தமிழக அரசு காவிரித்தண்ணீரை மதுரைக்குக் கொண்டு வர திட்டம் போடுகிறதாம்.. இது தவறான திட்டம். என்னைக்கேட்டால் இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரையில் ஒரு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். ஒரு நாளைக்கு 20கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமாக அதைச்செயல்படுத்த வேண்டும். அதாவது வினாடிக்கு 81 கன அடி தண்ணீர்.
தற்போது சென்னைக்கு குடிநீர் உற்பத்தி செய்ய மீஞ்சூரிலும் நெம்மேலியிலும் கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் சமீபத்தில் செயபாட்டுக்கு வந்த நெம்மேலி திட்டம் ரூ.600 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. நெம்மேலி இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கான (நாளைக்கு 15கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய வடிவமைக்கப்படுகிறது) திட்ட மதிப்பீடு ரூ1000 கோடி எனத்தெரிகிறது. எனவே 20கோடி லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ2500 கோடி செலவாகலாம்.
இவ்வளவு செலவு செய்வதால் என்ன பலன்? இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரையின் குடிநீர்த் தேவையை இதைக்கொண்டு பூர்த்தி செய்வதோடு மதுரை-தூத்துக்குடி தொழிற்பேட்டைகளுக்கும் குடிநீர் வழங்க முடியும். அதோடு காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஆகும் தொலைவைவிட இதில் குறைவான தொலைவில் மதுரையை அடையமுடியும். காவிரி வறலும் மாதங்களிலும் தங்கு தடையின்றி மத்திய தென்மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்க முடியும்..
No comments:
Post a Comment