Friday, 18 April 2014

மக்களாட்சியும் தனிமனிதர்களும்...

தனிமனித ஒழுக்கமும் பொது ஒழுக்கமும் இல்லாத சமுதாயத்தின் தலைவர்களோ அல்லது அரசாங்கமோ பழி சுமக்க வேண்டிய அவசியம் இல்லை... நம்மில் இருந்து தான் அரசியல்வாதிகள் வருகிறார்கள்... வானத்திலிருந்து அவர்கள் குதிப்பதில்லை... அரசாங்கம் உணவு குடுக்கவில்லை என்பதற்க்காக ஒரு வாலிபன் கொள்ளையடிக்கலாம் என்பதில்லை..

அரசாங்கம் என்பது தனிமனிதர்களால் அல்ல, தனிமனிதர்களின் கூட்டு முயற்சியால் கட்டமைக்கப்பட்ட்து. தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தாமல் – எந்த அமைப்பு ரீதியிலான மாற்றத்தையும் வலியுறுத்தவோ, புரட்சி செய்து மாற்றவோ இயலாது, அப்படியே மாற்றினாலும் – அது நீண்ட காலத்தினதாக இருக்காது.

நாம் நமது பொறுப்பகளை, நமது கடமைகளை மறந்துவிட்டு, பிறரின் மீது குறை கண்டுபிடிப்பதிலேயே காலம் தள்ளுகிறோம்...

மக்களாட்சியானது கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு புரட்சியைச் சாதிக்கும் வழி...
நாம் மக்களாட்சியில் ஒரு மாற்றத்திறக்காக மத்திய கிழக்கு சமுதாயங்கள் இன்று தெருவிலிறங்கிப் போராடுவதுபோல் போராடத் தேவையி்ல்லை...
நாம் நமது வாக்கினை சரியான நபருக்குக் குடுத்தாலே போதும்...

ஆனால், நாம் வருபவரெல்லாருமே கயவர்கள்தான், யாருக்கு வாக்களித்தாலும் அவர்களும் திருடத்தான் செய்வார்கள் என்று வாக்களிக்கும் கடமையிலருந்தும் தப்பிச் செல்கிறோம்...

ஆனால், இது நம் சமுதாயம், நாம்தான் நமக்கான தீர்வுகளைக் கண்டுனர வேண்டும் என்பது என்று நமக்குப் புரிகிறதோ, என்று அந்தப் புரிதலை நாம் செயலாக மாற்றுகிறோமோ, அன்றிலிருந்து நாமொரு பொற்க்காலம் படைக்கத் துவங்குகிறோம்...

If You want to change a system, be a part of it, work your way towards its top and change it as you like it to be... Democracy gives you the easiest and the most accommodating way of change...

No comments:

Post a Comment