Wednesday, 10 June 2015

நேற்று, இன்று, நாளை - நீர் மேலாண்மையும் தமிழகத்தின் எதிர்காலமும்

நேற்று :

தமிழர்களின் பெருமைமிகு நாடுகளில் ஒன்றான சோழநாட்டின் ஒப்பற்ற பேரரசனான கரிகால் பெருவளவன் அடங்கா காவிரியின் குறுக்கே கல்லைக் கொண்டு ஒரு அணையமைக்கிறார். அடங்கா காவிரி அகண்ட காவிரியாகி சோழநாட்டை சோறுடை நாடாகும் வரம் தருகிறாள்.

காவிரியில் மழைக்காலத்தில் வரும் வெள்ளம் வீணாகக் கடலில் கலக்கிறது. காவிரிக்கு வடக்கே இருக்கும் பகுதிகள் இப்படி காவிரியில் நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்போதும் வரண்டு கிடப்பதைப் பார்த்த சோழப்பேரரசின் ஒப்பற்ற படைத்தளபதிகளில் ஒருவரான பட்டத்திளவரசர் இராஜாதித்யர் தில்லைக்கு அருகில் ஒரு பிரம்மாண்ட ஏரியை வெட்டுகிறார். சோழநாட்டின் வளம் வடக்கிலும் விரிகிறது.

தற்காலத் தமிழகத்தின் பிரம்மாண்ட நகரான சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்கு வீராணம் ஏரியிலிருந்து நீர் கொண்டு செல்லப்படுகிறது.

சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்கு வீராணமும் ஈடுகுடுக்கமுடியாது திண்டாட, பூமண்டலத்திற்கு உயிர் குடுத்த கடலின் உப்புநீரை நன்னீராக்குகிறது தமிழரின் மக்களாட்சி.

இன்று:

கிடைக்கும் நீரையும் காலத்திற்கு தேக்கிவைத்து பயன்படுத்த புதிதாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு புதிய ஏரியை வெட்ட தமிழரின் மக்களாட்சி முடிவுசெய்கிறது.

கருநாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை... ஒகேனக்கல்லில் ஒரு லட்சம் கண அடிக்குமேல் தண்ணீர் கொட்டுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 21 நாட்களில் 53 அடி நிறைந்திருக்கிறது.

நாளை:

மக்கள்தொகை மற்றும் தொழிற் பெருக்கத்தால் தமிழகத்தின் தண்ணீர்த்தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது.

மழை பொய்த்தது, கோடையின் உக்கிரத்திற்கு அதிக நீர் தேவைப்படுவதால் தமிழகத்தில் நீருக்கு பெரும் பஞ்சம்.

தண்ணீருக்கு தமிழகம் கருநாடகத்திற்கு இடையே புதிய வழக்காடு.

நிலத்தடி நீர் பாதாளத்தையும் தாண்டி கீழிறங்கிவிட்டது.

விவசாயம் பொய்த்து பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை.

குடிநீர் இல்லாமல் நகரங்கள் வீழ்ச்சியடைகின்றன.

நீதி:

நீர்மேலாண்மையில் நாம் செய்திடும் தவறு தமிழகத்தின் எதிர்காலத்தையே அழித்துவிடும்.

No comments:

Post a Comment