Wednesday, 10 June 2015

ஓளியை விஞ்சும் மனது

மனதின் வேகம் அலாதியானது...

நொடியின் நூற்றில் ஒரு பங்கு காலம் கடக்கும் முன் அது இருக்கும் இடம் நிலை கடந்து எங்கெங்கோ போய்விடுகிறது!!!

ஐந்து நிமிடம் பேருந்தில் பயணிப்பதற்குள் அது புரவிகளில் பாரதமெங்கும் போய் வருகிறது!!! பல்லாயிரம் கிமீ தூரம் அது நொடிப்பொழுதில் பயணித்தாலும் களைப்பதில்லை!!! சாலையோரக் கடையில் ஒரு இட்லி சாப்பிட்டு முடிக்கும் முன் அது உலகையே ஒரு குடை நிழலில் ஆண்டுவிடுகிறது!!!

மனதின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் உடல் படைப்பில் இல்லை!!! இருந்திருந்தால் இன்னும் கோடி அண்டங்கள் படைக்க வேண்டியிருந்திருக்கும்!!!

No comments:

Post a Comment