Wednesday, 10 June 2015

இன்றைய தமிழகம்

த.நா.அ.போ.க நட்டத்தில்.

த.நா.மி.வ.வா நட்டத்தில்.

ஆவின் நட்டத்தில்.

ஆயிரமாண்டுகளாக பெருமையுடனிருந்த பல கோயில்கள் சிதிலமாக.

நொய்யல், பாலாரு, வைகை எனக் கரைபுரண்டோடிய ஆறுகள் கழிவுநீர் ஓடைகளாக, பாலைவனக்கோடுகளாக.

நகரங்களும் கிராமங்களும் குப்பைமேடுகளாக.

வயல்வெளிகள் யாருமே வசிக்காத வீட்டுமனைகளாக.

தூசிபடிந்த நூலகங்கள்.

விளையாட்டு மைதானங்களற்று,
கழிவறைகளற்று,
கல்வி தராது மனப்பாடம் மட்டும் செய்யவைக்கும் பள்ளிகள்.

வின்னைப்பிளக்கும் ஊழல்கள்.

வெட்கங்கொள்ளாத தவறு செய்பவர்.

கூற்றாகாத அறம்.

எங்கும் மழிந்த சுயநலம்.

அடித்தாலும் வெடிக்காத கோபம்.

தொழில்முனைவு குறைந்து அதிகரிக்கும் அடிமைத்தொழிலாளர்.

குடிப்பதை மட்டுமே பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் இளையதலைமுறை அதிகரிப்பு.

அன்னிய முதலீடுகளில் மட்டும் வளரும் அறிவியல்.

கோழியிலிருந்து பசுக்கள் முதல் குழந்தைகள் வரை ஊசியில் வளரும் உயிரினங்கள்.

இனத்தின் தாணியமாக மைதாவும் உணவாக பரோட்டாவும்.

மரணப்படுக்கையில் தமிழ்.

இன்றைய தமிழகம்.

மாற்றம் வரவேண்டும். நான் முதலில் மாறவேண்டும்.

No comments:

Post a Comment