இந்தியா இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதாரவும் தெரிவிக்காம எதிர்ப்பும் தெரிவிக்காம ஒழிஞ்சுக்கிட்டதப் பார்த்து கடுப்பானவங்க, வருத்தப்படுறவங்க, சந்தோசப்படுறவங்களுக்காக இந்தப் படம்.
நல்லாப் பாருங்க. இஸ்ரேல தீவிரவாத நாடா அறிவிச்ச பொலீவியா, ராஜபக்சேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயக விருத கொடுத்தாங்க... அதே ராஜபக்சே இஸ்ரேலோட உதவியோடதான் புலிகள போர்ல தோற்கடிச்சாப்புல... பொலிவியா இடதுசாரி சித்தாந்த தலைமை கொண்ட நாடு. அவங்களுக்கு அமரிக்கானாலே சுத்தமா ஆகாது. அதனால அமரிக்காவோட செல்லப்பிள்ளை இஸ்ரேல்னாலும் ஆகாது. அவ்வளவுதான் அவங்களோட இஸ்ரேல் எதிர்ப்புக்குக் காரணம். பிரிட்டன், கனடா மாதிரியான நேட்டோ நாடுகள் ராஜபக்சேவ நெருக்குனதால ராஜபக்சேவுக்கு ஆதரவா நின்னாங்க. இதுவும் எதிரிக்கு எதிரி நண்பன்கிற பழைய புவியரசியல் கணக்குதான்.
இப்ப இதுக்கும் இந்தியா ஒதுங்குனதுக்கும் என்ன சம்பந்தம்? நிறைய இருக்கு. இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள். பாகிஸ்தானுக்கும் மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கும் ரத்த சொந்தங்கள் மாதிரியான உறவு. இந்தியாவுடனான பல போர்கள்ல பாகிஸ்தானுக்கு மத்திய கிழக்கு நாடுகள் இராணுவத் தளவாடங்கள், பணம், போர் விமானங்கள், விமானிகள்னு எக்கச்சக்கமா கொடுத்து உதவியிருக்காங்க.
இந்தியா தன்னோட இசுலாமிய மக்கள்தொகைய முன்னிட்டு மத்திய கிழக்கு நாடுகளோட தொடர்ந்து நட்பு பாராட்டிட்டுதான் இருந்தது. 1993 வரை இஸ்ரேலோட நமக்கு தூதரக உறவுகூட இல்லை. ஆனாலும் அதுவரையிலும் இஸ்ரேல் நமக்கு யுத்தங்களின்போது உளவுத் தகவல்கள கொடுத்து உதவியிருக்கு. நேரடியான அரசியல் உறவு இல்லாட்டியும் நம்ம உளவு அமைப்புகள் அவங்க மொசாத் கூட தொடர்புலதான் இருந்தாங்க. மத்திய கிழக்கு தீவிரவாத/சுதந்திரப் போராட்ட இயக்கங்களும் காஷ்மீர்ல இந்தியாவுக்கு எதிராப் போராடுற இயக்கங்களுக்கும் தொடர்புகள் இருக்கு. இதனால இந்தியா ஹமாஸ் பத்தி இங்க தெரிஞ்சுக்கிட்டதையும், இஸ்ரேல் லஷ்கர் இ தாய்பா பத்தி அங்க தெரிஞ்சுக்கிட்டதையும் பணடமாற்று செஞ்சுக்கிறது பல வருசங்களாத் தொடருது. அதனால இந்தியாவோட எதிரியோட நண்பர்களோட எதிரி இந்தியாவுக்கு நண்பனாகிறது புவி அரசியல் எதார்த்தம்.
அப்பறம் இஸ்ரேலோட அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு அத்தியவசியம். இஸ்ரேல் மாதிரி அவ்வளவு அதிநவீன தொழில்நுட்பங்கள ருசியாவும்கூட இந்தியாவுக்கு தர்ராது...
இத்தன பலன்கள் இருக்கிறதாலதான் இந்தியா இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துல கலந்துக்காம கம்முனு இருந்துடுச்சு.
No comments:
Post a Comment