Tuesday, 26 May 2015

தீவிர சிந்தனையாளன் - ஒரு குட்டிக் கதை

குட்டிக்கதை...

தீவிர சிந்தனையாளன்!!

டீக்கடையில முட்டை போண்டா ஒன்ன சொல்லிட்டு, கோழியில இருந்து முட்டை வந்துச்சா இல்ல முட்டையில இருந்து கோழி வந்துச்சானு யோசிச்சிட்டு இருந்தான்... பையன் முட்டை போண்டாவ கொண்டாந்து "அண்ணே இந்தாங்க" என்றான்... இவனோ சிந்தனையில் இருந்ததால் அதைக் கவணிக்கவில்லை... பையன் மறுபடியும் கூப்பிட்டும் இவன் கவணியாததால் இவன் கையில் போண்டாவைத் தினித்துவிட்டு "படிச்சவருக்கு ஆயிரம் சிந்தனை இருக்கும்" என்று நினைத்தபடி போய்விட்டான்... இவனும் போண்டா சுட அது ஆறட்டும்னு ஓரமா வச்சிட்டு முட்டையா இல்ல கோழியானு யோசனையைத் தொடர்ந்தான்... ஆனாலும் கை மட்டும் முட்டைபோண்டா ஆறிடுச்சானு? தடவிப் பார்த்துட்டே இருந்துச்சு...

எது முதல்ல வந்திருக்கும்? முட்டை முதல்ல வந்திருந்தா அத போட்டது ஒரு கோழியாத்தானே இருக்கமுடியும்??? அப்ப கோழி முதல்ல வந்திருந்தா??? முட்டைய அடை வைக்காம கோழி எங்கயிருந்து வரும்??? இப்படி ஒரு அறிவியல் ரீதியான போராட்டம் மனசுல ஓடிட்டு இருக்க கை மட்டும் போண்டாவ உருட்டிட்டு இருந்தது...

மனசு ரெண்டு பாகமா பிரிஞ்சு நின்னு ஒரு பாகம் முட்டைனும் ஒரு பாகம் கோழினும் வாதிச்சுது...

"ஏன், காக்கா முட்டையில இருந்துகூட கோழிக்குஞ்சு வந்திருக்கலாமே" அப்படினு சிங்கம் பட சூர்யா மாதிரி முட்டைதான் பாகம் சொல்ல, "காக்கா முட்டையில இருந்து காக்கா வராம போண்டாக்கோழியா வரும்னு" கோழிதான் பாகம் விவேக் காமடி தொணியில சொல்லுச்சு...

இந்த போட்டியில மூனாவதா ஒரு பாகம் திடீர்னு மொளச்சு முட்ட போண்டா ரொம்ப ஆறுனா ரப்பர் போண்டாவாகிடும்னு நியாபகப் படுத்த, பதமான சூட்டுக்கு போண்டா வந்ததும் கை தன்னால அத சட்டினியில தடவி வாய்க்கு கொண்டு போச்சு... வாயும் கச்சிதமா போண்டாவோட சின்னமூக்குப் பகுதியில ஒரு கடி கடிக்க அப்படியே பரவச நிலைக்குப் போனான்...

இப்ப மறுபடியும் முட்டைதான் பாகம் "முட்டை அடையில இருக்கப்போ ஏதாவது புறக்காரணியால மியூட்டேட் ஆகியிருக்கலாம்ல?"னு கேக்க... அதற்கு பதிலாக "முட்டை ஓட்டத்தாண்டி எந்த புறக்காரணி உள்ள போகப்போகுது? ஏன், காக்கா குஞ்சு வளரும்போது புறக் காரணியால கோழியா மியூட்டேட் ஆகியிருக்கலாம்ல?" என்றது கோழிதான் பாகம்...

இந்த விவாதத்தினிடையே மேலும் ஒரு வாய் முட்டைபோண்டாவை மென்றான்... அப்போது முட்டை ஓடு வாயில் தட்டுப்பட, சிந்தனையிலிருந்து விடுபட்டவனாக கையிலிருக்கும் போண்டாவைப் பார்த்தான்... அப்போது இரண்டு பாகமும் ஒன்றாகி "ஆமாம், முட்டை போண்டாவுக்குள்ள முட்டை எப்படி வந்தது!!?? " என்று ஆச்சரியப்பட, அடுத்த சுற்று அறிவியல் தேடலுக்கு முட்டை போண்டாவை மென்றபடியே தயாரானான்...

தீவிர சிந்தனையாளன் என்று பெயரெடுத்த பேஸ்புக் போராளி!

Saturday, 2 May 2015

ஆயிரம் தலைமுறைகள் நம் பேர் சொல்லட்டும்!!

இலவசங்களுக்கு பதில் வருடத்துக்கு இரண்டு கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டம் என அடுத்த பத்து வருடங்களில் ஒரு நாளைக்கு தலா ஐம்பது கோடி லிட்டர் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இருபது புதிய திட்டங்களை செயல்படுத்துவோம்... பத்து வருடங்கள் கழித்து நம்மால் நாளுக்கு ஆயிரம் கோடி லிட்டர் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்யமுடியும்... அதாவது ஒரு நாளுக்கு 0.33 டிஎம்சி தண்ணீர்... ஒரு வருடத்துக்கு குறைந்தது நூறு டிஎம்சி தண்ணீர்...

விவசாயத்தை இயந்திரமயமாக்கியும் குறைந்த நீர் தேவைப்படும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், பரம்பரிய நீர்நிலைகளைப் மீட்டெடுத்து பராமரித்தும் நீர் மேலாண்மையையும் வேளாண்மையையும் இந்த பத்து வருடங்களில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்...

இருபது வருடங்களில் மழை பொய்த்தாலும் காவிரி வரண்டாலும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் முப்போகம் விளைவிக்குமளவு ஒரு கனவுத் திட்டமாக இதைச் செயல்படுத்தவேண்டும்...

இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் கல்லணை கட்டியதையும் ஆயிரம் வருடங்களுக்குமுன் ஏரிகள் வெட்டியதையும் இன்று நினைத்து நாம் மெய்சிலிர்ப்பதுபோல், நம் சந்ததிகள் நம் தலைமுறையில் நாம் சாதித்ததை நினைத்து மெய்சிலிர்க்கவேண்டும்...

Friday, 1 May 2015

ஒரு காதலனின் கடிதம்

உன்னிடம் என் காதலைச் சொல்லிடும் ஒவ்வொரு முறையும் நீ புரிந்தும் புரியாததுபோல் காட்டிக்கொள்கிறாய்.

நண்பனாகவே இரு என்று நீ சொல்லும் ஒவ்வொருமுறையும் உனக்கு தோள் கொடுத்தே நின்றிருக்கிறேன்.. தோழமை காதலாக மாறிடும் என்பது நீயும் அறியாததல்ல...

மனதில் கரைபுரண்டோடும் காதலை உன்னிடமும் சொல்லாது, உணர்ச்சிகளற்று மரமாக அடங்கி நிற்க நான்படும் பாடு எதிரியும் படக்கூடாத துன்பம்.

உன் கைகோர்த்து நடப்பதை ஆயிரம் இரவுகளில் கனவாக கண்டிருக்கிறேன். உன்னோடு இணையாக நடக்கும் வாய்ப்பு கிடைத்த அந்த சில பொழுதுகளிலும் என் கைகளைக் கட்டியே வைத்திருந்தேன். என் கைகள் உன் கைகளைத் தீண்டியவுடன் என் காதல் வெளிப்பட்டுவிடும் என்பதால்.

அருகில் நீயிருக்கும் சில பொழுதுகளிலாவது உன்னைப் பார்க்கவாவது முடிகிறதென்று ஆறுதல் செய்து கொள்வேன். மின்னலாக சிலநொடிகள் மின்னிவிட்டு நீ மறைந்தும் விடுகிறாய். நீயில்லாதுபோகும் அந்த ஆயிரமாயிரம் பொழுதுகளில் என் செய்வேன்? கனவுகள் மட்டுமில்லாது போயிருந்தால் காதலால் வெடித்துச் சிதறியிருப்பேன்.

உன்னை என்னில் வைத்துக் காத்திருக்கிறேன். தோழி, காதலில் தோழமையும் உண்டு.

-காதலன்.

என்னசெய்து உணர்த்துவேன் என்னிதயத்தை!

என்னசெய்து  உணர்த்துவேன் என்னிதயத்தை!
என்னை தினம் பார்க்கும் விண்
மீன்கள் சொல்லலாம் - காரணமில்லா
காதல் என்னுடையதென்று!!!

எப்படிச்சொல்வேன் உன்னையே தேடியோடும் நினைவுகளை!!!
அலையலையாய் எங்கும் மணல் தேடும்
கடல் சொல்லலாம் - உன்னைத் தவிர
ஏதும் கேட்காத காதல் என்னுடையதென்று!!!

என்னவென்பேன் நான் கொண்ட காதலை!!!
காற்றுவடிவாகியும் உள்ளே மழையாய் வாழும்
மேகம் சொல்லலாம் - உன்னிலிருக்கும்
நீதான் என் காதலென்பதை!!!

என் தனிமைக்காக காதல் செய்யவில்லை!!!
பாலையில் சோலை வளர்க்க நீர்தேடும்
விதை சொல்லலாம் - ஒரு உலகம்
படைக்கவே என்
காதலென்று!!!

காதலர்களும், அவர்கள் நண்பர்களும்

Raja n rani are lovers... Ramu is their frnd...

One day the lovers fight... They fight fight n fight late into the night...

The friends phone "rings" and he is woken up...

Rani - I don't want him.. He ruined my life.

Ramu - (shopping கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இவன் cricket பார்த்திருப்பானோ?) Oh, why so serious?

Raja - I have had enough of her. She is forcing me without giving a choice.

Ramu - (cricket பாக்காத நான் serial பாக்கனும்னு சொல்லியிருப்பாளோ?) Machi cool da...

Rani - because of him I lost everything.. But he is not ready to do what I ask him to do...

Ramu - sis if u really love him, speak with him.. Let him know why u r asking him this. Ask his point of view n come to a understanding (என்ன விட்டுடுங்க... வலிக்குது)

Raja - she doesn't have empathy da.. If this is the case let us part...

Ramu - dude, speak with her da... Try to be patient with her... Try to understand her side n then u both take a decision (நான் தூங்கனும்... I am பாவம்)

Rani - blah blah blah.. I dont want him.. But u don't force him..

Ramu - (மறுபடியும் மொதல்ல இருந்தா?) I'll speak with him n understand his views. U don't take any decision...

Raja - machi I want to forget her... Let us have a party this weekend...

Ramu - (இப்ப சொன்னியே இது பேச்சு!!!இத I like பண்றேன்) sure machi... This Saturday evening let us meet in the bar!!!

Rani - I'm going to go on a tour this weekend... I want to forget him... I'll buy u some sweets my dear brother...

Ramu - (கன்னா லட்டு திங்க ஆசையா) sure sweetheart... I wish u happiness... Enjoy your outing (இப்பவாச்சும் அவன மறந்து தொலை... அவனும் இல்லாம நான் தனியா சுத்திட்டு இருக்கேன்)

And the Saturday came... Ramu tried to call raja manytimes but got msg from raja "in meeting, will call later"...then he sent a msg to him saying that he will wait in the so n so bar and asked him come there... Ramu also tried to call rani, but it was switched off (அப்பாடா தப்பிச்சேன்)

while ramu was looking into the menu card of the bar, raja called him to say, "மச்சி... நான் coorg la இருக்கேன்... நீ சொன்ன மாதிரியே பிரச்சினைய பேசித் தீர்க்கலாம்னு இங்க வந்தோம்... Thanks da machi..."

Rani shouts at raja and ramu hears it on phone, "நீ என் கூட பேச வந்தியா? இல்ல அவன்கூட பேச வந்தியா? இன்னொருவாட்டி அவன்கூட பேசுன, உன்ன தொலைச்சிடுவேன்"

raja to ramu "hey its wrong number dude..." And cuts the call...

Ramu - (துரோகி... wrong number இல்லடா... wrong நண்பன்... ) calls the bar tender n says "மச்சி இன்னொரு quarter சொல்லு"...

Dedicated to all friends of lovers...

காதல் மயக்கத்தில் நானும், செம கடுப்பில் என் மனசாட்சியும் #2

நான் (காதலுடன்)-"காதல் வந்தால் சொல்லியனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன்"

என் மனசாட்சி (செம கடுப்பில்) -இவரு பெரிய சிந்துபாத்!! உடனே ஏழு கடல் ஏழு மலை தாண்டி வநதுட்டாலும்!!! மூடிட்டுப் போய் வேலையப்பாரு நாயே...

நான் - :'( 

எங்கள் பெண்கள்!!!

சில மாதங்களுக்கு முன் ஒருநாள் பெங்களூருவிலிருந்து மைசூரு திம்பம் வழியாக சத்தி வந்துகொண்டிருந்தேன். திம்பம் மலைப்பாதையில் இறங்கும்போது இருபத்திநாலாவது சுற்றிலேயே பேருந்து நின்றுவிட்டது. காரணம் கீழே ஒரு வளைவில் ஒரு பழுவுந்து அச்சு முறிந்து பாதையை மறித்துக்கொண்டு நின்றதுதான்.. இது வழக்கமாக இந்த மலைப்பாதையில் நடப்பது...

அப்பொழுது காலை மணி எட்டு இருக்கும்.. எட்டு மணிநேரமாக பேருந்தில் வந்ததால் களைத்துப்போய் அரை நினைவாய் இருந்தேன்.. எல்லாரும் கீழே இறங்கி அதற்குள் முளைத்திருந்த தேனீர் குழம்பி, பனிக்கூழ், சிற்றுண்டி வண்டிகளை மொய்த்துக்கொண்டிருந்தனர்... இப்படியே ஒரு அரைமணிநேரம் போய்விட்டது.. ஒரு ஆப்பிரிக்காகாரனிடம் துருவிக்கொண்டிருந்தேன்.

ஒரு நான்கு அம்மத்தாக்கள் தங்களது வளைப்பைக்களைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினார்கள்.. இவங்க எங்க கிளம்பிட்டாங்க என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன்.. அப்போது அவர்களுக்குள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.. "நங்க இவன் போமாட்டான் போல.. நாம அப்பவே கிளம்பியிருந்தா இன்னேரம் பாதிதூரம் போயிருக்கலாம்" என்று கொங்குத்தமிழில் பேசிக்கொண்டே இறங்கிப்போய்விட்டார்கள்...

"எங்கள் பழையபெண்கள் வீரத்திலும் உழைப்பிலும் இந்த துணைக்கண்டத்தையே அதகளம் பண்ணிய அந்த சோழர்காலத்து மனிதர்களுக்கு இணையானவர்கள்.. புயலடித்தாலும் அணலடித்தாலும் தாம் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருப்பார்கள், போக வேண்டிய இடங்களுக்குப் போய்க்கொண்டிருப்பார்கள்.. இந்த பெண்மனிகள்தான் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அச்சு.. இவர்களது உழைப்பும் சேமிப்பும்தான் இந்தப்பகுதியின் பெரும்தொழில்களுக்கு மூலதனத்தை அளித்தது. பாசத்துலையும் விருந்தோம்பலிலும் இவர்களை அடிச்சுக்கமுடியாது" இப்படியெல்லாம் அடுத்த ஐந்து நிமிடத்துக்கு பேருந்தின் விட்டத்தைப்பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தேன்.

பிறகுதான் நினைவு வந்தது.. "ஆமா இந்த கொங்கு மண்டலமும் தமிழ்நாடும் உருப்புடாப்படித்தான்.. பக்கி இங்கயே உக்காந்துருக்க? அவங்க அத்தன அம்மச்சிகளும் கூடைய தலையில வச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க வயசுப்பையன் விட்டத்தப் பாத்துட்டு உக்காந்துருக்க?? கெளம்பு" என்று என் அம்மா எப்போதும் திட்டுவதுபோல் திட்டுவதாக காதில் விழுந்தது.. உடனே பேருந்தைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தேன்..அவர்களை இருபதாவது சுற்றில் வைத்துப்பிடித்தேன்... மேலும் சில அம்மத்தாக்களும் அம்மாக்களும் அய்யாக்களும் அந்த வரிசையில் இணைந்திருந்தார்கள்...

மேலும் சில சுற்றுக்கள் போனபிறகு பாதையில் வாகனங்கள் ஏதுமில்லாது நாங்களும் காடும் மட்டுமே என்றானது.. அப்போதுதான் இங்க ஒரு சிறுத்தைப்புலி மனுசங்கள சாப்பிட்டுட்டு இருக்க நினைப்பு வந்தது!?!? அப்போது முன்னே போன கொழுந்தியா தன் நங்கையிடம் கேட்டார் "நங்க இங்க ஒரு புலி சுத்துதாமே" "ஏங்கொழுந்தி! என் தம்பியவே அடக்கி வச்சுருக்கியாம்!! இந்த புலி வந்தா மொரத்துல அடிச்சு தொரத்தமாட்டியா?" "அதுக்கென்னங்கோ!! அடிச்சு தொரத்துனாப் போச்சு.. அப்படி நமக்கு அடங்களைனா என்ன? அதான் கூடவே நல்லா வாட்டசாட்டமா பேரப்புள்ளை ஒன்னு வருதுலோ! " என்றார்... எல்லாரும் சிரித்துவிட்டார்கள்.. யாரப்பா அது கூடவே வர்ர பேரப்புள்ளை என்று திரும்பிப் பார்த்தேன்!! யாருமில்லை, என்னைத்தான் சொல்கிறார்கள் என்று தெரிந்தது...

பண்ணாரியாத்தாதான் இவர்கள் ரூபத்தில் வந்திருக்கும்போல என்று நினைத்தபடியே அவர்களுடன் இறங்கிக்கொண்டிருந்தேன்...

அதகள இன்டர்வியூ... ஒரு குட்டிக்கதை!!!

ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர் (மெக் மாஸ் என்று அழைக்கப்படுகிறார்) ஐடி நிறுவன இன்டர்வியுக்கு போனா என்ன ஆகும்!!!

பல கட்டங்களைத்தாண்டி அந்த முக்கியமான கட்டம் வந்தது...

மேலாளர் : சரி, எங்க கம்பெனிக்கு வேலைக்கு வரனும்னு நினைக்கிறீங்க.. எல்லாத் தகுதியும் உங்களுக்கு இருக்கு.. இன்னும் ஒன்னு உங்களுக்குத் தெரிஞ்சா உங்களுக்கு வேலை உறுதி...

மெக் மாஸ்: கேளுங்க...

மேலாளர் : உங்களுக்கு எந்தெந்த லாங்குவேஜ் தெரியும்?

மெக் மாஸ் :நான் பாத்தீங்கனா தமிழ்ல கவிதையே எழுதுவேன். சங்கப்பாடல்கள்ல இருந்து பின் நவீனத்துவம் வரைக்கும் அத்துப்படி... அப்பறம் வெள்ளக்காரிக்கு லவ் லெட்டர் எழுதுற அளவுக்கு இங்லீஷ் தெரியும்...

மேலாளர் : அதில்ல.

மெக் மாஸ் : அட இருங்க.. கேப்பக் கஞ்சியில இருந்து கள்ளு வரைக்கும் மோகன்லால்ல இருந்து இருந்து மம்முட்டி படம் வரைக்கும் மலயாளத்துலயே கேக்கவும் பாக்கவும் தெரியும்...

மேலாளர் : ஐயோ அதில்ல...

மெக் : (தோளை குலுக்கியபடி) கம்பெனிக்கு தேவைனா நான் இந்திகூட கத்துக்கிறேன்... பொழப்புக்கு அத கத்துக்கலாம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க...

மேலாளர் : (கடுப்பாகி) விளையாடறீங்க போல... சீ தெரியுமா?

மெக் : எது தமிழ்ல வர ச்+ஈ=சீ ஆ இல்ல இங்கிலீஷ்ல வர abc c ஆ...

மேலாளர் : (மேலும் கடுப்புடன்) c++ தெரியுமா??

மெக் : இலக்கணப்படி அப்படி சொல்லமுடியாது. ஆனா உங்களுக்கு அப்படித்தான் வேணும்னா சீஈ அப்படினு எழுதலம்னு தொல்காப்பியரே சொல்லியிருக்கார்!!!

மேலாளர் : (மண்டை குழம்ப) தொல்காப்பியரா?? அவர் யாரு??

மெக் : (ஆச்சரியமாக) அவரத் தெரியாதா???  உங்க பாசையில சொல்லனும்னா தமிழுக்கு கோட் எழுதுனவரு...

மேலாளர் : (நக்கலாக) அபாக்கஸ் தெரியுமா? சார்லஸ் பேபேஜ் தெரியுமா??

மெக் : (வியப்பாக) எனக்கு ஆக்டோபஸ் தெரியும்!! இந்த அபாக்கஸ் யாரு??? கேபேஜ் சாப்பிட்டுருக்கேன்... இந்த பேபேஜ் என்ன்??? உங்க கம்பனி கேன்டீன்ல போடுற ஐட்டமா???

மேலாளர் (செம கடுப்பில்) உன்ன எல்லாம் யாரு மேன் உள்ள விட்டது??

மெக் : ஏன்? உங்க கம்பனி செக்யூரிட்டிதான்!!!

மேல் : உன்ன மாதிரி ஒரு திமிர் புடிச்சவன பாத்ததேயில்ல!!

மெக் : யேஏஏய்ய்ய் யாரப்பாத்து என்ன வார்த்த சொன்ன??? நான்தான்டா என் டிபார்ட்மென்ட்லயே சாஃப்டு என் தக்காளி... இன்னும் என் மச்சான் வந்துருக்கனும்... தொல்காப்பியர தெரியாதுனு சொன்னதும் உன் பல்ல பேத்துருப்பான்...

மேல்:  கெட் அவுட்! யூ இடியட்!

மெக் : (அலப்பறையாக) யேஏஏய்ய்ய்... எனக்கே கெட் ஆவுட்டா???  மவனே வெளிய வா உன் மூஞ்சியில கூரான் உடறேன்... அப்பறம் அந்த பிஞ்சுபோன மூஞ்ச போட்டோ புடிச்சு உனக்கு வைக்கிறேன்டா கட் அவுட்டு...

மேல் : (அலறியபடி) செக்யூஊஊஊரிட்ட்டீஈஈ

மெக் : உனக்கு மட்டும்தான் ஆளத்தெரியுமா?? இர்ரா நானும் கூப்புடுறேன்.. (அலை பேசியில் கூப்புடுகிறார்) மச்சான் இங்க என்ன அடிக்க ஒருத்தன் ஆளக்கூப்புடுறான்டா... சீக்கிரம் வாங்கடா... நாளைக்கு நம்ம லேப்ல இவன வச்சுதான் drop test பண்ணறோம்...

அதகளமானது இன்டர்வியூ!!!

ஆதித்த கரிகாலன் * அருள்மொழிவர்மன் * வந்தியத்தேவன்

ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன்! பொன்னியின் செல்வனில் வரும் மூன்று நாயகர்கள். இவர்களின் வாழ்க்கையையும் சுபாவங்களையும் கல்கி காட்டியிருக்கும் விதம் அலாதியானது.

ஆதித்த கரிகாலன் : பேரரசர் வம்சத்தில் பிறந்திவன். மாபெரும் வீரன். இளம் வயதிலேயே செயற்கரும் வீரச்செயல்கள் புரிந்தவன். தன் தீரத்தால் பட்டத்திளவரசனானவன். யாருக்கும் அஞ்சாத இயல்புடையவன். அவன் இள வயதில் களத்தில் புரிந்த வீரச்செயல்கள் இளைஞர்களின் உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்கச் செய்பவை. பெருங்கனவுகளும் அவற்றைச் சாதிக்கும் ஒப்பற்ற வீரமும் கொண்டவன். தன் காதலுக்காகவும் அதனால் தான் இழைத்த அநீதிகளுக்காகவும் வருந்திக்கொண்டு குரோதமும் காதலும் மாறி மாறி ஆட்டிவைக்க மனம் கலங்கி வாழ்பவன். முன்கோபமும், அவசரமும் அதிகம். எத்தனையோ பெருங்காரியங்கள் செய்யும் வாய்ப்புகள் இருந்தும் தனது மனதைக் கட்டுப்பாட்டில் வைக்காததால் கனவுகளுக்குச் செயல்வடிவம் குடுக்கும் முன்னே வீழ்கிறான்.

அருள்மொழி வர்மன் : பேரரசர் குலத்தில் பிறந்தவன். தொட்டதெல்லாம் பொன்னாகும் வரம் பெற்றவன். வயதுக்கும் தோற்றத்துக்கும் மீறிய தலைமைப் பண்புகளும் கனவுகளும் கொண்டவன். யாரையும் வசீகரிக்கும் தன்மையும் தன் படைகளைப் போலவே எதிரிகளின் அபிமானத்துக்கும் உரியவன். எப்பேற்பட்ட சூழலும் அவனுக்குச் சாதகமாகிறது. அவன் நினைத்ததெல்லாம் கைகூடுகிறது. ஆனாலும் தனக்கு பாத்தியமான பேரரசை பிறருக்கு விட்டுக்கொடுத்து அதில் இன்பம் காண்பவன். தனக்கெனப் பிறந்திருக்கும் பெண்ணிடம் காதல் கொள்கிறான்.

வந்தியத்தேவன் : யாருமற்ற அநாதை. முற்காலத்தில் அவன் குலம் அரசாண்டதின் எச்சமாக நாடும் வீடுமற்று வாழ்ந்தபோதிலும் அரையன் எனும் பட்டத்தைச் சுமப்பவன். தன் எஜமானர்களின் ஏவலுக்கு கட்டுப்பட்டவன். தான் நினைத்தபோது தூங்கவும் திங்கவும்  வாய்ப்பற்று விதியின் இழுப்புக்கு உடன்பட்டவன். ஆனால் எந்த சூழலையும் சமாளிக்கும் துணிவும் மதியூகமும் படைத்தவன். பெண்களைக் கண்டால் வழிபவன். ஆனால் மனத்தை ஒருத்தியிடம் மட்டுமே பரிகொடுக்கிறான். அவள் பேரரசனின் மகளானாலும் தன் காதலை அவன் கைவிடவில்லை. எடுத்த காரியங்களை முடிக்க எத்தனைப் பிரயத்தனங்களும் செய்தாலும் விதியின் போக்குக்கு எதிராக அவனால் எதுவும் செய்யமுடியாது. தன் உழைப்பாலும் விதியின் போக்காலும் உன்னதமான நிலைகளை அடைகிறான்.

இந்த மூன்று கதாப்பாத்திரங்களின் இயல்புகளை உலகில் வாழும் மனிதர்களுக்குப் பொருத்திப்பார்க்கலாம். அத்தனை மனிதர்களையும் ஒரு பிரமிடாக நிறுத்தி வைத்தால் ஆதித்த கரிகாலன்கள் அதன் அடியிலும் அருள்மொழி வர்மன்கள் அதன் முனையிலும் நிற்பார்கள். அவர்கள் சொற்பமானவர்களே. உலகின் போக்கில் தாக்கம் ஏற்படுத்தும் முன்னே ஆதித்த கரிகாலன்கள் தீர்ந்து போவார்.. உலகின் போக்கில் பெரும் மாற்றங்களை அருள்மொழி வர்மன்கள் போகிற போக்கில் செய்துவிட்டுப் போவார்.. ஆனால் அந்த உலகின் இயக்கம் வத்தியத்தேவன்களின் அடுத்து என்னவென்று தெரியாத பயணத்தில்தான் இருக்கிறது. அவர்கள்தான் கைகூடாத கனவுகளுடன் போராடுபவர்கள். அவர்களின் வாழ்க்கைதான் மனிதகுலத்தின் பயணத்தை ஒரு கோட்டில் கொண்டு செல்வது. அருள்மொழி வர்மன்கள் அதன் திசைகாட்டிகள். ஆதித்த கரிகாலன்கள் அந்த பயணத்தை மாற்றும் வல்லமை கொண்டிருந்தும் தடைக்கற்களாக முடிந்து விடுபவர்கள். யாரும் ஆதித்த கரிகாலன்களாக முடியும். வந்தியத்தேவர்கள் தங்கள் மனத்தை அலைபாயவிடும் போது ஆதித்த கரிகாலர்களாக முடிந்து போகிறார்கள். ஆனால் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் அருள்மொழி வர்மர்களாக முடியாது. வந்தியத்தேவர்கள் தங்களது லட்சியங்களுக்காக உயிரையும் உணர்வுகளையும் விட்டுக்கொடுத்து உழைக்கும்போது அருள்மொழி வர்மர்களாகப் பரிணமிக்கிறார்கள்.

இங்கு முக்கியமானது நம் மனதை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதே. உடல் வலிமையோ, மனிதர் துணையோ, பொருள் வளமோ மனதின் வலிமைக்கு முன் நிற்க முடியாது. அப்படிப்பட்ட மனதை நாம் நம் கட்டுக்குள் வைத்திருக்கும்போது செய்ய தினைப்பதையெல்லாம் அவை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் செய்யும் ஆற்றலைப் பெருகிறோம்.

மனம் விசித்திரமானது!! அது மடுவாகவும் மலையாகவும் உருமாறும் ஆற்றல் கொண்டது!!!

என்னுயிர்த் தோழி

நீ அழும்போது உன் தாயாவேன்!
நீ கோபப்படும் போது உன் குழந்தையாவேன்!
நீ சண்டையிடும்போது உன் தந்தையாவேன்!
நீ சோர்வுறும்போது உன் தோழனாவேன்!
நீ மகிழும்போது உன் காதலனாவேன்!
நீ அணையும்போது நான் உன் கனவனாவேன்!
நீ இல்லாத போது நான் மரமாவேன்!
நீ உரசிநடக்கும்போது நான் மலர்வனமாவேன்!
நீ என்னவளாகும்போது, நான் நீயாவேன்!!!

அவளும் அவனும்

உலகின் முதல் ஆணாக நான் இருந்த போதும், முதல் பெண்ணாக நீ இருந்த போதும் முதல் முதலாக உன்னைப் பார்த்தேன்!!!

பார்த்த அந்த நொடியில் காதல் கொண்டேன் உன்னிடம்!!!

உலகில் பல கோடி ஆண்களும் பல கோடிப் பெண்களும் இருக்கும்போது மறுபடியும் பார்த்தேன்!!!

எத்தனைப் பெண்களிருந்தும் என்ன!!!

ஆயிரமாயிரம் பிரவிகள் கடந்தும்,

அன்று பார்த்த உன்னை நான் மறக்கவில்லை என்றும்!!!

அதனால் இன்னும் ஒரு பிரவி எடுத்து வருவேன்... உனக்காக...

தேவதைகளின் வாயடைக்கும் பேரழகி!!!

தேவதைகளிடம் பேசிக்கொண்டிருந்தேன்...

எங்களைவிட யாரும் அழகாக இருக்கமுடியாது...
அதனால்தான் நாங்கள் தேவதைகளாக இருக்கிறோம் என்றனர்!!!

ஐயம் மேலிட உடனே எனது கைப்பேசியிலிருந்த அவளது படத்தைக் காட்டி,
இவள் பற்றிய உங்கள் அபிப்பிராயமென்னவெனக் கேட்டேன்.

அவளைப் பார்த்த தேவதைகள்,

"அண்ணா, இங்க அழகு நிலையம் எங்கேயிருக்கு" என்று கேட்டனர்...

தேவதைகளையும் ஒப்பனை செய்யவைக்கும் அழகு அவளுடையது!!!

காதல்

ஆயிரம் பேரிடம் தலா ஆயிரம் வார்த்தை பேசிவந்தாலும்,

உன்னைப் பார்த்தவுடன் வாயடைத்துப் போகிறேன்!!!

கனவா இல்லை நினைவா என்று புரிவதில்லை உன்னுடனான சந்திப்புகள்!!!

*******

நீ இன்று மஞ்சளாடை அணிந்திருக்கிறாய் என்று தெரிந்துகொண்டேன்!!!

வெள்ளை மட்டும் உடுத்திய தேவதைகளை

மஞ்சள் சுடிதாரில் பார்த்தபோது!!!

*******

உன்னை நினைத்தபடி,

பட்டாம்பூச்சிகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தேன்,

மலர்கள் எப்படியிருக்குமென்று!!!

மலரை வரைக. என்ற கேள்விக்கு,

பரிட்சையில் அவை உன் முகம் வரைந்திருந்தன!!!

********

காலகாலமாக நிலவைப் பிடிக்கக்
குதித்துக் கொண்டிருந்ததாம் கடல்,

நீ கால் நனைத்ததும்

அலைகள் ஓய்ந்துவிட்டன!!!

********

தடக் !!! தடக்!!!

தடக்!!! தடக்!!!

என் இதயத்துடிப்பைக் கேட்ட மருத்துவர் திடுக்கிட்டார்!!!

இதுபோன்று அறிவியலிலேயே இல்லை என்றார்!!!

அவள் போகும் இரயில்வண்டியோடு அதுவும் போய்விட!!!

பாவம் அறிவியல்தான் என்ன செய்யும்!!!

********

என் கண்களிடையே போட்டியாம்!!!

அவளை முதலில் காண்பது யாரென்று!!!

அவள் குரல் கேட்டது

நீயா நானா என்ற பங்காளிச் சண்டையால்

செவிகளிடையேயும் ஒரு முரண்,

இதயம் ஒன்றாக மட்டும் இருப்பதால் தப்பித்தேன்!!!

********

கார்த்திகை மாதம் நான் கண்ட கனவில்!!!

தீபங்களின் நடுவே நிலா வந்தது!!!

நிலவல்ல, அப்பேரெழில் நீயென்று கண்டேன்,

பின்னொரு நாளில்

தீபங்களின் நடுவில் நீ வந்தபோது!!!

********

நீ போகும் இடமெல்லாம்

உன்னை வரவேற்க்க மலர்கள் வருவதால்

இந்த உலகம் ஆனது மலர்க்காடு!!!

மலர்களின் தேவதை நீ!!!

*******

அவளைப் பார்த்த பின்பு

அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்!!!

என்ன செய்ய???

மின்னலைப் பார்த்த கண்களுக்கு வேறு யாரும் தெரிவதில்லை!!!

*******