இன்றோடு யுத்தம் ஆரம்பித்து 80 நாட்களாகின்றன. இப்போது ரசிய உக்ரைன் போர் முக்கியக்கட்டத்தில் இருக்கிறது. கிழக்கு உக்ரைனில் செவர்ஸ்க்கி-டோனெட்ஸ்க் ஆற்றை ஒட்டி யுத்தம் நடந்து வருகிறது. இந்த ஆறு ரசியாவின் பெல்கோரோட் மாகாணத்தில் உருவாகி உக்ரைனின் கார்கோவ் மாகாணத்தில் கார்கோவ் நகருக்கு கிழக்காக நுழைகிறது. தொடந்ந்து தெற்காகப் பாய்ந்து இஜியும் நகரில் தென்கிழக்காகத் திரும்புகிறது. தொடர்ந்து தென்கிழக்காகப் பாய்ந்து செவரோடோணட்ஸ்க் நகருக்கு வடக்காக ரூபிஸ்னே நகருக்கு அடுத்து தெற்காகத் திரும்பி மீண்டும் செவரோடோனட்ஸ்க் நகரைத் தாண்டி தென்கிழக்காகத் திரும்புகிறது. இதில் கிழக்கு மற்றும் வடக்குக் கரைகளில் ரசியப் படைகளும் தெற்கு மற்றும் மேற்குக் கரைகளில் உக்ரைனியப்படைகளும் உள்ளனர்.
முதல் படம்: கிழக்கு உக்ரைனின் வடக்கு வடகிழக்கு முன்களம்.
இந்த ஆற்றைக் கடந்து உக்ரைனிய நிலைகளைப் பிடிக்கும் யுத்தத்தை ரசியா நடத்தி வருகிறது. இந்த ஆற்றைக் கடந்தால்தான் ரசியர்களால் லூகாங்ஸ்க் மற்றும் டோணட்ஸ்க் மாகாணங்களைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும்.
இரண்டாம் படம்: செவர்ஸ்க்கி டோனட்ஸ் ஆறு.
இந்த யுத்தகளத்தின் முக்கிய சண்டை இஜியும் நகரைப் பிடிக்க நடத்தப்பட்டது. இந்த நகரம் கிழக்கு உக்ரைனின் குறிப்பாக லூகாங்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் மாகாணங்களைப் பிடிப்பதற்கு வியூக முக்கியத்துவம் வாய்ந்த நகரம் இது. இந்த நகருக்குள்ளாகப் பாயும் செவரோடோனட்ஸ்க் ஆற்றின் மேலே பாலங்கள் இருக்கின்றன. வடக்கே கார்கோவ் நகரை முற்றுகையிட்ட ரசியர்கள், அங்கு ஒரு முக்கிய உக்ரைனியப் படையைத் தடுத்து வைத்திருந்தனர், இதோடு செவரோடோணட்ஸ்க் நகரையும் முற்றுகையிட்டிருக்கிறது ரசியப்படை. இப்படி முற்றுகைகளைத் தொடர்ந்துகொண்டே கீவ் மற்றும் சுமி மாகாணங்களிலிருந்த படைகளைத் திரும்பப்பெற்று அவர்களை லூகாங்ஸ்க் மாகாணத்திற்குள் அனுப்பி வந்தனர். புதிதாக லூகாங்ஸ்க் மாகாணத்திற்கும் வந்த படைகள் நேராக இஜியும் நகரை முற்றுகையிட்டு பிடித்தும் விட்டனர். இங்கிருந்து மேற்கு மற்றும் தெற்காகத் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே கார்கோவ் நகரைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த படைகளை விலக்கிக்கொள்ளத் துவங்கினர். இந்த நகர்வுகள் வழியாக இஜியும் நகரை உக்ரைனியத் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொண்டே உக்ரைனிய முன்களத்தை சிதறச் செய்துவருகின்றனர்.
இஜியும் நகருக்கு
கிழக்காக முன்னறிய ரசியப் படைகள் ஓஸ்கில் அணைக்கட்டில் வைத்து ஒரு உக்ரைனியப்
படையைணியைச் சுற்றிவளைத்து வைத்துள்ளனர். இன்னும் கிழக்காக பல இடங்களில் செவர்ஸ்க்கி
ஆற்றைக் கடக்க தற்காலிகப் பாலங்களை அமைத்து கடக்கு முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதில் ஒரு தற்காலிகப் பாலத்தை ஒட்டி உக்ரைனியர்களின் பீரங்கித் தாக்குதலில் பல
ரசிய கவச வாகனங்கள் அழிக்கப்பட்ட செய்திகள் வந்தன. அந்த கடக்கும் பகுதியை உக்ரைனியர்களும்
பின்வாங்கும் போது பயன்படுத்தியதும் அதை ரசியர்கள் தாக்கி உக்ரைனியர்களின் வாகனங்களை
அழித்ததும் படங்களை ஆராய்ந்து பார்த்து வல்லுநர்கள் உறுதிப்படுத்திவருகின்றனர்.
இந்த கடக்கும்
முயற்சி வெற்றியடைந்தால் ரசியர்களால் செவரோடோனட்ஸ்க் நகருக்கு வரும் உக்ரைனியப்
படைகளின் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி அந்த நகரத்தை சுற்றிவளைக்க முடியும்.
அந்த நகரின் வடக்காக ரூபிஸ்னே நகரம் முற்றாகப் பிடிக்கப்பட்டுள்ளது. நமது பவானி
குமாரபாளையம் நகரங்களைப் போல ஒரு சிறு ஆற்றின் இருகரைகளில் அமைந்திருக்கும்
நகரங்கள் இவை. ரூபிஸ்னே நகரிலிருந்து பின்வாங்கிய உக்ரைனியர்கள் அந்த ஆற்றின்
மேலிருக்கும் பாலங்களைத் தகர்த்துவிட்டிருக்கின்றனர். இப்போதைக்கு செவரோடோனட்ஸ்க்
நகரம் உக்ரைனோடு செவர்ஸ்க்கி ஆற்றின் மேலிருக்கும் ஒரே பாலத்தின் வழியேதான் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த நகரை ஒட்டி அமைந்துள்ள மேலும் இரு பாலங்கள் ரசியர்களின் பீரங்கிகளின் வீச்சு
வரம்புக்குள் இருப்பதால் அந்த வழியாகப் போக்குவரத்துக்கு வாய்ப்பில்லை.
செவரோடோனட்ஸ்க் நகருக்கு தெற்காக முன்களத்தில் அமைந்திருக்கும் போபாஸ்னா நகரம் ரசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நகரம் சுற்றியிருக்கும் பகுதிகளிலிருந்து உயரமாக அமைந்திருப்பதால் இந்த நகரிலிருந்து ரசிய பீரங்கிகளால் துள்ளியமாக் குறிவைக்கமுடியும். அதோடு இந்நகருக்கு வடக்காகத் தான் செவரோடோனட்ஸ்க் நகருக்கான முக்கிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. செவரோடோனட்ஸ்க் நகரைப் பிடிப்பதற்காக ரசியர்கள் சுற்றிவளைத்து தாக்கி வருவது தெளிவாகத் தெரிகிறது.
நான்காம் படம் செவரோடோனட்ஸ்க் முனை.
இதே போன்ற
முன்னகர்வுகளால் தான் சோவியத் படைகள் இந்த பகுதியிலிருந்து நாஜிப்படைகளைத்
தோற்கடித்தது. இந்த செவர்ஸ்கி டோனட்ஸ் ஆறு இயற்கையான அரண். இஜியும் நகரைத்தான் தனது ஆற்றைக்
கடக்கும் முனையாக் கொண்டு கார்கோவ் நகரைப் பிடிப்பதற்கான யுத்தங்களை சோவியத்
நடத்தியது. வரலாறு 80 ஆண்டுகள் கழித்து திரும்புவது ஆச்சர்யப்படுத்துகிறது!
ஐந்தாம் படம்: முறியடிக்கப்பட்ட ஆற்றைக் கடக்கும் முயற்சி. அழிக்கப்பட்ட கவச வாகனங்கள்.
பீரங்கித்தாக்குதலிலிருந்து தங்களது தகரிகளைப் (டாங்கிகளுக்கு ஈழத்தமிழர்கள் வைத்த பெயராம்) பாதுகாக்க ஆற்றில் இறக்கி மறைத்து வைத்திருக்கும் ரசியர்கள். தகரிகளின் உட்புறம் நீர் புகா வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. உள்ளெரியுந்துக்கான (எஞ்சின்) காற்றோட்டத்துக்கு நீரடிக் காற்றுவழங்கி அமைப்புகள் (Snorkel) இருக்கின்றனவாம். அந்தத் தகரிகளின் குண்டுவீச்சுக் குழாய்கள் தண்ணீருக்கு வெளியே துருத்திக்கொண்டிருப்பதைப் படத்தில் பார்க்கலாம்.
ஆறாம் படம்: மறைவாக இருப்பதற்காக ஆற்றில் இறக்கப்பட்டிருக்கும் தகரிகள் (டாங்கிகள்). மேலே தூக்கப்பட்டிருக்கும் குண்டுவீச்சுக் குழாய்கள்.
தெற்காக ஒடஸ்ஸாவின் கரையில் அமைந்திருக்கும் பாம்புத் தீவைப் பிடிக்க உக்ரைனியர்கள்
முயன்றதும் அந்த முயற்சியில் ரசியர்களின் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி சில
விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் கட்டிடங்களை ஆளில்லா விமானங்களையும் போர் விமானங்களையும்
வைத்தும் தாக்கியதும் மே மாத்தின் முதல் வாரத்தில் நடந்தது. மே 9 வெற்றி நாளன்று
ரசியர்களுக்கு ஒரு அதிர்ச்சியைத் தருவதற்காக இந்த தாக்குதலை பிரிட்டன் வல்லுநர்களின்
வழிகாட்டுதலில் உக்ரைனியர்கள் நடத்தியதாகத் தெரியவருகிறது. உக்ரைனியர்கள்
தாக்குதலை அதிகரித்ததும் அங்கிருந்து பின்வாங்குவது போல நடித்து உக்ரைனியப் படைகளை
வரவைத்து தாக்கி அழித்துள்ளனர். ரசியர்களின் நிலைகளைத் தாக்கிய வீடியோக்களை மே
முதல் வாரம் முழுவதும் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். அப்போது அமைதியாக உக்ரைனியர்களின் ஆளில்லா
விமானங்களையும் விமானங்களையும் அழித்ததாக அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டு
வந்தனர். இப்போது அந்தத் தீவு ரசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது
என்பது உறுதியாகியிருக்கிறது. இந்தத்தீவை மே 9க்குள் பிடிக்கவேண்டும் என்ற
முட்டாள்தனமான முயற்சிக்கு பல உக்ரைனியர்கள் உயிரிழந்திருப்பது இப்போது
தெரியவருகிறது. பிரிட்டன் இராணுவ வல்லுநர்களின்
அறிவுரையை அப்படியே செயல்படுத்த உத்தரவிட்டது ஜெலன்ஸ்க்கியாம்.