அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.
பிழைத்தபின் திருந்திவிட்டோம், எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்பது சூழ்ச்சியன்றி வேறில்லை!
எங்களைத் தண்டித்தது போதும், எங்களை மன்னித்து ஆட்சியைத் தாருங்கள் என்பதைப் போன்று நகைப்பிற்குரியது வேறேதும் உள்ளதா? வாய்ப்புக் கிடைத்தபோது நீங்கள் செய்தவை சரியல்ல என்பதால்தான் தண்டனையே. தண்டிக்கும் அதிகாரம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் பிழைத்தோரை அன்றே கொல்லும் அரசனும் நாங்கள்தான், நின்று கொல்லும் தெய்வமும் நாங்கள்தான்.
மக்களாட்சி எங்களுக்குக் கிடைத்த ஒரு வரம். ஒரே வரமென்றும் சொல்வேன். திருடர்களும், துரோகிகளுமான நீங்களெல்லாம் எங்களிடமிருக்கும் அந்த வரத்தை பொண்முட்டையிடும் வாத்தாக பார்ப்பீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீங்கள் வீசும் எச்சில் துண்டுகளை உண்டு ஐந்தாண்டுகளுக்கொருமுறை உங்களுக்கொரு பொண்முட்டையைத் தருவது எங்களுக்கு வாடிக்கையாகிப்போனதையும் அறிவோம்.
கல்வி குருடனுக்கும் பார்வையை வாழங்கிடும். எங்களது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். எங்கள் கண்கள் திறந்தபின் உங்கள் திருட்டுத்தனங்களும் துரோகங்களும் வெளிச்சமாகும். அப்போது தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே எங்களிடம் இருக்கும்.
அதனால், வய்ப்பிருக்கும்போதே ஓடிவிடுங்கள். மன்னித்துவிடுகிறோம்!
No comments:
Post a Comment