Tuesday, 22 April 2014

3-D printing எனும் அற்புத விளக்கு..

அலாவுதீனின் அற்புத விளக்கிளிருந்து வெளிவரும் பூதம் கேட்பதையெல்லாம் கொடுக்குமாம் - நாம் திரையில் பார்த்த கதைகளில் படித்த பழங்கதை...

மணிதன் புதிதாக (மேற்குலகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதில் கவணம் செலுத்தி வருகிறது) கண்டடைந்திருக்கும் அலாவுதீன் பூதம் தான்,

3D printing (இனி, உயிர் வடிவ அச்சாக்கி.. வேறு தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) தொழில்நுட்பம்... நாம் வேண்டிய பொருளை நாம் வேண்டும் வடிவத்தில் உருவாக்கிட உதவும்...

அதனோடு Artificial Intelligence (தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) சேரும் பொழுது, மணிதன் படைப்பின் உச்சங்களைத் தொட்டிருப்பான்...

இத்தொழில்நுட்பங்கள் முதிர்வடைந்து, அவற்றின் விலை குறையும் பொழுது தொழிற்சாலைகளின் தேவை அற்றுப் போய்விடும்... நாம் தேவையான மூலப்பொருள்களை வாங்கி நமக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் பெற்றிருப்போம்... அதோடு, தொழில் முனைவர்களுக்கு தேவையற்ற அளவில் பொருட்களை உற்பத்தி செய்வதையும், உற்பத்தி செய்ததை சேமிக்க வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்துவிடும்...

யோசித்துப் பாருங்கள்,

உதாரணம் 1)

இப்பொழுது ஒரு வீடு மாற்றும் பொழுது எத்துணைப் பொருட்களைச் சுமந்து அழைய வேண்டிசயள்ளது? எதிர்காலத்தில் நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பொக்கிசங்களையும் ஒரேயொரு உயிர் வடிவ அச்சாக்கியையும் மட்டும் நம் மகிழுந்தில் எடுத்துப் போட்டுக் கொண்டு, உலகின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியேறலாம்... பின் நமக்குத் தேயைான பொருட்களையும் இயந்திரங்களையும் நாமே உறுவாக்கிக் கொள்ளலாம்...

உதாரணம் 2)

ஒரு மிதிவண்டி அல்லது வாகன பிழை நீக்குநர் (repair mechanic - சரியான தமிழ் பதம் தெரிந்து சொல்வோருக்கு முன்வைப்பாக நன்றி), ஒரு உதிரிபாகத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தேவைப்படும் பாகத்தின் வரைபடத்தை உற்பத்தியாளரின் websiteலிருந்து (தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) தரவிறக்கம் செய்து தாங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம்...

உதாரணம் 3)

ஒரு மருத்துவமணையில் அவசரமாகத் தேவைப்படும் பொருட்களுக்கோ இயந்திரங்களுக்காகவோ எந்தவொரு உயிரும் பலியாகத் தேவையில்லை எனும் நிலை வந்துவிடும். உறுப்பு மாற்று அறுவை சகிச்சைகளுக்கான உறுப்பு தாணம் தருவோரை தேடி அழையத் தேவையில்லை...

உதாரணம் 4)

யுத்தகளத்திலிருக்கும் வீரர்கள் தோட்டாவோ அல்லது உதறிபாகங்களோ முடிவதைக் கண்டுகொள்ள வேண்டிய தேவையற்றுப் போகும். களத்தின் சூழ்நிலைக்கும் தேவைக்கும் தகுந்த ஆயுதங்களையும் உற்பத்தி செய்துகொள்ளும் நிலை வந்திருக்கும்.

உதாரணம் 5) இது தான் ஆபத்தானது,

தீவிரவாதிகள் வெடிபொருட்களையோ, ஆயுதங்களையோ தூக்கிச் செல்லும் தேவையிருக்காது.. மாற்றாக, தாங்கள் அழிக்க நிணைக்கும் இடத்திலேயே ஒரு உயிர் வடிவ அச்சாக்கியை திருடினால் போதும்... மேற்கொண்டு நடக்கவிருப்பதைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை...

உதாரணம் 6)

தேவையான சில்லரையை அச்செடுத்துக் கொள்ளலாம்... இனி எல்லா பேருந்து நடத்துனர்களும் தங்கள் தோளில் ஒரு உயிர் வடிவ அச்சாக்கியை மாட்டிக் கொண்டு நமக்கு சரியான சில்லரை வழங்குவார்!!!

நமது அரசாங்கம் இப்பொழுதே தேவையான வழிகாட்டு சட்ட வரைவுகளை உருவாக்கிட முனைய வேண்டும்...

மோலும் படித்தும் பார்த்தும் பயன் பெறுங்கள்,

http://www.sciencedaily.com/releases/2013/07/130729144622.htm

http://www.sciencedaily.com/releases/2011/11/111129185923.htm

https://www.youtube.com/watch?v=pQHnMj6dxj4

https://www.youtube.com/watch?v=G0EJmBoLq-g

http://en.wikipedia.org/wiki/3D_printing

http://www.explainingthefuture.com/3dprinting.html

http://mashable.com/category/3d-printing/

தமிழில் காதலிப்போம்...

தமிழில் காதலிப்போம்...

என்னுயிர்த் தோழி, உன்னை முதலில் பார்த்தவுடனே என்னுள் ஓர் அழகிய உனர்வு... ஏதென்று யோசித்த பொழுதெல்லாம் நீயென்றே புரிந்தது...


எவ்வளவோ நாளாக உன்னிடம் சொல்ல முடியாமல் தவித்து, உன்னோடு கனவிலே வாழ்ந்து வந்தேன் ... அது ஒரு அழகான வாழ்க்கை... இவ்வளவு நாளாக உன்னை விட்டு நான் மட்டும் அந்த அழகையெல்லாம் தனியாக அனுபவித்து சுயநலமாக வாழ்ந்துவிட்டேன்...

போதும், சொல்லிவிடுகிறேன்,

உன்னை நான் காதல் செய்கிறேன்...

என்னோடு நீ சேர்ந்து நாமாக நாம் வாழ வருவாயா???

உன்னை உயிரில் வைத்து நேசிக்கும், காதலன்!!!

என்னுளுதித்த அருமையான வாழ்வியல் கருத்து...

Many times in my life I have failed... when other persons declared me a failed case in their perspective and in their metrics... 
Few times in my life I have failed... those failures were when i let myslf down...
Few times in my life I have won, when somebody declared I have won, because they found me meeting their expectations and scoring better in their metrics...
Many times in my life I have won, when I surpassed my own expectations and benchmarks...

Still I keep loosing and winning...
I dont cry when I fail, yet I do cry when I fail myself...
I dont smile when I win, yet i do take celebrate my own victories...

காக்கை நோக்கறியும், கொக்கு டப்பறியும் - தமிழர் பறவையியல்

நாம் சிரித்துவிடும் சில சொற்றொடர்கள், ஆழ்ந்து கவனித்தால் அவை நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவின் தொகுப்புகள் அவையென புரியும்...

எடுத்துக் காட்டாக,

நம்மவர்களின் பறவையியலை பறைசாற்றும் ஒரு தொடர்..

"காக்கை நோக்கறியும், கொக்கு டப்பறியும்"

காக்கையை நாம் பார்த்தாலே போதும், அது பறந்துவிடும்... அவ்வளவு உன்னிப்பாக தன் சுற்றுப்புறத்தை தன் கருத்தில் வைத்திருக்கும்... 

கொக்கு தான் கொண்ட வேலையில் முழுக் கருத்தையும் வைத்து தானிருக்கும் சூழலை மறந்துவிடும்...

இது எவ்வளவு ஆழ்ந்த கவணிப்பில் பிறந்த சொற்றொடர்...

இந்தியப் பறவையியலின் பொற்க்காலம் ஜகாங்கிரின் ஆட்சி என்றொரு கருத்து நிலவுகிறது... ஆனால் தமிழனின் அறிவு அதற்க்கும் மூத்தது, நாம் நம்முடைய தாழ்வுணர்ச்சியை கைவிட்டு தமிழை ஆய்வு செய்து கண்டுணர வேண்டியது கடலளவு இருக்கிறது...

Germans and the World war II

The greatest irony of world war 2 is, three of the greatest american generals of the war, general Dwight Eisenhover, admiral Nimitz and Marshall Carl "Tooey" Spatz are Americans of German origin!!!

When Germans of Germany were all mouths "heil Hitler", Germans of the USA would apparently said "Hell to Hitler"... 

And Einstein just helped the americans with Nukes!!! 

Poor Hitler!!!

Nirranj

வருமுன் காத்தலின் அவசியம்

நாம் வருமுன் காத்தலின் அவசியத்தை மறந்து போனோமா???

சில நாட்களுக்கு முன் ஒரு இளம்பெண் மும்பை நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் கற்பழிக்கப் படுகிறார்...

சீனாவின் அபரிமித வளர்ச்சியும் அமரிக்காவையே எதிர்க்கத் துனியும் அதன் தன்னம்பிக்கையும் நமக்கு இருபதாண்டுகள் மெதுவாக உறைத்ததன் காரனமாக இன்று அவசர அவசரமாக நமது எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியும், புதிய மற்றும் திறன்மிகு ஆயுதங்களையும் வாங்கியும் அவர்களுக்கும் நமக்குமான படைத்திறன் இடைவெளியை இட்டு நிரப்ப முயன்று கொண்டிருக்கிறோம்...

மேற்சொன்ன இரு சம்பவங்களும் நமக்கு புதிதாக நடைபெற்ற விசயங்கள் கிடையாது... கடந்தாண்டு டில்லியில் நடந்த கற்ப்பழிப்பு சம்பவம், ஒதுக்குப்புறமான இடங்களில் பெண்களுக்கு உள்ள பாதுகாபின்மையை முகத்திலறைந்து சொன்னது...
1962 ஆம் வருடம் வடயெல்லையில் சீனா அத்துமீறிய போதும், 1998 கார்கிலில் நிகழ்ந்த பாகிஸ்தானிய அத்துமீறலின் போதும், 2001ல் பாராளுமன்றம் தாக்கப் பட்ட பின் நமது படைகளை எல்லையில் கொண்டு சேர்க்க (operation parakram) நாம் திண்டாடியதும் நமக்கான பாடங்களை கற்றுக்கொடுத்தன..

ஆனால் இவற்றிலிருந்து நாம் ஏதும் பாடம் படித்ததாகவோ, அல்லது நமது நிலைத்துவிட்ட வந்தால் பார்த்துக்கொள்வோம் என்ற மன நிலையில் மாற்றம் வந்ததாகவோ தெரியவில்லை...

வங்கக்கடல் சுனாமியோ, ஒடிஷாவை வருடம் தவராமல் புரட்டிபோடும் சூறாவளியோ, பிகாரிலும் அசாமிலும் வருடம் தவராமல் கரையுடைத்து மக்களின் வாழ்வருக்கும் ஆறுகளின் சீற்றமோ நமக்கு உத்திராகண்டின் சூழல் சமனிலையின் இன்றியமையாத் தேவயை உணர்த்தவில்லை, அங்கு வரம்பிர்க்குள் வைக்கப்பட்டிருக்க வேண்ன்டிய கட்டமைப்புகளின் அவசியத்தையும் உனர்த்தவில்லை...

கருநாடகத்திடம் தன்னீருக்காக சட்டப் போராட்டம் நடத்தும் நாமேதான் உபரியாக வந்த நீரை சில நாட்களுக்கு முன் கடலில் வீணாக்கினோம்...

பண்டிகை நாட்களில் பேருந்துகளுக்கான தேவை, பருவமழை பொய்த்தால் வரும் பஞ்ச காலத்திற்கான உணவுதானிய தேவை, பாதுகாப்பற்ற மாணவர் போக்குவரத்து, மழைக்காலங்களில் சகதியாகும் நகரங்கள், ஆளில்லா ரயில்-சாலைச் சந்திப்புகளில் நிகழும் மரணங்கள் என பட்டியல் நீள்கிறது...

நாம் நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டிய இந்த இன்றியமையாக் குனத்தின் தேவைகளையும், செய்யவேண்டிய, மாற்றவேண்டிய எதைப்பற்றியும் சொல்லாடுவோம்...


-Nirranj

பெண்களுக்கு அடக்கம் வேண்டும் :)

பெண்களின் அடக்கத்தில் தான் ஒரு குடும்பத்தின், சமுதாயத்தின் கவுரவம் கட்டப்பட்டிருக்கிறதா?? 
பெண் என்பவள் என்று ஒரு சக மனிதராக, தனக்கென ஒரு வாழ்வியல் சுதந்திரம் கொண்ட மனிதராக வாழ முடிகிறதோ, அப்பொழுது தான் ஒரு சமுதாயம் உண்மையில் முன்னேறும் சமுதாயமாக மாறும்...

ஒருகாலத்தில் பெண்கள் வெளியில் வேலைக்குப் போவதே ஒரு பெரும் எல்லை மீறலாக இருந்தது.. ஆனால் இன்று பல துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்...

நான் சம்பாதிப்பதைப் பற்றிப் பேசும் பொழுது, பெண்களை சம்பாதிக்க அனுப்பும் நாம், அவர்களின் பணம் வேண்டும் என்று நினைக்கும் நாம், ஏன் அவர்களின் சுய சிந்தனை என்று வரும் பொழுது மட்டும், ஏதோ ஒரு மிகப்பெரும் பாவச் செயலை அவர்கள் செய்வதாகப் பதறுகிறோம்???

அவர்கள் புகைபிடித்தால் உடனே அதை புகைப்படம் எடுத்து, அந்த படத்திர்க்கு "குடும்பக் குத்துவிலக்குகள்" என்று தலைப்பிட்டு அதை பகிர்ந்துகொள்கிறோம்... அதே ரஜினி ஒரு படத்தில் சுருட்டை தூக்கி வீசி நிபுணமாக வாயில் கவ்வினால் அதைக் கைதட்டி கொண்டாடுகிறோம்...

பெண்கள் தன்னியடித்தால் அவ்வளவுதான்...
பெண்கள் சில பசங்களுடன் சிரித்துப் பேசினால்?? அவ்வளவுதான், சொல்லப்படும் வார்த்தைகளை அச்சிலேற்ற முடியாது...

ஒரு ஆண் திருமனம் செய்ய மறுத்தாலோ அல்லது தான் கொண்ட ஏதேனும் கடமையை முடிக்க வேண்டி சில காலம் திருமனம் வேண்டாம் என்றாலோ அதை மெச்சிக் கொண்டாடும் நாம், ஏனொரு பெண் திருமனத்தை வேண்டாம் என்றாலோ, அல்லது சில காலம் அவகாசம் கேட்டாலோ உடனே, அவர்களுக்கு ஆயிரம் உபதேசங்களைக் கொட்டிக் குடுக்கிறோம்???

அதென்ன பெண்கள் திருமனத்திற்க்குப் பிறகு ஆண்களுக்கு சமையல்காரிகளா?? அவர்கள் வேலைக்குப் போனால், உடனே கனவன் பட்டினி கிடப்பதாகவும், இவர்கள் ஏதோ ஊர் சுற்றுவதாகவும் கற்பனைகள் குதிரையேறி விடும்... அதில் ஆண்களுக்கு பிரச்சினை வருகிறதோ இல்லையோ, அவனது அம்மாவுக்கோ, சகோதரிகளுக்கோ ஆயிரம் பிரச்சினைகள் வந்து விடுகிறது???

ஒரு வீட்டில் ஒரு பெண்ணின் விருப்பத்திற்க்கு அவளைப் போன்ற இன்னொரு பெண் துனை நின்றாலே, பாதித் தொல்லை முடிந்துவிடும். ஆனால் பெண்களுக்குள் என்னதான் பிரச்சினை என்று எனக்கும் தெரியவில்லை, பல நேரங்களில் பெண்களுக்குகும் புரட்சிக்கும் குறுக்கே இன்னொரு பெண் தான் நிற்பதாக நான் நினைக்கிறேன்...

ஒபாமாவின் பல்லைத்தட்டிய பிரமோஸ் ஏவுகணை!!!

செய்தி : அமெரிக்கா ஒலியை விட 3 மடங்கு வேகமாக சென்று துல்லிய்மாக இலக்கைத் தாக்கும் எவுகனையை உருவாக முயற்ச்சிக்கிறது..

ஒபாமா மன்மோகனிடம்,

"என்ன மேன்மோகன், அமெரிக்கா வரைக்கும் வந்துட்டீங்க, அப்படியே எங்க ஏவுகனை ஒரு ரெண்ட வாங்கிட்டுப் போங்களேன்!!! பாகிஸ்தான்ல நவாஸ் சரீப்போட கட்டிலத் தூக்க சொன்னாக்கூட தூக்கிரும்" !!

மன்மோகன், 

ஓ அப்படியா, நேத்து ஏதோ உங்க பல்செட் காணாமப் போயிருச்சுனு சொன்னீங்களே என்னாச்சு???

ஒபாமா,

அட ஆமாங்க.. காலைல வழக்கம் போல எழுந்து பல் செட்டக் கழட்டி நல்லா தேச்சுக் கழுவி தொடைச்சி வாயில மாட்டுனேன். அப்படியே பளீச்சுனு இருக்கானு பாக்க வாய தொறந்தேன், அப்ப ஒரு நொடி கண்ண மூடித் தொறந்தேன் பாருங்க, என்ன ஆச்சரியம்!! பல்செட்டக் காணோம்!! நான் அப்படியே சாக் ஆகிட்டேன்!!

மன்மோகன் தான் கொண்டு வந்த பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு பல் செட்டை காட்டுகிறார்,

ஒபாமா,

அட!! இது என்னோடது மாதிரியில இருக்கு!?!?!?

மன்மோகன்,

உங்களுது தான், எங்க பிரமோஸ் கிட்ட உங்க பல் செட்ட தூக்க சொன்னோம், தூக்கிடுச்சு!!!

ஒபாமா : $%£$%!!????/\\/©®¥¥¥²®²³©

மன்மோகன் : எங்க கிட்டயேவா!!

-Nirranj

The optimist and the pessimist - India's attitude towards Pakistan..

As far as India-Pakistan relations are concerned, We exhibit a dual attitude. One that of a optimist and the other that of a pessimist.

The optimist,

We think that one day Pakistan will take a U-turn and will become a more responsible state, a state that sees India as a progressive neighbor and a partner with common background. This optimist was responsible for surrendering those glorious opportunities we had to change Pakistan. opportunities including the victory in 1971 war, Kargil incident, the parliament attack and even the arresting of Ajmal Kasab, or those many incidents whe their BAT's cross the border and assault our patrols (the recent beheading of our soldiers). Many of our leaders from Nehru, Sashtri, Indira, Vajpayee and recently MMS, let the hard earned opportunities to go off.. they always thought that India is a peace loving nation, and always thought that Our positive action will one day strike the otherwise clever Pakistani heart... I use clever, because, they think what possibly could give them a break to recuperate and hit India again.

The pessimist,

We many time think that we cannot afford to strike Pakistan, with either vengeance or either with the right obligation ensured by justice. We think that either we are not capable of hitting back, or we think that the world "may" brand us as a aggressor. But the world respects the state which attacks to save its sovereignty, eg., the Israel. We tend to under estimate our strengths and always uphold our weaknesses... we think that our army is solely for defense and we should never cross our borders as invaders... we are living in some difficult situations, which is even demanding the Japanese to revisit their military doctrine to defend a bunch of rocks in the pacific... And we also think that with our growing might we should act "responsibly" in our neighborhood, even when others constantly bully us... from pakistan to Srilanka, our neighbors think they can over run India if they strike at the right time.. Yet the pessimist in us will bind us from even using strong words, fearing that the neighbor may turn into a foe, when they are betrayers already...

High time to change our attitude or we may well end up the rubble, which is what our neighbors are striving to make us.

Nirranj

தயான் சந்த்திற்கு பாரத ரத்னா வழங்கவேண்டும்






இவர் அங்கம் வகித்த இந்திய வளை மட்டைப் பந்தாட்ட அணியை எதிர் கொள்ள துனிவில்லாமல் பிரட்டன் அணி 1948 வரை (இந்தியா சுதந்திரம் அடையும் வரை) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேர்கவில்லை. தனது காலனி நாட்டிடம் தோற்ப்பது அவமானம் என்று அவர்கள் நினைத்தார்கள்..

இட்லருக்கு சிம்மசொப்பனமாக இருந்த பிரிட்டனுக்கு சிம்மசொப்பனமாக இருந்த அணி இவர் அங்கம் வகித்த இந்திய அணி..

நாசிக்களின் ஜெருமானிய வளை மட்டைப் பந்தாட்ட அணியிடம் 1936ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் நடந்த பயிர்ச்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றது. அந்த ஒலிம்பிக்கின் முத்தாய்ப்பாக இறுதிப் போட்டியில் இந்திய ஜெருமானிய அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன் இந்தய வீரர்கள் கலக்கத்தில் இருந்தார்கள். நம்மவர்களோ இங்கிலாந்தின் அடிமைகள். களத்தில் எதிர் நிற்கும் அணியோ தாங்கள் தான் உலகின் உயர்ந்த இனம் என்று மார்தட்டும் ஜெருமானியர்கள். போட்டி துவங்கும் முன், நமது வீரர்கள் இந்திய தேசிய காங்கிரசின் மூவர்ணக் கொடியை விரித்து அதற்கு வணக்கம் வைத்துவிட்டு களத்திற்குப் போகிறார்கள், ஜெருமானியர்களை 8-1 என்ற கணக்கில் பந்தாடுகிறார்கள். தங்கம் வெல்கிறார்கள்.
அந்த போட்டியைக் கற்பனை செய்து பாருங்கள்.

அதே 1936 ஒலிம்பிக்கில் இட்லரின் செல்லமான லஸ் லாங்கை நீளம் தாண்டுதலில் வீழ்த்தி ஜெஸ்ஸி ஒவன்சு வென்ற தங்கப் பதக்கத்தை அமரிக்கர்கள் தங்களது மாபெரும் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். நாமும் நமது பள்ளிக்காலத்தில் அதைப் படித்தோம். ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு பிரம்மாண்டமான வெற்றியை நமது வளைப் பந்தாட்ட அணி பெற்றது. அந்த அணியை வழிநடத்தியவர் "தயான் சந்த்"..

மேலும் ஹாட்ரிக் தங்கப் பதக்கங்களை இவர் அங்கம் வகித்த இந்திய அணி (1928-1936) வென்றதும் வரலாற்றில் பொன்னெழுத்தில் பதிக்கப் பட்ட சாதனை.. இவர்களுக்குப் பின் வந்த தலைமுறையும் ஒரு ஹாட்ரிக் தங்கப் பதக்கங்களை (1948-1956) வென்றது.


ஹாக்கி விளையாட்டை நமது கிரிக்கட் மோகத்திர்க்கு தொலைத்து விட்டோம்.. நமது கிரிக்கெட் மோகம் நமது வளை மட்டைப் பந்தாட்ட அணியை அதன் உச்சத்திலிருந்து அதல பாதாளத்திற்கு கொண்டுபோய் விட்டது.


தயான் சந்த் மற்றும் அவரது சகாக்கள் யாவரும் சச்சினுக்கு இனையான திறமை கொண்ட விளையாட்டு வீரர்கள்... அவர்களுக்கான கவுரவத்தை நாம் வழங்க வேண்டும்..

அப்போதுதான் நமது இளைய சமுதாயத்தை கிரிக்கட் மோகத்திலிருந்து மீட்கவும் மற்ற விளையாட்டுக்களை வளர்க்க வழிகோலமுடியும்.


வாழ்ந்துதான் பார்ப்போமே!!!

மனம் தளர்ந்திடும் நேரங்கள் மிகக் கொடுமையானவை.. அந்த நேரங்களில் நம்மை புரிந்துகொண்டவர்கள் யாராவது உடனிருப்பது நலம். மனம் தளரும் வேலையில் தனிமை மிக கொடுமையானது மற்றும் ஆபத்தானது... ஆனால் ஒருவர் தனிமையிலேயே தன்னைதானே சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி அந்த தாழ்வான நிலையை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என்பதை சிந்திக்க வேண்டும்... அப்படி சிந்தித்து செயல்படுபவர்களே உலகம் போற்றும் சாதனையாளர்களாக உருவாகிறார்கள்...

நான் தளர்வாக தாழ்வாக உணரும் போதெல்லாம் என் சிறுவயதில் என் அப்பா சொல்வது நினைவுக்கு வரும்... நான் தாழ்வாக உணரும் போதெல்லாம் அவர் சொல்வார், "இந்த உயிர் நிரந்தரம்னு நினைக்கிறியா? இல்லைல.. அடுத்த நிமிசம் இருப்போமானு தெரியாது.. ஆனா வாழ்ந்து பாக்கிறோம் தானே.. அதே மாதிரிதான் எந்த நிலமையும் நிரந்தரம் கிடையாது... நிலைமைய மாத்திக்க முயற்சி பண்ணு இல்ல நீ அதுக்கு தகுந்தா மாதிரி மாறிக்க..."

என்ன பெரிய நிலைமை?? வாழ்ந்துதான் பார்ப்போமே!!!

The perennial mismanagement of Kaveri basin

The torrential downpour we experience as a result of those cycle of low pressure belts over the Bay of Bengal and the resulting conventional rainfall over much of TN has brought a temporary relief over water bodies that were depleted and half full due to a below average "rainfall" that the South west monsoon brought with it. Though the water bodies are refilling as fast as they can during these torrential downpours, the question is still out on how are we going to fare during the next summer? what if the monsoon performs below average next time too?  

Summer is fast approaching and the States of the south will get ready for another round of tussle. The Dams water holdings are depleting faster and we are looking anxiously on how the governments are going to manage the situation when the temperatures soar and the thirst for water runs out of control. There is a persistent problem with regard to the Kavery Water sharing. The major problem is the public apathy towards the necessity of water conservation and the abuse of water bodies in all the States.

The amount of rainfall in Monsoons, if conserved in Dams, tanks and lakes will give enough water for the reminder of 8-9 months of dryness.

As of now some immoral and illegal encroaching of the water bodies in many areas of both the states has contributed to the increased demand of water from areas which are previously not dependent on Kavery.

I have two examples here,

The vanishing lakes of Bangalore. Bangalore was referred to as "Land of thousand lakes" (or some equivalent) by a British official in the 19th Century. But now many of the Lakes that dotted Bangalore area has vanished to the constant encroaching and abuse by constructors and Land mafia. And many of the Surviving Lakes are just serving as sewage drains as their natural tributaries and distributaries were all cut off and are now only fed by Rain water and Sewage. For Example one can go to the Varthur Lake near White field area and See how the Lake is breathing its last. The lake is serving the purpose of sewage drain and much of its surface is covered by water weeds. This lake should have been the Lifeline of Agriculture in and Around Varthur as well serving to the water needs of the White Field area. But now the Whitefield survives on Bore wells and a occasional Kavery Water.

Second, The Tamils of the past have had a great water conservation science. Often in the news we read about the Veeranam project supplying water to Chennai. This Lake was built by Chola emperors in the 10th Century AD and uses the Excess water flow in Kollidam (North Kavery) during the Monsoons and it provides irrigation for the majority of the year. Now this lake is silted and holds very less water than its actual capacity. This is one Lake on the Banks of Kavery. We need to build more and more Lakes and tanks to store the Excess flow during the monsoons. For example, For three continuous days in the monsoon period of 2008, the discharge from Mettur dam was peaking at 100000 Cusecs, this translates into 25 TMC of water. This could have been effectively stored in Tanks and Lakes.

Case of the Tributaries. The Bhavani river in the Kongu region of Tamil Nadu is one of the most extensively exploited river (Positively) As it serves for Irrigating the north western kongu region as a Whole and Serves water to Kavery Delta during the Dry seasons (Mostly to enhance the Ground water levels) and serves the needs of the municipalities in that region. The Mismanagement and Abuse of Noyyal River south of Bhavani, is pressurizing the Bhavani river system.

Noyyal River a perennial River in TN, is a perfect example of River Abuse and is a dead river already. The Garments industry in Tirupur and Coimbatore pollute the river with Dying effluents that has Killed the River. There is a Dam at Oraththupalayam in the Karur District of Tamil Nadu and this dam is completely filled with the Dying effluents of Tirupur. Now there is a ray of hope with the High court ruling on the operations of the Dying units, this has made it mandatory to have RO plants in the Dying factories and this has caused the temporary downfall of Tirupurs Garment industry and now only the plants with RO are operational. If Noyyal is restored, we can add more land under irrigation and can serve water to the Delta regions needs.

The drinking water requirements of the Municipalities and the Corporations of the Kongu region are dependent on the Bhavani River to a great extant. this cannot be over ruled. But we can implement Sewage water recycling in all the Municipalities and use the purified water for industrial usage or pump it into the rivers. This can save water and the water bodies from getting polluted and save the much needed water for future. There is a sewage river that flows out of Bangalore in to the Hosur region of TN. this pollutes the Ground water of the Krishnagiri district of TN. The sewage and industrial effluents pumped into Bhavani, Noyyal and Kavery pollute the Entire Kongu belt. We should not allow Sewage and Industrial effluents to flow into the Rivers and Lakes, Instead we should set up a network of sewage Water treatment plants across Bangalore, Tirupur, Coimbatore, Salem, Erode, Mysore, Tiruchi and pump the purified water into the rivers and lakes. This will help us to improve the Ground water levels of the River basin and serve for irrigating the downstream areas. Also this many sewage plants will be a great infra project to execute and will develop many new jobs and will help in achieving a all round growth.

I was born in Tirupur of Tamil Nadu and grew up in Tirupur, Gobi and Sathy, and had my education in Tirupur, Udumalai, Sathy, komarapalayam and Salem. Started my career in Coimbatore and is currently living and working in Bangalore.

I wish the Kavery river system should be taken up as National project for water conservation. If we can build Sewage treatment plants in all the municipalities and Corporations in the Kavery Basin, Build tanks and dig Lakes wherever geography and geology permits, build check dams to enhance the ground water of the Areas adjoining the river basin, Reclaim the polluted and destroyed water bodies, regulate buildings along the banks of the water bodies throughout the Kavery basin, reach to a constructive agreement of water sharing across the four states, promoting more economical irrigation practices deviating from the water intensive rice and Sugarcane farming to water saving which demands more water, we can once for all eliminate this problem and carry forward the Legacy of the perennial productivity that Kavery River has yielded in conserving the culture of South India and Tamil Nadu in particular.

நமது பொருளாதாரத்தின் இன்றைய நிலை

இன்று நமது நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலிருக்கிறது. வருமானம் குறைகிறது. அதனால் செலவுசெய்யும் திறன் குறைகிறது. இதற்கு அடிப்படைக்காரணம் விவசாயத்தின் தேக்கம் மற்றும் உற்பத்தித்துறையின் வீழ்ச்சி ஆகிய இரண்டும்.

விவசாயத்திலும் நமது உற்பத்தி குறைவு. அதனால் உள்நாட்டுத்தேவை போக ஏற்றுமதி செய்யுமளவு உற்பத்தியில்லை. ஏற்றுமதியாகும் போது அதிக வருவாயீட்டமுடியும்.

உதாரணமாக ஆலைக்கரும்பிற்கு டன் ஒன்றிற்கு இன்று 2550 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் உற்பத்தி என்று பார்த்தால் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 60 டன். இப்போது வெட்டுக்கூலி, ஆலைக்கு கரும்பை கொண்டு செல்ல லாரி வாடகை எல்லாம் சேர்த்து 600 ரூபாய் போக ஒரு டன்னிற்கு 1900 ரூபாய் கிடைக்கும். இப்போது ஒரு ஏக்கருக்கு 45 டன் என்றால் 45X1900=85,500 கிடைக்கிறது. இதைக்கேட்டால் நல்ல வருமானம் போல் தெரியும். ஆனால் இந்த பணம் கிடைக்க ஒரு வருடம் உழைக்க வேண்டும். இதில் கங்குடைக்க, கால்மாற, மூன்று முறை தோகையுரிக்க என பல முறை ஆட்கள் உள்ளே வேலை செய்யவேண்டும். வாரம் ஒருமுறை தன்னீர் பாய்ச்சவேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை உரமிடவேண்டும். அந்த குடும்பம் அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு அடுத்த ஒரு வருடம் வாழ்க்கையோட்ட வேண்டும். அதோடு அடுத்த வருடத்திற்கான முட்டுவலி (முதலீடு) போடவேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 80 டன் எடுக்கவும் முடியும், சில விவசாயிகள் சாதித்திருக்கிறார்கள், இதுவே எல்லா விவசாயிகளும் இவ்வாறு உற்பத்தி செய்யமுடியுமென்றால்!.

இது கரும்பு எனும் ஒற்றை பயிரின் கதை மட்டுமல்ல. அரிசி உற்பத்தியும் இவ்வாறே. சீனாவில் ஒரு ஏக்கரில் 2.6 டன் நெல் சராசரியாக உற்பத்தியாகிறது. இந்தியாவில் இதுவே 1.1 டன். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என எல்லா விவசாயப்பொருட்களின் உற்பத்தியும் சர்வதேச உற்பத்தியளவுகளைவிட மிகக்குறைவாகவே இருக்கிறது. இதுதான் விவசாயம் தோற்பதற்கு முக்கியமான காரணமும்கூட. நமது நாட்டில் நிலவளம் குறைவு. அதனால் சராசரியாக ஒரு விவசாயி 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் அவரது வருமானம் குறைவாகவேயிருக்கும். காரணம் உற்பத்தி குறைவு. நமது சராசரி உற்பத்தி ஆகவேண்டிய உற்பத்தியில் 40 சதவீதமாக இருக்கிறது. இது 60 சதவீத வருமான இழப்பைக்குறிக்கிறது. இதுதான் அடிப்படைப்பிரச்சினை.

தொழில்களிலும் இதுவே பிரச்சினை. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி அதிக முதலீட்டுடன் கூடிய பெரும் தொழில்களின் பெருக்கத்திலில்லை. மாறாக சிறு மற்றும் குறுந்தொழில்கள் எவ்வளவு அதிகமாக நல்ல நிலையிலிருக்கின்றன என்பதைப்பொருத்தே அந்த நாட்டின் தொழில் வளரச்சியிருக்கிறது. இப்போது நாம் அதிகமாக இறக்குமதியை சார்ந்திருக்க நேர்வதற்கு காரணமும் இந்த சிறு மற்றும் குறந்தொழில்களின் வீழ்ச்சியே. உதாரணமாக ஒரு மரத்தச்சு செய்யும் பத்துபேர் வேலைபார்க்கும் ஒரு சிறு நிறுவனம் சீனாவிலிருந்து குவிக்கப்படும் மரப்பொருட்களுடனும் பிலாஸ்டிக் பொருட்களுடனும் போட்டியிடமுடியாது. நம்மவர்களிடம் மிகக்குறைவான வடிவமைப்புகளேயிருக்கும். ஆனால் சீனர்கள் கணினி மற்றும் பயிர்ச்சிபெற்ற வடிவமைப்பாளர்கள் உதவியுடன் பல புதிய மற்றும் கவர்ச்சியான வடிவமைப்புகளில் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். இங்கும் நம்மவர்களுக்கு தோல்வியே. அடுத்து நம்மவர்கள் வைத்திருக்கும் எந்திரங்களும் பழைய தொழில்நுட்பத்தைக்கொண்டவையாகவே இருக்கும். பயிற்சியில்லாத ஊழியர்கள். ஒரு நல்ல ஆர்டர் வருகிறது என்றாலும் நம்மவர்களால் அந்த ஆர்டரை முடிக்க அதிக நாட்கள் செலவாகும். ஆனால் கடைகளிலோ போதும் போதுமென்று சொல்லுமளவு சீனத்தயாரிப்பு கிடைக்கிறது.

இந்த நிலைமை ஏதோ ஒரு மரத்தச்சு செய்யும் நிறுவனத்தின் நிலை மட்டுமல்ல. BHEL, BEL, BEML, HAL, GRSE, CIL, SAIL, MDL, NTPC என பெரும் நிறுவனங்களின் கதையும் இதுவே. குறிப்பாக BHEL நிறுவனம் தனது கையாளாகாத்தனத்தால் இந்தியாவின் மின்னுற்பத்திக்கு பெரும் இடையூறாக விளங்குகிறது. CIL ன் கையாளாகாத்தனத்தால் இந்தியா கடந்த நிதியாண்டில் 20 பில்லியன் டாலர் அல்லது ஒரு லச்சத்தி இருபதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யவேண்டிய நிலையேற்பட்டது. இந்நிலை மேலும் பல வருடங்களுக்குத்தொடரும்.

இராணுவத்திற்குத்தேவையான தளவாடங்களில் பெரும்பங்கு இறக்குமதியின் வழியே ஈடுசெய்யப்படுகிறது. ஒருவருடத்திற்கு சராசரியாக 50-60 ஆயிரம் கோடி ரூபாய் இதற்கு செலவாகிறது. அதிநவீன தளவாடங்களை இறக்குமதி செய்யலாம். ஆனால் குளிர் தாங்கும் உடைகள், கவச தொப்பிகள் போன்றவற்றையும் இறக்குமதி செய்வது நமது அடிப்படைத்தொழில்களின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

எல்லா மட்டங்களிலும் நமது உற்பத்தி மிகக்குறைவாகவே இருக்கிறது. நமது கல்வி, ஆராய்ச்சி, திரன் வளர்ப்பு, நிதியாதாரங்களை பயன்படுத்துதல், உற்பத்தி முறைகள், திட்டங்கள், சட்டங்கள் என எல்லாவற்றிலும் மாற்றம் வந்தாலொழிய இன்னிலை மாறாது.

பெண்களும் ஒழுக்கமும்

பெண்களின் ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவது தவறு. உண்மை. ஆனால், பெண்கள் தங்களது சுயபாதுகாப்பில் அக்கறை கொண்டவர்களாக இருப்பது உத்தமம். யாரும் தெரியாதவர்கள் கூப்பிடுகிறார்கள் அல்லது ஏதாவது ஒதுக்குப்புறமான இடத்திற்குப் போக வேண்டிய தேவை இருக்கிறது என்றால் முன்னெச்சரிக்கை செய்து கொண்டு போவதில் தவறில்லை. தங்களது பாதுகாப்பில் அவரவர்க்கு அக்கறை வேண்டும். விபரீதங்கள் நிகழ்ந்த பின்பு அழுது புண்ணியமில்லை.

தில்லி சம்பவமே ஒரு நல்ல முன்னுதாரணம். அந்த பெண்ணும் அவளது நண்பனும் செய்த முட்டாள்தனமான செயலையும் (தனியார் வாகனத்தில் தெரியாதவர்களுடன் பயனித்தது) நாம் கேள்விக்கு உட்படுத்திட வேண்டும். சில நாட்களுக்கு முன் திண்டுக்கல்லில் ஒரு பெண் அவரது காதலன் மற்றும் அவனது நண்பர்களால் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம்கூட பெண்களிடம் விழிப்புணர்வு இல்லாத சூழலயே காட்டுகிறது. காதலனுடன் உறவு கொள்வது தனிமனித சுதந்திரம். ஆனால் அதற்கு அவன் ஆள்நடமாட்டமில்லாத ஒதுக்குப்புறமான இடத்திற்கு கூப்பிட்டால் அதை மறுக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களது உடல் உங்கள் உரிமை. ஆனால் அந்த உரிமை மீறப்படுவதற்கான வாய்ப்பு அதுபோன்ற இடங்களிலும் சந்தர்பங்களிலும் அதிகம், அந்த விழிப்புணர்வுதான் அவசியம். அந்த விழிப்புணர்வுதான் உங்களது தனிமனித சுதந்திரத்தையும் பாதுகாக்கும். சமூகத்தில் நிறைந்திருக்கும் ஒழுக்கமின்மை ஆண்களுக்கும் கூட புதியவர்களுடனிருக்கையில் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில், ஆள்நடமாட்டமற்ற நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழலையே உருவாக்கியிருக்கிறது.

இப்போது பணியிலிருக்கும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்துகள் ஏராளம்.. குறிப்பாக இரவு நேரங்களில் பயணமும் அதனால் விளையும் ஆபத்துகளும். பெண் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு எல்லா நிறுவனங்களும் பொருப்பேற்க வேண்டும். காவல்துறையினரும், நிபுணர்களும் கொடுக்கும் தற்காப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுற்றுப்புற மற்றும் புற உலக விழிப்புணர்வு முதலிய கற்றல்களை எல்லா நிறுவனங்களும் தங்கள் பெண் பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும். பெண்களும் இவற்றை சிரத்தையாக கேட்டறிந்தும் கற்றறிந்தும் வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்த பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவேண்டும். கண்துடைப்பாக இன்றி உண்மையிலேயே பயனளிப்பதாக இருத்தல் வேண்டும்.

ஒரு உதாரணம், காவல்துறையினர் எவ்வளவு ரோந்து சுற்றினாலும், மயங்கிய நிலையில் இருக்கும் பெண்ணிடம் நூருபேர் அத்துமீறினாலும் அதை கண்டுபிடித்து தடுக்க முடியாது. ஆனால் அந்த பெண்ணால் மட்டுமே தன்னை சுயநினைவு இழக்கும் நிலைக்கு போகாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.

தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வது முக்கியம். தன்னைச்சுற்றியிருக்கும் சூழலைப்பற்றிய விழிப்புணர்வும் அவசியம்.

ஐடி யில் வேலைபார்க்கும் பெண்கள் மீதான சமூக வன்முறை

ஐடி யில் வேலைபார்க்கும் பெண்கள் கேவலமானவர்கள், ஒழுக்கங்கெட்டவர்கள். ஐடியில் வேலைபார்ப்பவர்களை இதைவிடவும் கேவலமாக முன்னர் (இப்போதும்) கால் "சென்டரில்" வேலை பார்ப்பவர்கள் என்று விமர்சித்திருக்கிறார்கள்.

சரி. இந்த விமர்சனங்களுக்குப் பின்னிருக்கும் இரு தாழ்வு மனப்பாண்மைகளைப் பார்ப்போம்.

முதலில், பெண்களும் கைநிறைய சம்பாதிக்க முடியும், பெண்களின் மூளையும், சிந்தனை செய்யும் திறனும் ஆண்களுக்கு இனையானது எனும் எளிய உண்மைகளை தகவல் தொழில்நுட்ப பணிகளில் வேலைபார்க்கும் பெண்கள் உரக்கச் சொல்கிறார்கள். அதைத் தாங்கிக்கொள்ளமுடியாதவர்களின் புலம்பல். முன்னர் அலுவலகங்களில் தட்டச்சு செய்யும் பெண்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களின் மீது இப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்ததுண்டு. போலியான சமுதாய மதிப்பீடுகளை முன்வைக்கும் தமிழ் சினிமாக்களில் பல முறை அலுவலக பணிகளில் இருந்த பெண்களை தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். இப்போது மாறியிருக்கும் பொருளாதார சூழலில் தக.தொ பணியிலிருக்கும் பெண்களை இவ்வாறு சித்தரிக்கும்படி அந்த அழுக்கு மனப்பாண்மை பரிணமித்திருக்கிறது. பெண்கள் அதிகமாக, ஆண்களுக்கு அதிகமாக சம்பாதிக்கும் துறைகளில் பிரபலமானது தக.தொ துறையே. அதனாலும் அதிகமாக சம்பாதிக்கும் பெண், தனது "திறமையினாலே" சம்பாதிக்கிறார் என்ற விமர்சனம் எழுவது நம் சமூகத்தின் சாபமே. வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சம உரிமை அல்லது முன்னுரிமை கொடுப்பதும் தக.தொ துறையே. இந்த துறைக்கான நேர்காணல்களில் ஆண்களின் மனவோட்டம் எப்படியிருக்கிறது என சோதிக்கும் போது அவர்கள் நிலையாக இந்த நிறுவனத்தில் இருப்பார்களா என்று பார்க்கிறார்கள். அதுவே பெண்கள் அடிக்கடி வேலை மாறுதல் பெருவதில்லை என்பதால் பெரும்பாலான தக.தொ பணிகளுக்கு பெண்களையே தேர்வு செய்கிறார்கள். இதனால் தேராத ஆண்கள் பெண்களின் மீது ஒரு உடலியல் ரீதியான குற்றச்சாட்டை (குனிந்தும் கொஞ்சும் குரலில் பேசியும்) வைப்பார்கள். இதுவும் வாடிக்கையே. பெண்கள் அதிகமாக வேலைசெய்யும் பிற துறைகளான கட்டுமானம், பின்னலாடை, விவசாயம், சில்லரை விற்பனை ஆகிய துறைகளில் அவர்கள் ஆண்களைவிட குறைவான சம்பளமே வாங்குகிறார்கள், அவர்களின் பணியும் குறைவான மதிப்புடைய பணிகளாகவே இருக்கும். இந்த துறைகளில் ஆண்கள் பெண்களை அடக்கியாள்வதாலும், பெண்கள் குறைவாக சம்பாதிப்பதாலும் அவர்களின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளும் கீழ்தரமான விமர்சனங்களும் வருவது குறைவு அல்லது அவற்றிர்கு வெளிச்சம் கிடைப்பதில்லை. இங்கு இவர்களுக்கு பிரச்சினையே பெண்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் மற்றும் அவர்களின் உடல் ஆணின் உணர்ச்சிக்கு சொந்தம் என்பது போன்ற ஆணாதிக்க மனப்பாண்மைகளே.

இரண்டாவது, பொதுவாக பிறதுறை சார்ந்தவர்களுக்கு தக.தொ துறையின் பகட்டும், பணமும் கண்களை உருத்துவது. தக.தொ துறையின் வளர்ச்சி பொதுவாக பாரதத்தில் நல்ல சம்பாதிக்கும் வாய்ப்பை மாத சம்பளதார்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்த வாய்ப்பானது பிற துறைகளைச் சார்ந்த மாத சம்பளதாரர்களுக்கு அல்லது மேசைப்பணியாளர்களுக்கும் கிடைக்கும், ஆனால் அவர்கள் அதற்கு பல்லாண்டுகாலம் உழைக்கவேண்டும். அதேநேரம் தக.தொ பணியில் சேரும் ஒருவர் ஆரம்பத்திலேயே நல்ல சம்பளம் வாங்குவதும் வருடாந்திர ஊதிய உயர்வும் அதிகமாக கிடைப்பதும், பிற துறைகளில் பணிபுரிபவர்கள் பத்தாண்டுகளுக்கு பின் வாங்கும் சம்பளத்தை இவர்கள் பணியில் சேர்ந்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் வாங்கிவிடுவதும் ஒரு மிகப்பெரிய பொருளாதார இடைவெளியை உருவாக்குகிறது. அதோடும் அதிகமாக கைகளில் பணம் புரள்வதும், அவர்களின் ஆடம்பர (சிறுபாண்மையினரே) வாழ்க்கைமுறையும் அவர்களை பொதுவெளியில் தனித்து தெரியும்படி செய்கிறது. இந்த பொருளாதார பிளவும் தக.தொ துறையினரின் மீதான சிலரது வன்மம் வார்த்தைகளாக வருவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இதிலும் சமூக அடுக்கில் கீழிருக்கும் பெண்களை குறிவைப்பது மிக எளிதானதாகிறது. பிற நாடுகளில் சம்பளம் வாங்குவதில் துறை ரீதியான பிரிவினை குறைவு, ஆனால் நம் நாட்டில் அந்த பிளவு மிகவும் விரிவானது. அதோடு பணத்தின் வாங்கும் தன்மையும், அடிப்படை வசதிகளை பணமே பெற்றுத்தரும் என்ற நிலையும் தற்போதைய நிலையில் அதிகமாக பணம் சம்பாதிக்க உதவும் இந்த துறையை சிலர் ஒருவித கடுப்புடனே பார்ப்பதும் இயல்பே. குறிப்பாக தமிழகத்தின் உயர்ந்துவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும், அதிகரித்துவரும் பட்டதாரிகளிடையேயான சம்பள இடைவெளியும் தக.தொ துறையினரின் மீது சிலருக்கு ஒரு இனம்புரியாத வெருப்பை வளர்க்கிறது.

பொதுவாக ஒருவரின் ஒழுக்கம், குறிப்பாக பெண்களின் ஒழுக்கம் என்பதற்கும் ஒரு உயிரின் மதிப்புக்கும் தொடர்பில்லை. ஒரு உயிர் போய்விட்டது. அந்த உயிர் இயற்கையாக மரணிக்காமல் கொல்லப்பட்டிருக்கிறது. அதுவும், ஒரு பெண் என்பதால் ஆண் மனதின் வன்மத்தால் கொல்லப்பட்டிருக்கிறது. நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்ளவேண்டிய தருணமிது. அதைவிட்டு பெண்களின் ஒழுக்கங் குறித்தான விவாதம் என்பது நம்மீது நாமே சாக்கடை தண்ணீரை தெளித்துக்கொள்வதற்கு சமம். நம் சமூகம் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானது, எளியவர் ஒருவர் முன் நமது மனம் எவ்வளவு இறங்குகிறது, வலிமை என்பதை பிறரின் மீது அடக்குமுறை செய்வது என்பதாகவே புரிந்துவைத்திருக்கிறோமா என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டிய நேரமிது. இனியும் ஒரு பெண் இந்த உலகத்தை இயல்பாக தனது விருப்பத்தின் படி எதிர்கொள்ள தனது ஒழுக்கம் குறித்த சான்றிதழ் பெறவேண்டிய அவசியமற்ற ஒரு சமுதாயம் உருவாக நாம் பாடுபட வேண்டிய நேரமிது.

காதல் மயக்கத்தில் நானும், செம கடுப்பில் எனது மனசாட்சியும்...

காதல் மயக்கத்தில் நானும், செம கடுப்பில் எனது மனசாட்சியும்...

இருவருக்குமான (எனக்குள்ளான ) உரையாடலில்

நான் : ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப்பார்த்தேன் நிலவில் ஒளியில்லை,

மனசாட்சி : (பாட்டே தப்பு என்று தலையிலடித்துக்கொண்டு) ஙே, இன்னைக்கு அமாவாசை அப்படித்தான் இருக்கும்!!!

நான் : நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன், என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்!! 

மனசாட்சி : டேய், நின்னையா இல்ல ஓடி வந்தியா?? ஏன்டா காதல் வந்தா இப்படி ஏதாச்சும் ஒளருவீங்களா... இப்படியே பாடிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காத... பைத்தியகாரன கண்டா கல்லெடுத்து அடிக்கிறாங்களாம்...

நான் : (மனசாட்சி கடுப்பேற்றியதால் விரக்தியாகி)
எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனசாட்சியென்று யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்   

மனசாட்சி : (சாமியார் மடம் ஒன்றைக் காட்டி) டேய் சட்டித்தலையா, இப்படியே காதல் அது இதுனு சுத்திட்டு இருந்தீயனா, கூடிய சீக்கிரம் அங்கதான் போகனும்...

நான் : ?(

நீச்சல் நினைவுகள்...

நீச்சல் நினைவுகள்...

எங்கள் பகுதியில் சொரக்கா (சுரைக்காய்) புருடையைச் சுற்றிக் கயிறு வரிந்து அதை இடுப்போடு கட்டிக்கொள்வோம்... அது ஒரு மாட்டையே மிதக்கவைத்துவிடும்... ஒரு பத்தாண்டுகளுக்கு முன் வரையும் கூட எங்கள் ஊரில் எல்லார் வீட்டிலும் ஒரு சுரைப்புருடையாவது இருந்தது... இன்று அப்படியில்லை...

எனக்கு 8 வயதானபோது வந்த கோடைக்கால விடுமுறையில் சில அண்ணன்மார்கள் ஊரிலிருக்கும் அத்தனை பொடுசுகளையும் இருப்பதிலேயே பெரிய கிணற்றுக்குக் கூட்டிப்போய் பழக்கிவிட்டார்கள்... மூன்றாம் நாளிலிருந்து பசங்களுக்கு சொரப்புருடை கிடையாது... அப்போது என் அம்மச்சியும் சித்தியும் இன்னும் பல மத்திய வயது பெண்களும் பாட்டிமார்களும்கூட எங்களுடன் நீச்சலடித்தார்கள்... எங்கள் பெண்களைப்பார்த்து ஆச்சரியப்பட்ட தருணமது... சொரப்புருடையைக் கட்டிக்கொண்டு குதிக்க சொன்னார்கள்... பயம் தொற்றிக்கொண்டது... அம்மச்சி உடனே எனக்கு தைரியம் குடுக்க அவர் நீச்சல் கற்றுக்கொண்ட கதையைச் சொன்னார், அதாவது அவரது சிறு வயதில் ஆட்டுக்குட்டி ஒன்று கிணற்றில் விழுந்துவிட அதைக்காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தபோது கற்றுக்கொண்டேன் என்றார்... இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு அண்ணன் பின்னாலிருந்து தள்ளிவிட்டார்... வீலென்று கத்தியபடி பண்டைய தமிழர் மரபில் வந்த வீரனாக தண்ணீருக்கு நெஞ்சைக் காட்டியபடி விழுந்தேன்... என்னா அடி, கழுத்திலிருந்து தொடை வரை சிவப்பாகிவிட்டது... நல்லவேலை புருடை கட்டியிருந்ததால் நீருக்குள் அமிழ்ந்துவிடவில்லை...

சற்று வளர்ந்த பிறகு கிணற்றில் விளையாடும் போது வாழை மரங்களை வெட்டிப்போட்டு அதன் மேலமர்ந்து படகோட்டுவது போல் விளையாடியும், கை ஓயும் நேரங்களில் அதைப்பிடித்தபடி மிதந்தபடியுமிருப்போம்... அதன் பிறகு அதிக நேரம் கைகால்களை ஆட்டாமல் மிதப்பது, தண்ணீருக்குள் தொட்டுப்பிடித்து விளையாடுவது, பந்து வீசி விளையாடுவது, அதிக நேரம் யார் முக்குளிப்பது, சொருலடித்து அந்த விசையிலேயே அதிகநேரம் யார் கையசைக்காமல் போகிறார்கள் என்று பார்ப்பது எனப் பல விளையாட்டுக்கள்... சில அண்ணன்களும் மாமன்களும் அருகிலிருக்கும் தென்னையிலேறி அதன் உச்சியிலிருந்து குதிப்பார்கள், அவர்களிடையே யார் அதிக நேரம் சுரைப்புருடையை நிருக்குள் பிடித்துக்கொண்டு முக்குளிப்பது, யார் மின்சாரத்தில் இயங்கும் நீரேற்றியின் (electric pump) அடிக்குழாயின் வாயில் முதல் ஆளாகப்போய் சுரைப்புருடையைக் கட்டிவைத்து வருவது, யார் முதலில் அதைப்போய் அவிழ்த்து வருவது என அதிபராக்கிரம போட்டிகள் நடக்கும்... அந்த வேகமும், பலமும் வீரமும் எனது தலைமுறையில் சற்று குறைந்து இன்றைய அதிநவீன தலைமுறையில் இன்னும் குறைந்துவிட்டது... நாச்சலடிக்கத் தெரியாதவர்களைக் கடப்பாரை நீச்சல்காரன் என்று கேலிபேசுவோம்... மஞ்சள் நீராட்டங்களின் போதெல்லாம் அந்த பெரிய கிணற்றில் ஊரிலிருக்கும் வாலிபர்களும் பொடுசுகளும் இறங்கி கிணற்றை கலங்கடித்துவிடுவார்கள்...

இப்பொழுதும் எங்கள் தோட்டக்கிணறில் தண்ணீர் படித்துறைக்கு அருகிலிருக்கும் போது நான் வீட்டிலிருக்கும் போதெல்லாம் நீச்சலடிப்பது வழக்கம்... இனி என் அக்காள் மகளுக்கு பழக்கவேண்டும்... இப்போதே மாமா நானும் உங்கள மாதிரி மீச்சலடிப்பேன் என்னையும் கிணற்றுக்கு கூட்டிப்போங்கள் என்கிறாள்... அவள் மழலை மீச்சல் நீச்சலானவுடன் பழக்க ஆரம்பிக்கவேண்டும்... புருடையை வரிந்து கொடுப்போரைத் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்...

யாருக்கு வாக்களிப்பது ??!!

யாருக்கு வாக்களிப்பது என்று குழம்பிக்கொண்டான்...
வேட்பாளர் பெயர் மட்டும் தெரிந்தது...
ராத்திரி தலைக்கேறிய போதையில் சின்னத்தை இழந்துவிட்டான்...
தேர்தலதிகாரி சீக்கிரமன்று உசுப்ப,
மீண்டும் படித்துப்பார்த்தான்...
நான்கு குழந்தைசாமிகள் பட்டியலிலிருந்தார்கள்...
வேட்பாளரின் அல்லைக்கைகளை மட்டுமே பார்த்ததால் வேட்பாளர் முகமும் பரிட்சயமில்லை...
மீண்டும் பார்க்கும்போது ஒரு கந்தசாமியும் இருப்பது தெரிந்தது...
ிள்ளைமேல் கையடித்துச் சத்தியம் செய்தாயிற்று,
ஆத்தா கோபம் கொண்டால் என்னாவது??
கந்தசாமி... யாரிந்த கந்தசாமி?
பார்த்திருக்கிறான்...
அவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்துப்போய் பாடம் சொல்லிக்குடுப்பார்...
பெண்களுக்கு சிக்கனத்தையும், சுய உதவிக்குழுக்களாக இனைந்து அவர்களது வாழ்க்கையை வடிவமைக்க உதவிசெய்வார்...
குடிக்கு அடிமையான தன்னிடமே, சாராயம் குடிக்காதப்பா, அந்தக் காசுல வீட்டுக்கு பால் வாங்கிப்போ, குழந்தை தெம்பா வளரும்... வீட்டம்மாகிட்ட மிச்சப்பணத்தக்குடு.... குழந்தைய நல்லாப்படிக்க வை என்று அவனது போதைக்குப் புரியாததையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்...
அவர் பிரச்சாரத்திற்கு வந்தபோது குழந்தைசாமியின் அடியாள் சாராயத்தை ஊத்திக்குடுத்து அவர்மீது தன்னை ஏவிவிட்டதும் நியாபகம் வந்தது...
போதையில் அவர் மீது கல்லெடுத்து எறிந்ததும், அது அவரது தலையை பிளந்து ரத்தம் வரவைத்ததும், தன்னுடன் வந்த யாரோ ஒருவர் வீசிய கல் கூட்டத்திலிருந்த ஒரு குழந்தையை தாக்கியதும், அந்த கந்தசாமி தன் மண்டையில் வழியும் ரத்தத்தைத் துடைக்காமல் அந்த குழந்தையை காப்பாற்ற ஓடியதும் நினைவுவந்தது...
காலையில் தன் குழந்தை தலையில் கட்டுடன் வீட்டில் படுத்திருப்பதம், பெண்கள் பலரும் அவனைச் சபிப்பதையும் அரை போதையில் கேட்டுக்கொண்டே அடுத்த சுத்து தேர்தல் சாராயத்துக்கு போய்விட்டதும் நியாபகம் வந்தது...
இதெல்லாம் நியாபகம் வர, யோவ், கணாக்கண்டது போதும்... உன் நேரம் முடியப்போகுது... சீக்கிரம் பட்டன அமுக்கு என்று தேர்தல் அதிகாரி அவசரப்படுத்த, நடுங்கிய கையால் கந்தசாமியின் எதிரிலிருந்த விசையை அமுக்கினான்...

வெளியில் வந்தபோது குழந்தைசாமியின் அல்லக்கையான காவேந்தன் அவனைப்பார்த்து கட்டை விரலை உயர்த்திக்காட்ட, ஆத்தாவின் கோபம் நியாபகத்துக்கு வந்தது... தலைவலியுடன் வீட்டுக்கு வந்து தலையில் கட்டுடன் தன் குழந்தை படுத்திருப்பதைப் பார்த்தபோது, கந்தசாமி நியாபகத்திற்கு வந்தார்...

Sunday, 20 April 2014

பால் விலை நியாயமற்றது.. ஏன்...

இப்பெல்லாம் பால் விலை அதிகமாகிடிச்சுனு விளம்பரம் பண்ணறாங்க...

சில கேள்விகள் தமிழக மக்களுக்கு, பால் உற்பத்தியாளர்கள் தவிர மத்தவங்களுக்கு...

1) சரக்கடிக்கிறீங்களே, அது வெரும் 180மிலி 80 ரூபாவாமே... அப்ப தெரியலையா அதோட விலை அதிகம்னு???

2) போய் தினுசா நின்னு பெப்புசி கோக்ககோலா குடிக்கிறீங்களே, அதெல்லாம் 200 மிலி 10ரூபாயாமே...

3) அளுக்கொரு கைபேசி, அதுல மாசாமாசம் பாட்டு வைக்கிறீங்க, இன்டெர்நெட் வைக்கிறீங்க, வாட்சாப்புங்கிறீங்க, பேசுபுக்குங்கிறீங்க, கூகிலுங்கிறீங்க.. எல்லாம் சும்மா வருதா??,

இதுமாதிரி ஒரு லச்சம் வெட்டி செலவு பண்ணறீங்களே, ஒரு லிட்டர் பால 40ரூபா குடுத்தும் வாங்கலாமே...

இன்னைக்கு நிலவரத்த சொல்லிடுறேன்... ஒரு கத்தை வைக்கோல் 30ரூபா, ஒரு கத்தை சோளத்தட்டு 5ரூபா ஒரு கிலோ தவிடு 15ரூபா, ஒரு கிலோ கலப்புத்தீவனம் 25 ருபா, ஒரு கிலோ பருத்திக்கொட்டை விலை 22 ருபா, ஒரு கிலோ உளுந்தங்குருணை 16 ரூபா... ஒரு  கறவை ஒரு நாளைக்கு ஒன்னரை கத்தை வைக்கோல், ரெண்டு கத்தை சோளத்தட்டு சாப்பிடுது, பசுந்தீவனம் கொண்டு வர ஒரு ஆள் ரெண்டு மணி நேரம் பாடுபடனும், ஒரு நாளைக்கு மூனு வேளை தண்ணி காட்டனும், அதுல ஒரு கிலோ தவிடு, 300 கிராம் பருத்திக்கொட்டை, 500 கிராம் கலப்புத்தீவனம், 200 கிராம் உளுந்தங் குருனை போடனும்,,, ஆக செலவு ஒரு நாளைக்கு செலவு 90 ரூபாய்... நான் ஆள் கூலிய இந்த செலவுக்கணக்குல சேக்கல...

ஒரு கறவை சாரசரியா ஒரு ஈத்துக்கு 250 நாள் பால் கறக்கும்... கன்னுப்போட்ட முதல் மூனு மாசத்துக்குத்தான் சராசரியா 8-10 லிட்டர் பால் குடுக்கும்... அப்பறமா குறைஞ்சு குறைஞ்சு வத்தக்கறவையான பின்ன ஒரு லிட்டர் அரை லிட்டர்னு கம்மியா பால் குடுக்கும்... சராசரியா ஒரு ஈத்துக்கு ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் குடுக்குதுனு வச்சிக்கிட்டா, ஒரு வருசத்துல அதிகபட்சமா 1500 லிட்டர் பால் கிடைக்கும்.. இப்ப கொஞ்சம் நடுநிலையான கொழுப்புச்சத்துமிக்க பால்னா, ஒரு லிட்டர் 20-22 ரூபாய்க்குப் போகும்... அப்ப சராசரியா லிட்டர் 21 ரூபாய்க்கு கொள்முதலாகுதுனு வச்சிக்கிட்டா ஒரு வருசத்துக்கு ஒரு கறவை 31000 ஓவா (எம்டன் மகன்ல வடிவேலு ரூபாய்ங்கறத ஓவா னு சொல்லுவாருல அப்படி) கிடைக்கும்... சொலவு வருசத்துக்கு (350 X 90) 31500 ரூபாய்... ஆக லாபமுமில்லை. நட்டமுமில்லை...

இப்ப மருத்துவ செலவு, கருத்தரிப்புச்செலவு, ஆள் கூலி (ஒரு நாளைக்கு 2 மணி நேரம், ஒரு மணிநேரத்துக்கு கூலி 15 ரூபாயினு வச்சிக்கிட்டா 2X 15=30.. (அதென்ன 15 ரூபாய்னு வச்சிக்கிட்டா?? ஒரு நாளைக்கு MNREGA திட்டத்துல 100 ரூபாய் கூலி தர்ராங்கல, அந்த அடிப்படைல விவசாயத்துக்கு ஒரு நாளைக்கு கூலி 150 ரூபாய்... ஒரு விவசாய கூலி நாளுங்கிறது அதிகபட்சமா 10 மணிநேரம்)) அப்படீனு இன்னும் பல உப செலவுகள் ஒரு கறவைக்கு 5000 அதிகமாகும்... இப்ப நட்டம் 5000...

இப்படியே சில ஓட்டுப்பொறுக்கிங்க கூவுறமாதிரி பால் விலை பால் விலைனு கூப்பாடு போட்டீங்கனு வச்சுக்கங்க, விவசாயிங்களுக்கு லாபம் தர்ர கொள்முதல் விலை கிடைக்காது... இப்பவே பல விவசாயிங்க வீட்டுக்கு மட்டும் ஒரு கறவை போதும் மத்ததெல்லாத்தையும் வித்துடலாமுனு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க... ஒரு நாள் வரும், அப்போ வெளி மாநிலங்களிலிருந்து பால் இறக்குமதி செய்யுற நிலை வரும்,,, அங்கெல்லாம் பணத்துக்குத் தகுந்த பட்சணம் தான் தருவாங்க... அப்ப பால் ஒரு லிட்டர் 60 - 70னு விக்கும்...

நான் மேல சொன்ன வெட்டிச்செலவுகள் எல்லாம் பெரு முதலாளிகளோட கல்லாப்பெட்டிக்குத்தான் போகும்... பாலுக்கு நாம் குடுக்கற காசு நம்ம விவசாயிகளுக்குப் போகும்.... 

Friday, 18 April 2014

பெண்ணியமும் குடும்பமும்-3

பெண்ணின் திருமனம் இன்றும் நிர்பந்தத்தின் பேரில் நடப்பது வருத்தத்திற்குரியது. இதை இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும். இதன் பின்னால் இருக்கும் பொதுப் புரிதல்களையும் பார்க்க வேண்டும். அவற்றைப் புரிந்து கொண்டால்தான் இதற்கான விடைகளையும் பெண்களுக்கு அவர்களின் திருமனம் குறித்த விடுதலை அல்லது உரிமையை நிலைநாட்ட முடியும்.

இன்று பல பெண்கள் படிக்கவும் வேலைக்குப் போகவும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு குடும்பத்தைக் காக்கும் (பொருளாதார ரீதியாக) பொருப்பு இருப்பதாக பலரும் நினைப்பதில்லை. பெண்களுக்கு படித்தவுடன் வேலை கிடைக்காவிட்டாலும் அதைப் பற்றி பலரும் அலட்டிக் கொள்வதில்லை. பெண்களைக் குடும்பப் பொருளாதாரத்தி்ற்கு பயன்படுத்திக் கொள்ள பலரும் நினைப்பதில்லை. இவை ஒரு காரனம்.

இரண்டாவது, பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது. இதுவும் ஒரு காரனம். இன்று அறிவியல் பெண் குழந்தை பெற்றுக் கொள்ள சரியான வயது 29க்குள் என்கிறது. இதனாலும் பல வீடுகளில் தங்கள் பெண்ணின் குழந்தைப் பேரு குறித்த கவலை வந்துவிடுகிறது.
அப்படிக் குழந்தை பெற்றுக் கொண்டாலும் அந்தக் குழந்தையை வளர்க்க அவர்களின் உடல் ஒத்துழைக்க வேண்டும். இதுவும் அவ்களைப் பெற்றவர்களுக்கு ஒரு அச்சத்தைத் (தங்கள் பெண்ணின் மற்றும் பேரப் பிள்ளைகளின் நல்வாழ்வு குறித்த) தருகிறது.

சமுதாயக் காரணிகள். பலரும் தங்கள் பெண்களின் நல்வாழ்வை தங்களது குடும்பத்தின் வளமையின் குறியீடாக எடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் பெண்களைக் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு வலு சேர்பதற்கு அனுமதிப்பதில்லை. பொதுவிடங்களில் பெண்ணைப் பெற்றோரைப் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வியே பெண்ணுக்கு எப்போது திருமனம் என்பதுதான். இப்படியான கேள்வி பெண்ணுக்கு 18 ஆன உடனே வந்தவிடுகிறது. ஆனால் இன்றைய பெற்றோருக்கு 25 வயது வரை சாக்கு சொல்லும் வாய்ப்பு இருக்கிறது. பெண் படித்து முடிக்கட்டும் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் பெண் படிப்பை முடித்துவிட்டால், பின் மீண்டும் அந்த கேள்வி வந்துவிடுகிறது. இப்பொழுதுதான் பெண் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள் அவளது வேலையில் இன்னும் முன்னேற வேண்டியிருக்கிறது. அதற்குள் என்ன திருமனம் என்று பல பெற்றோர் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள், ஆனால் உடனே வரும் எதிர் கேள்வியான, அவள் சம்பாதித்து தான் நீங்கள் சாப்பிட வேண்டுமா? என்பதற்க்கு பலருக்கும் பதில் சொல்ல வருவதில்லை. காரனம் பெண் கொண்டு வரும் பணத்தில் குடும்பம் நடத்த பல தந்தைமார்கள் ஒப்புக் கொள்வதில்லை அல்லது வெட்கப்படுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது பல பெண்கள் மட்டுமே பெற்ற வீடுகளில் நிலைமை சற்று மாறிவருகிறது. பல பெண்கள் தங்கள் பெற்றோர்களைக் காக்கும் பொருப்பேற்கிறார்கள். சமுதாயமும் பெண் கொண்டுவரும் காசில் பெற்றோர் வாழ்வதை ஏற்க ஆரம்பிக்கிறது.
ஆனால் பெண்களின் உழைப்பில் வரும் காசும் வாழ்வதற்கு ஏற்றதுதான் என்ற எண்ணம் முதலில் பெற்றோருக்கு வரவேண்டும். அதுதான் முதல்படி. பெண்களும் தங்களின் பெற்றோருக்கும் உடன்பிறந்தோருக்கும் தங்ளது உழைப்பில் உதவவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அப்படியான எண்ணமே அவர்களை சம்பத்தப் பட்டவர்களின் மனதை மாற்றும் வல்லமையைத் தரும்.

பெண்களுக்கும் எப்போது திருமனம் செய்ய வேண்டும் என்ற தெளிவான புரிதலும் வேண்டும். பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற வயது, குறிப்பிட்ட வயதிற்குமேல் குழந்தை பெறுவதில் இருக்கும் சிக்கல்கள், உடல்நிலை மாற்றம் முதலியன குறித்து அவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வகுப்புகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தாங்கள் திருமனம் எப்போது செய்யலாம் என்ற முடிவைத் தெளிவாக எடுக்க முடியும்.

பெண்ணியமும் குடும்பமும்-2

//1. குடும்பம், கலாச்சாரம், மதம் இவற்றின் மூலம் சமூகம் பெண்ணின் மீது (மட்டுமே) திணிக்கும் கட்டுப்பாடுகள், கொள்கை முரண்கள் //

இதற்கான பதில், சமுதாயத்தின் பாதுகாப்பற்ற சூழல் தான் காரனம். பெண்கள் கடத்தப்பட, வன்புணர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் இந்த கட்டுப்பாடுகள். மேலும் வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போதும், நமது சமுதாயம் சற்றேறக்குறைய ஏழு நூற்றாண்டுகளுக்கு அன்னியப் படையெடுப்புகள், அன்னிய ஆக்கிரமிப்பு, நமது சமூகக் கட்டமைப்புகளின் மீதான தாக்குதல், என ஒரு நிலையான ஆட்சி அமைப்பற்ற சூழல் நிலவியது. இதனால்தான் கட்டுகள் அற்ற தமிழ்ப் பெண்ணினம் ஒரு கட்டுக்குள் வைக்கப் பட்டது என்பது என் கருத்து.

இன்றைய சூழலில் கூட ஒரு பெண்ணால் தனியாக பல இடங்களுக்குச் செல்ல முடியாது. அப்படியிருக்கும் போது, நம்மைப் போர்களத்தில் வென்ற அன்னியப் படைகள், கைகளில் ஆயுத்ததோடும் கட்டற்ற அதிகாரத்தோடும் பல நூற்றாண்டுகள் நம்மிடையே திரிந்த போது பெண்களின் பாதுகாப்பின்மையை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அதனால்தான் நமது குடும்பங்கள் பெண்களைப் மறைத்து வைத்தே வளர்க்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கும்.

நமது சமூகம் மாறிவருகிறது, பொதுவெளிகளில் பாதுகாப்பு அதிகரிக்கிறது. இன்று பல குடும்பங்கள் தங்கள் பெண்களை தனியாக பயணம் செய்யவும், பிற ஆண்களின் மத்தியில் தொழில் செய்யவும் அனுமதிக்கின்றன. நமது குடும்பங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் குடுப்பது சமுதாயம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதைப் பொருத்தே. பல வீடுகளில் இன்று ஆண் பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கிறது, காரனம், ஆண்பிள்ளைகள் தவறான வழிகளில் செல்வதற்கான வாய்ப்பு இன்றைய சூழலில் அதிகம்.

குருட்டுத்தனமாக குடும்பங்களைக் குறைகூறுவது அநியாயம். நாம்தான் குடும்பம்.

மேலும் தமிழகத்தில் இன்று பெண்ணியவாதகள் என்று சொல்லித் திரிபவர்களில் பலர் பெண்களுக்கு பலதார சுதந்திரம், ஓரினச்சேர்கை சுதந்திரம், குடிப்பதற்கான சுதந்திரம், புகைப்பிடித்தலுக்கான சுதந்திரம் எனத் தனிமனித சீர்கேடுகளைத்தான் தேவையான சுதந்திரம் என முன்வைக்கிறார்கள். புரிதலற்ற பெண்கள் இந்த நச்சுகளின் பேச்சுகளைத் தப்பாகப் புரிந்துகொண்டு தடம் மாறிப் போகிறார்கள் என்பது வேதனையான உண்மை.

பெண்ணியமும் குடும்பமும்

குடும்பங்களைச் சிதைப்பது தான் பெண்ணியம் அல்லது பெண் விடுதலை என்று கொடுக்கப்படும் விளக்கங்கள் தர்க ரீதியாகவோ அல்லது நியாய ரீதியாகவோ எனக்கு உடன்பாடில்லாத ஒன்றாகத் தெரிகிறது. அதேபோல் ஆண்கள்தான் பெண்விடுதலையின் பொது எதிரிகள் என்று பொதுவாக வைக்கப்படும் கருத்தாக்கமும் எனக்குப் பிழையாகப் படுகிறது.

நான் எனது இந்த குறுகியகால வாழ்கையில் பார்த்த ஆண்களில், தங்கள் மனைவிமார்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் உணவை சமைத்து வைத்துக் காத்திருக்கும் கணவன்மார்களைப் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த பல (மனைவிகளும் சம்பாதிக்கும்) வீடுகளில் பெண்கள் தான் வீட்டின் நிதி நிர்வாகத்தைச் செய்கிறார்கள். சொத்து வாங்குவதிலாகட்டும், பண முதலீடுகளாகட்டும் பல வீடுகளில் பெண்கள் தான் முடியெடுக்கிறார்கள். எனது சம்பலத்தை அம்மாவிடம் குடுத்துவிட்டு அவரிடம் கைச்செலவுகளுக்கு காசு வாங்கிக் கொள்கிறேன். என் தந்தையும் அப்படித்தான். எனது வாழ்கையின் பல கருத்தாக்கங்களை கட்டமைத்தவர்கள் எனது ஆசிரியைகளும் எனது தாயாரும்தான். எனது இன்றைய முதலீட்டு முறைகளை வடிவமைப்பவர் எனது அக்காவும் அம்மாவும். எங்கள் வீடுகளில் பெண்கள் தான் மூளையும் முதுகெலும்பும். எனக்குத் தெரிந்த பல சம்பாதிக்கும் பெண்கள் தங்களது சம்பாத்தியத்தை தங்களது பிறந்த வீட்டிற்க்கு கொடுக்கிறார்கள், அதற்கு அவர்கள் கணவன்மார்களும் துனை நிற்கிறார்கள். பெண்களை மதிக்க வேண்டும் என்பதையும், எந்த இடங்களில் ஒரு பெண்ணுக்கு நான் துணை நிற்க வேண்டும், எந்த சமயங்களில் நான் ஒரு பெண்ணுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்பதையும் என் அம்மா எனக்கு சொல்லித் தந்திருக்கிறார். எனக்கும் என் அக்காவிற்கும் இடையே வீட்டில் எந்த பேதமும் இருந்ததில்லை. அவர் விருப்பம் போல பிடித்ததைப் படிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. மாறாக எனக்குத் தான் எனது விருப்பம் போல படிக்க அனுமதி கிடைக்கவில்லை.

நமது குடும்பங்களில் என்றுமே பெண்களும் சமமாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். என்ன அவர்களுக்கு சில காலமாக சம்பாதிக்கும் உரிமை இல்லாமலிருந்தது. இன்று சுதந்திர இந்தியாவில் பல பெண்களுக்கு சம்பாதிக்கும் வாயப்பு கிடைத்திருப்பது ஆண் பெண் வேற்றுமையை இன்னும் குறைத்து வருகிறது. இன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக எனக்குத் தெரிவது பெண்கள் தான். பல நேரங்களில் பெண்களுக்கிடையிலான காழ்ப்புணர்வுதான் பல பெண்களின் முன்னேற்றத்தைப் பாதித்திருக்கிறது. எத்தனை மாமியார்கள் தங்கள் மருமகள் சம்பாதிப்பதையோ அல்லது தனது மகன் மருமகளுக்குச் சமைப்பதையோ மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்கள்? எத்தனை பெண்கள் தங்கள் கணவன்மார்கள் அவர்களது அம்மாக்களுக்குப் பணிவிடை செய்வதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்கள்?? ஆணைத் தங்களது பொக்கிசமாகப் பார்க்கும் பெண்களின் என்னம்தான் பிரச்சினைக்குக் காரணம். அதுவும் அவர்களது தவறல்ல, அப்படித்தான் மனித உயிரினம் பரினமித்திருக்கிறது. இதில் யாருடைய பொறுப்பு அதிகம்? நிச்சயமாக் அம்மாக்களுடையது தான். அம்மா என்ற உறவுக்கு மட்டும் தான் ஒரு ஆணுடைய கற்கும் பருவத்தில் அவனது கருத்தாக்கங்களைக் பாதிக்கக் கூடிய வல்லமை இருக்கிறது. ஒரு அம்மா, தான் தனது ஆண் சுற்றங்களிடம் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை உணர்ந்தவுடன் அதனால் தான் படும் துன்பங்களையும், அந்த அடக்குமுறை எவ்வாறு மனிதமற்ற செயலாகுகிறது என்பதைத் தன் மகனுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார். அதோடு அவன் அவனது மனைவியையோ. மகளையோ, சகோதரிகளையோ அல்லது பொதுவாகப் பெண்களையோ எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், தனது விருப்பு வெறுப்புகளை அவர்களுடையதோடு எவ்வாறு பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதையும் அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். அதுதான் பொறுப்பான ஆண்மகனை இந்த சமூகத்திற்குக் தரும் வழி. மனைவிமார்களும் தங்களது சுதந்திரத்தைத் தங்கள் கணவன்மார்களிடம் சொல்லிவைப்பது நல்லதுதானே?? காதலிக்கும் பலரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதானே இன்பம் காண்கிறார்கள்?? அப்படியிருக்கும் போது, ஒன்றாக தங்களது வாழ்கையை வாழப்போகும் இருவர் தங்களது விருப்புவெருப்புகளை அடுத்தவரிடம் சொல்லிவிடுவது நல்லதுதானே. ஒருமுறை சொல்லிப் பயனில்லையென்றால், மற்றுமொருமுறை சொல்லிப்பாருங்கள். சிலருக்கு ஒருமுறை சொனன்னால் புரியும். பலருக்குத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான் புரியும். இதுதான் எதார்த்தம். வீட்டுப் பொரியோர்களிடம் முறையிடுங்கள். நீதிமன்றத்தை கடைசி வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். ஆண் அடிக்கக் கையோங்கினால், தடுத்துப் பழகுங்ககள், அடித்துவிட்டால் திருப்பி அடித்துவிடுங்கள், அவ்வளவுதான். இங்குதான் வளர்ப்பின் முக்கியத்துவம் வருகிறது, பெண்ணை அடிப்பது தவறு என்பதைக் ஆண்களுக்கு அவனது அம்மா சொல்லித் தர வேண்டும். அதோடு, பெண்ணை அவன் அடித்துவிட்டால், அவள் அவனைத் திருப்பி அடிப்பதை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இன்று இருக்கும் இளைஞர்களில் பலர் பெண்களுடன் சமமாக பள்ளி, கல்லூரிகளில் பயின்று, வேலை விசயமாக பல பெண்களுடன் பழகியும் வருகிறார்கள். வகுப்பில் ஒரு பெண் முதல் மதிப்பெண் எடுத்தால் பலரும் கைதட்டியிருப்பார்கள். ஆசிரியைகளின் அறவுரைகளுக்குச் செவிசாய்த்திருப்பார்கள். பெண் மேலாளர்களிடம் வேலை செய்திருப்பார்கள். பெண்கள் பல சாதனைகள் புரிவதைப் பார்த்துப் பிரமித்தும், மகிழ்ச்சியடைந்தும் இருப்பார்கள். இப்படியான ஆண் வர்கத்தை நம் சமுதாயம் சில நூரு வருட இடைவெளிவிட்டு இப்போதுதான் பார்க்கிறது. இந்த புதிய ஆண்வர்கத்தை அடிப்படையாக வைத்து பெண்களை மதிக்கும், பெண்களைப் போற்றும் ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் பணி நமது குடும்பங்களுக்கு இருக்கிறது. குடும்பங்களை விட, அந்த ஆணின், பெண் சொந்தங்களுக்கு இந்த கடமை அதிகமாகவே இருக்கிறது.

நான் ஆண்களைப் பெண்கள் எப்படி அணுக வேண்டும் என்பதையும், குடும்பங்கள் தான் பெண் "விடுதலை"யை உறுதி செய்ய முடியும் என்பதையும் ஒரு ஆணின் பார்வையிலிருந்தும், அழகான குடும்பத்தில் வாழ்பவன் என்கிற முறையிலும் மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறேன்.

தமிழக மின் பற்றாக்குறை - காரணங்கள்

தமிழக மின் பற்றாக்குறையின்!?!? காரணம்.

மின் பற்றாக்குறை எப்படி ஏற்படுகிறது?

தேவையைவிட உற்பத்தி குறைவாக இருந்தால் அப்பொழுது பற்றாக்குறை ஏற்படுகிறது.

சரி இப்பொழுது தமிழகத்தின் நிலைமையைப் பார்ப்போம்.

தமிழகத்தின் மொத்த மின் கட்டுமானம் (2011-12),

அனல் = 8050MW
புனல் = 2310MW
காற்றாலைகள் = 6987MW
கோ.ஜென் = 559MW
பயோ = 137MW

மொத்த கட்டுமானம் = 18048MW.

2011-12 நிலையில் தேவை = 12000MW.

கட்டுமானம் தேவையைவிட அதிகமாக இருக்கும் பொழுது, எவ்வாரு பற்றாக்குறை ஏற்படுகிறது??

இப்பொழுது மேலும் சில கணக்குவழக்குகளைப் பார்ப்போம்.

அனல், கோ.ஜென், பயோ மின் நிலையங்களில் 80% உற்பத்தி கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால்,

(8050+559+137) X 80% = 8746 X .80 = 6997 MW

புனல் மற்றும் காற்றாலைகளில் 30% மின் உற்பத்தி கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால்,

(2310+6987) X 30% = 9297 x 0.3 = 2789MW.

மொத்த மின் உறபத்தி = 6997 + 2789 = 9786 MW.

பற்றாக்குறை = தேவை - உற்பத்தி = 12000-9786 = 2214MW.

நமது மாநிலம் முந்தைய காலங்களில் மாற்று மின் திட்டங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் கொடுத்ததால் 2011-12 நிலவரப்படி மொத்த மின் கட்டுமானத்தில் அவற்றின் பங்கு 48.4 சதவிதமாக இருந்தது. இத்திட்டங்களில் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி கிடைக்காதது மற்றும் பருவநிலையின் பாதிப்புகள் இவற்றிலிருந்து நம்மால் அதிகப்படியான மின்னுறப்த்தியை பெற முடிவதில்லை. ஆனால் மாறிவரும் பருவ நிலையைக் கருத்தில் கொண்டும், அருகிவரும் எரிபொருள் வளங்களைக் கருத்திள் கொண்டும் நாம் இன்னும் அதிகப்படியான பலவகைப்பட்ட  மாற்று மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

2013 நிலவரப்படி அனல் மின் நிலையங்களின் மொத்த கட்டுமானம் 13670 MW ஆக அதிகரித்து இருக்கிறது (மொத்த கட்டுமானத்தில் 58% ).

தற்போது பல நிலைகளில் (18000MW) இருக்கும் அனல் மின் திட்டங்கள் 2016க்கு பின்  உற்பத்தியைத் தொடங்கும் பொழுது, நம் மாநிலம் உபரி மின் உற்பத்தி கொண்ட மாநிலமாக மாறிவிடும்.

மேலும் தற்பொழுது கூடங்குலம் அனுமின் நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரமும் சேரும்பொழுது ஓரளவு மின் பற்றாக்குறையைப் போக்கலாம்.

தமிழக அரசின் சூரிய மின் கொள்கையின் படி அடுத்த மூன்று வருடங்களில் 3000MW மின் கட்டுமான இலக்கு நிற்னயிக்கப்பட்டிருக்கிறது.


எதிர்காலம் நம்பிக்கையளித்தாலும், நிகழ்காலத்தில் சற்று சிரமப்பட்டுத்தான் ஆக வேண்டும்.