வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்ப்பது நாட்டுக்குச் செய்யும் துரோகம்!!!
இங்க கொடுக்குற உதவித் தொகையில படிச்சுட்டு அவனவன் வெளிநாட்டுக்குப் போய் அந்த நாட்டுக்காரனுக்கு சம்பாதிச்சுக் கொடுத்தா நம்ம நாடு எப்படி முன்னேறும்? எப்படி நாம வல்லரசாகறது?
கிட்டத்தட்ட நம்மாளுங்க ரெண்டரை கோடிப் பேர் வெளிநாட்ல வேலை செய்யறாங்க. இதுல பெரும்பாண்மையானவங்க மத்திய கிழக்குலயும் தென்கிழக்கு ஆசியாவுலயும் வேலை செய்யறவங்க. அப்பறம் உலகம் முழுசும் நம்மாளுங்க வேலை பாத்துட்டும் தொழில் செஞ்சுட்டும் விவசாயம் செஞ்சுட்டும் இருக்கத்தான் செய்யறாங்க.
அட நம்புங்க நம்ம சர்தார்ஜிங்க பழைய சோவியத் குடியரசுகள், ஆப்ரிக்காவுக்கெல்லாம் போய் குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்யறாங்க. ஒரு உதாரனத்துக்கு, மடகாஸ்கர்ல ஒரு ஏக்கர் விளை நிலத்த வருசத்துக்கு வெரும் 900₹ குத்தகைக்கு வாங்கலாம். பெரிய நிறுவனங்களும் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலத்த குத்தகைப்பும் விலைக்கும் வாங்கி விவசாயம் செய்யறாங்க.
இப்படி உலகத் முழுசும் பல ரக வேலை, தொழில்னு செஞ்சு சம்பாதிக்கிற நம்மாளுங்கள்ல பெரும்பாண்மையானவங்க இந்தியாவுல இருக்க தங்களோட சொந்தக்காரங்களுக்கு அந்தப் பணத்த அனுப்புறாங்க.
வெளிநாட்டு வேலைக்குப் போறவன திட்டுற நாமதான் அவங்க அனுப்புற காச வாங்கவும் செய்யறோம். கிட்டத்தட்ட அம்பது இந்தியர்கள்ல ஒருத்தர் வெளிநாட்ல இருக்கார்!!!
பாருங்க வெளிநாட்ல வேலை செய்யற நம்மாளுங்க அனுப்புற மணியார்டர் மட்டும் போன நிதியாண்டுல (அதாவது 2013-14) 70 பில்லியன் அமரிக்க டாலர் அல்லது 4,20,000,00,00,000₹ அல்லது நாலு லச்சத்தி இருபதாயிரம் கோடி ரூபாய்.
கிட்டதட்ட 2G ஏலத்துல நாடு இழந்த தொகை மாதிரி மூனு மடங்கு பணத்த நம்மாளுங்க வெளிநாட்ல சம்பாதிச்சு இங்க அனுப்புறாங்க. உலகத்துல இந்தமாதிரி சம்பாதிக்கிற நாடுகள்ல இந்தியா தான் முதலிடத்துல இருக்கு. கிட்டத்தட்ட நம்மோட மொத்த ஜிடிபியில 4% வெளிநாட்டுல இருந்து நம்மாளுங்க அனுப்புற மணியார்டர்தான்னா பாத்துக்கோங்க.
நம்மோட மனித வளம் பெருசு. வெளிநாட்டுக்கு நம்மாளுங்க போறதுல தப்பில்லை. எல்லாமே பணம்னு ஆன அப்பறம் யாரா இருந்தாலும் காசத் தேடித்தான் போவாங்க. அப்படி போகக்கூடாது இங்கதான் இருக்கணும்னு நாம நினைச்சோம்னா படிப்புக்குத்தகுந்த வேலைகள இங்க உருவாக்கணும், அதுக்கு கொஞ்ச நாளாகும். அப்படி ஒரு நிலைமை வந்தாலும் நம்மோட மக்கள் தொகை வளர்ர வேகத்துக்கு வெளிநாடுகளோட அபரிமிதமான நிலத்தையும் வளத்தையும் பொருளாதாரத்தையும் நாம பயன்படுத்திக்கணும். அதுதான் நமக்கும் நல்லது. ஏன்னா மனித இனத்தோட பரிணாம வளர்ச்சிக்கே இந்த இடம்பெயர்தல்தான் பெரும் ஊக்கியே!
சுந்தர் பிச்சையும் இன்னும் ரெண்டரைக்கோடி இந்தியர்களும் நமக்கு துரோகம் செய்யல. மாறா இங்க இருக்க மத்தவங்களுக்கு வளர்ரதுக்கான போட்டியில ஒரு ரெண்டரைக்கோடி போட்டியாளர்கள் இல்லைங்கிறதும், நாட்டுக்கு இரண்டரைக்கோடி ஊன்றுகோல் கிடைச்சிருக்குனும் அர்த்தம்!
No comments:
Post a Comment