சென்னை மெட்ரோ ரயிலும் அதன் கட்டமைப்பு அரசியலும்.
நாங்கதான் அத கட்டிமுடிச்சோம், நாங்க மாநிலத்துல ஆட்சியிலிருக்கும் போதுதான் அந்த திட்டத்தைக் கொண்டுவந்தோம், நாங்க மத்தியில ஆட்சியில இருக்கும்போதுதான் அந்த திட்டத்துக்கு அனுமதி தந்து நிதி ஒதுக்குனோம், இப்ப நாங்க மத்தியில ஆட்சியில இருக்கும்போதுதான் அந்த திட்டம் நடைமுறைக்கு வருது
அதனால அந்தத் திட்டம் எங்களுக்குத்தான் சொந்தம்!!!
சரி இப்ப யார் என்ன செஞ்சாங்கனு பார்ப்போம்.
மொத்த திட்டத்தின் மதிப்பில்,
மத்திய அரசின் நேரடி முதலீடு - 15%
மத்திய அரசு கடனாக வழங்குவது - 5%
மாநில அரசின் நேரடி முதலீடு - 16%
மாநில அரது கடனாக வழங்குவது - 5%
ஜப்பான் சர்வதேச கூட்டுறங்வு வங்கி கடனாக- 59%.
ஆக மொத்த செலவில்,
மத்திய அரசின் பங்கு - 20%
மாநில அரசின் பங்கு - 21%
ஜ.ச.கூ வங்கியின் பங்கு - 59%
சரி. மத்திய அரசுக்கு இந்தப்பணம் மரத்துல காய்ச்சுதா?
2013-14 நிதியாண்டுல தமிழகத்துல இருந்து வசூலான வருமான வரி ₹42,524 கோடி. இப்ப இந்த திட்டத்துக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பீடான ₹14,600 கோடி ரூபாய அந்த வருமான வரி வசூலோட இணைச்சுப்பாருங்க. நான் ஒரு வருசத்துல வசூலான தொகைய மட்டும்தான் காட்டியிருக்கேன். திட்டத்துக்கு மத்திய திட்டக்குழு ஒப்புதல் அளித்த 2008 ஏப்ரல் மாதத்துல இருந்து கணக்கெப்போட்டா பல லச்சம் கோடி ரூபாய் வருமான வரி தமிழகத்துல இருந்து வசூலாகியிருக்கும். அந்தப் பணம்தான் இந்த திட்டத்துக்கு செலவாகியிருக்கு.இதுல இன்னும் மற்ற வரிகள நான் கணக்குல சேர்க்கலை.
தமிழக அரசுக்கும் பணம் மரத்துல காய்க்கலயே!!! 2013-14ல தமிழகத்தோட உத்தேச வரி வருமானம் ₹83,363 கோடி. அப்ப இந்த திட்டத்துக்கான ஆரம்பம் 2007ல விரிவான திட்ட மதிப்பீடு செய்ய மாநில அரசு ₹50 ஒதுக்கினதுதான். அப்ப இருந்து இப்ப வரை எத்தன் லச்சம் கோடி ரூபாய் வரியா தமிழக அரசுக்கு நாம சம்பாதிச்சுக் கொடுத்திருப்போம்?
அடுத்து அந்த ஜப்பான் காரன் தந்த கடனுக்கு வட்டியும் மொதலும்? அதான் குறைந்தபட்ச கட்டணம் ₹10 அதிகபட்ச கட்டணம் ₹40 னு நிர்ணயம் பண்ணியிருக்காங்களே!!! அது எங்க போகப்போகுதாம்?
எல்லாம் நம்ம உழைப்புல வந்த பணம். எந்த அரசனோ அரசியோ தனக்குப் பாத்தியமான நிலத்தோட வருமானத்துல இருந்து கட்டித்தந்த திட்டமில்லை இது. எந்த வள்ளலும் நமக்கு எழுதித்தந்த திட்டமில்லை இது.
சரி அப்போ நிர்வாகத்துல இருந்தவங்களோட சீரிய தொலைநோக்குக்கு உண்டான மரியாதைய நாம தரவேண்டாமா? தரனும்தான்... ஆனா அவங்கள நிர்வாகத்துக்குக் கொண்டு வந்ததே நாமதான. மறுபடியும் சொல்றேன், இது மன்னராட்சி இல்லை வாழ்த்துப்பா பாட. இது மக்களாட்சி. இங்க நடக்கிறது ஆட்சியில்லை. இது நிர்வாகம். அந்த நிர்வாகத்துக்கு நம்மோட பிரிதிநிதிகள தேர்தல் வச்சு நாமதான் தேர்ந்தெடுக்கிறோம்.
அப்ப யாருக்குத்தான் இந்த திட்டம் சொந்தம்? யாருக்கு இந்த புகழ் போய் சேரனும்? திட்டம் நமக்கு சொந்தம். இது அத்தியாவசியத் திட்டம்.ஒரு பிரம்மான்டமான மாநகரோட போக்குவரத்துத் தேவைக்காக காலம் கடந்து போடப்பட்ட திட்டம். நாம நமக்குனு செஞ்சுக்கிறதுல என்னயா புகழ் பெருமையெல்லாம்??!!
அநேகமா இது புரிஞ்சதாலதான் முதல்வர் எளிமையா வீடியோ கான்பிரன்சிங் முறையால திறந்து வச்சிருக்கனும். எதுக்கு மக்கள் பணத்த ஒரு ஆடம்பர விழா நடத்தி வீண் செலவு பண்ணனும்?
நாங்கதான்னு உங்ககிட்ட யாராச்சும் வந்தா, "நாங்கதான் உங்கள வச்சு அத செயல்படுத்தினோம்"னு திருப்பிச் சொல்லுங்க. அப்படியே "இப்பத்தான் மெட்ரோவோட முதல் கட்டத்துல ஒரு பங்கு நடைமுறைக்க வந்துருக்கு. மிச்சமிருக்கிறத சீக்கிரமா செயல்படுத்தப் பாருங்க. அப்படியே அடுத்த கட்டத் திட்டங்கள சீக்கிரமா ஆரம்பிக்கிற வழியப் பாருங்க. அப்பறம் சென்னை மட்டுமே தமிழகத்தோட ஒரே நகரம் கிடையாது. கோவை, மதுரை, சேலம்,திருப்பூர், நெல்லை, ஓசூர், தூத்துக்குடி, வேலூர், சிவகாசி, ஈரோடுனு இன்னும் எத்தனையோ நகரங்கள் உள்கட்டமைப்பு குறைவா அல்லாடிட்டு இருக்கு. அந்த நகரங்களோட தேவைகளையும் நிறைவேத்துங்க. இல்லாட்டி உங்க டெபாசிட்ட காலி பண்ணிடுவோம்"னு சொல்லுங்க...
சென்னை மெட்ரோ! இது நம்ம மெட்ரோ!
No comments:
Post a Comment