக்கர் அராபியர் ஆகிய மேற்காசிய வல்லரசுகளை வீழ்த்தும் பலமும் வளமும் தமிழனுக்கு மட்டுமே இருந்தது. இன்று, பாரதத்தை வீழ்த்த சூழ்ந்திருக்ககும் சூழ்ச்சிகளைக் கருவறுக்கும் சூது தமிழனுக்கு வேண்டும். நம்மிடம் இல்லாதது சூதுதான் என்று நண்பர் ஒருவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

No comments:
Post a Comment