கோவை போகும் ரயில்!
ரயில் தர்ர சுவாரசியம் வேற எந்த பயணங்கள்லயும் கிடைக்குமானு தெரியல!!! பேருந்துகள்லயோ விமானங்கள்லயோ இல்லை! அரசியல் பேச துணைக்கு அப்பாவோ நண்பர்களோ இருந்து நான் சாரதியா இருக்கும்வரைக்கும் மகிழ்வுந்துகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியானவை!
பேருந்துலயும் ரயிலிலயும் நாம வண்டி ஓட்ட மாட்டோம். ஆனா ரயில் ஒரு தனி ரகம். தனி சுகம். விமானப் பயணங்கள் நேர மிச்சப் படுத்தலுக்குத்தான். அனுபவம்னு பார்த்தா ரயில் தர அலாதிகளுக்கு ஆயிரம் கிலோமீட்டருக்குக் கிட்டயும் வரமுடியாது!
ரயில் கிட்டத்தட்ட ஓய்வு, போப்குவரத்து,விளையாட்டு, சுற்றுலா, சாப்பிங்னு கலந்து கட்டுன உணர்வத் தரும். நல்லா நீட்டிப் படுக்கலாம். காலாற நடக்கலாம். ஏதாவது சாப்பிடக் கிடைச்சிட்டே இருக்கும். வெளிய வேடிக்கை பார்க்க அவ்வளவு அருமையா இருக்கும். பேருந்தவிட நில அமைப்ப ரசிக்க ஏதுவான சாளரம் ரயில்ல. பேருந்துகளோட அளவுக்கு உடல் அசதி ஏற்படாது. நிம்மதியா படிக்கலாம். நண்பர்களோட இருந்தா சீட்டாடுறதுல இருந்து பாட்டுப்போட்டி அது இதுனு அமர்களமா இருக்கும்.
ஒருநாளோ அல்லது ரெண்டுநாளோ மட்டும் பக்கத்துல இருக்க கோவில்களுக்கெல்லாம் குடும்பத்தோட (ஒரு ஐநூறு கிமீ தொலைவு வரைக்கும்) போயிட்டு வரனும்னா ஒரு காரோ அல்லது டெம்போ டிராவலர்லயோ போலாம். ஆனா நீண்ட தொலைவுப் பயணங்கள், அதிக நாள் பயணங்கள், நண்பர்களோட புது ஊர்களுக்கு பயணம் போறதுனா அது ரயில்ல போனா அந்த சுற்றுலா இன்னும் ஆத்மார்த்தமானதா அமையும்!!! சுற்றுலா போக ரயில்ல போனா அந்த ஊர்ல கிடைச்ச அனுபவங்கள், பார்த்த இடங்கள் உண்ட உணவுகளுக்கு இணையாவோ அல்லது அதிகமாவோ ரயில்ல அனுபவங்கள் கிடைச்சிருக்கும்!.
ரெண்டு ரயில்கள் கடந்துபோறப்போ (அல்ஜீப்ரால போட்ட கணக்குகள் நியாபகம் வரும்!!!), ரயில் ஒரு வளைவுல திரும்பியபடி அதோட பிரம்மாண்டத்த வெளிப்படுத்தும்போது, காடுகள் மலைகள், வயல்கள், நகரங்கள்னு ஊடறுத்துப் போகும்போது, பாலங்கள் மேல போகும்போது டிடிஎஸ் எபக்டுல கேக்குற தடக் தடக் சத்தம், கதவோரமா நின்னு வெளிய வேடிக்கை பார்க்கும்போது லெவல் கிராசிங்ல எல்லாரும் நம்ம ரயில் கடக்குறதுக்காக காத்திருக்கிறதப் பார்க்கும்போது வர்ர நாமும் ஒரு விஐபிங்கிற உணர்வு, திடீர்னு வந்து நம்மல சீண்டி காசு வங்குற அரவாணிகள் (அவங்க தொல்லையில இருந்து தப்பிக்கறதுக்காகவே கொஞ்சம் பத்து ரூபாய் நோட்டுக்கள கைவசம் வச்சிருப்பேன். பயங்கர அனுபவங்கள்லாம் இருக்கு), ராணுவ வீரர்களோட அனுபவங்கள நோண்டி நோண்டி கேட்டுட்டே இருக்கிறதுனு ரயில்ல மட்டுமே கிடைக்குற தனியான அனுபவகள எழுதிட்டே இருக்கலாம்!!!
ரொம்பநாள் கழிச்சு (கடைசியா ரெண்டு மாசத்துக்கு முன்ன ரயில்ல போனது :-( ) ரயில்ல போறேன்!!! தூக்கம் களைஞ்சுடுத்து... முகம் கழுவிட்டு கதவுக்கு பக்கமா நின்னு எட்டிப் பார்த்துட்டு இருந்தப்போ ரயிலோட பின்னிக்கிடக்க நினைவுகள் எல்லாம் மனக்கண்ல விரிய ஆரம்பிச்சுடுச்சு!!! சேலம் தாண்டுனவுடனே எழுத ஆரம்பிச்சேன் இப்ப ஈரோடு வந்தாச்சு! ரயில் பயணங்கள்ல நிம்மதியா எழுதவும் முடியும்!!!
ஆங், ரயிலுக்கு இணையான அலாதி தர்ர இன்னொரு பயணம்னா அது பைக் பயணமாத்தான் இருக்கும்!!! ஐயம் தி மிஸ்ஸிங் தி மை பைக் 3:-)
No comments:
Post a Comment