இன்று மக்கள்தொகைப் பெருக்கம் பெரு விவாதங்களையும் சிறு செயல் திட்டங்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது...
உன்மையில் மக்கள்தொகைப் பெருக்கம் கவலைக்குரிய தகவலா??
நாம் கடந்த வந்த பாதையிலே இதற்கான பதில் இருக்கிறது...
நம் பரிணாம வளர்ச்சியும், வரலாறும் அந்த பதிலுக்கான சாட்சியங்கள்...
எப்பொழுதெல்லாம் நம் வாழ்விடங்கள் இட நெருக்கடியில் சிக்கினவோ, எப்பொழுதெல்லாம் நம் வாழ்விடங்கள் பருவ மாற்றங்களுக்கு உட்பட்டனவோ அப்பொழுதெல்லாம் நாம் புதிய இடங்களைத் தேடி பயணித்திருக்கிறோம், குடிபெயர்ந்திருக்கிறோம்; அப்புதிய இடங்களின் சூழலுக்கு ஏற்ப நம் வாழ்வியலை மாற்றி இன்னும் வலிய உயிரியாக பரிணமித்து வந்திருக்கிறோம்... இந்த அடிப்படை குணம் தான் எங்கோ கிழக்காப்பிரிக்க காட்டிலோ, தெற்காசிய காட்டிலோ வாழ்ந்த குரங்கு வழி வந்த ஆதிமணித கூட்டத்தை இன்று காற்று தடவிச்செல்லும் உலகின் மூலைகளிலெல்லாம் பரவ வைத்திருக்கிறது...
இன்றும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களான புவி வெப்பமைடைதல், இட நெருக்கடி, அருகி வரும் வளங்கள் முதலியவற்றை நாம் புதிய இடங்களைத் தேடுவதன் மூலம் தான் எதிர்கொள்ள முடியும்... இந்த பூவுலகம் நம் வீடானாலும், புதிய பெரிய வீடொன்றை தேட வேண்டிய கட்டாயம் நமக்கு வந்துள்ளது... அந்த வீடு நிலாவாக இருக்கலாம், செவ்வாயாக இருக்கலாம், சனியின் துணைக்கோளாக இருக்கலாம், அல்லது நம் ஞாயிறும் சிறு ஒளிப் பொட்டாக, தூரத்து விண்மீனாகத் தெரியும் அண்டத்தின் ஏதோ மூலையாகவும் இருக்கலாம்... நம் சந்ததிகளுக்கு நிலாச்சோறு ஊட்டுவதைத் தாண்டி, நிலவில் கால்வைத்த மணிதர்களின் சாகசப் பயணங்களை சொல்லி வளர்க்க வேண்டும்...
மக்கள்தொகைப் பெருக்கம்?? இயற்கையானது... அது தவறானதோ அச்சப்பட வேண்டிய செய்தியோ அல்ல... மாறாக புதிய தேடல்களுக்கான ஆலய மணி...

No comments:
Post a Comment