பெண் பிலிர்ட் (flirt) செய்ய முடியுமா? அப்படி பெண் பொதுவெளியில ஒரு ஆணிடம் பிலிர்ட் செய்யலாமா?
ஒரு பெண் நேரடியாக ஒரு ஆணை வர்ணித்தாலோ அல்லது தனது நண்பன் அல்லது காதலனிடம் நீ அழகாக இருக்கிறாய் என்று சொன்னாலோ அது அந்தப் பெண் அடக்கமற்றவள் என்ற தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. இதுதான் உண்மை. பெண் வெட்கமற்றவள் என்ற தோற்றம் கற்பிக்கப்படும் அபாயம் இருக்கிறது. ஒரு பெண் இயல்பாக பழகினாலே அது காதல் என்று எடுத்துக்கொள்ளும் ஆண்களும், நட்பாகவோ அல்லது தெரிந்த முகமாக இருக்கிறது என்கிற ரீதியிலோ ஒரு ஆணைப் பார்த்து புண்முறுவல் செய்தால் கூட அதற்கு ஆயிரம் கற்பிதங்களைக் கற்பிக்கும் மனமும் நண்பர்களும் நமக்கு உண்டு. இது ஏன் இப்படி இருக்குனு பார்க்கனும்.
ஒரு ஆணுக்கே கூட பார்கிற எல்லாப் பெண்கள்கிட்டயும் காதல் வராது. காதலோட வர்ர காமம்தான் அழகுங்கிறது என்னோட நம்பிக்கை. அதாவது பேச்சு சுதந்திரம் அதிகமா இருக்க ஒரு ஆணுக்கே பார்கிற எல்லாப் பெண்கள் மேலயும் காதல் வராதுங்கிறப்போ, பேசுற சுதந்திரம் குறைவா இருக்க பெண் ஒரு ஆணப் பார்த்தாளே அது காதல் அல்லது கிரஷ்தான் அப்படிங்கிற ஒரு புரிதல் சமுதாயத்துல இருக்கு. நம்ம வீட்லயே பெண்கள வளர்க்கும்போது ஆண்கள நிமிர்ந்து பார்க்கக்கூடாதுனு சொல்லி வளர்கிறதும் இதனாலதான்.
ஆணோட பண்பு கவர்தல், சம்பாதித்தல். ரெண்டும் ஒரே அடிப்படை பொருள் தர்ர சொற்கள், ஆனா எதிர்பதம். ஆண் தன்னோட துணைய தேடனும். இது பாலூட்டிகளோட அடிப்படை வாழ்க்கைமுறை. தன்னோட குடும்பத்த ஆண் அமைச்சுக்கனும். அதனால ஆணோட கண்கள் எப்பவுமே தனக்கான துணைய தேடிட்டே இருக்கும். அழகான பெண்களப் பார்த்தா "இவ நமக்கு ஏற்ற துணையா? நம்மோட இனம் விருத்தியடையுமா" அப்படினு அலசரது ஒரு ஆணோட டிஎன்ஏல இருக்காம். இதனால ஆண் பிலிர்ட் (flirt) செய்யறது இயல்பு.
பெண்ணும் தன்னோட வாழ்க்கைத் துணைய தேடுறது இயல்புதான். ஆனா பெண்ணோட பண்புகள் உருவாக்குதல்,பாதுகாத்தல், போஷித்தல். இது பாலூட்டிகளோட இயல்பு. பெண்ணோட உடல்ல இருந்து உயிர் உருவாகுது. ஆனா அதுக்கு ஆணோட துணை தேவைப்படுது. அதனால பெண்ணுக்கு தன்னோட துணைய தேடும்போது உடல்ரீதியான ஈர்ப்போட, காமம் முடிஞ்ச பின்ன அந்த ஆண் தன்னயும் அந்த காமத்தோட விளைவா தனக்குள்ள உருவாகுற உயிரயும் பார்த்துக்குவானாங்கிற தேடலும் சேர்த்துக்குது.
இந்த அடிப்படை வேறுபாடுகள்தான் ஒரு பெண் தன்னிடம் நாகரீகமா பிலிர்ட் செய்யுற ஆண ஒரு புன்னகையோட கடந்து போகவும், தன்னைப் பார்க்கிற அல்லது தன்னப் பார்த்து சிரிக்கிற பெண்ணோட மனச வெல்ல அடுத்து என்ன செய்யலாம்னு அவள அந்த ஆண் துரத்தவும் காரணம்.
பார்வை தான் அறிமுகமாகுறதோட முதல் படி.கண்கள் உள்ளத்தோட உணர்வ பிரிதிபலிச்சிடும். ஆணுக்கு தன்னோட துணைய தேடனும். அதனால அவன் பார்வை சுழன்றுட்டே இருக்கும். பெண்ணுக்க தண்ணோட துணைந உணரனும். அதனாலதான் பெண்கள் பெரும்பாலும் மாற்று ஆண்கள் கண்கள நேரடியா பார்கிறதில்லை.
அடுத்தது பேசுதல். பேச்சு நம்மோட உணர்வுகள இன்னும் விரிவா எடுத்துச் சொல்லும். பெண்கள் அதிகமா வெளிப்படையா ஒரு ஆணோட உடலப் பத்தி பேச முடியாததுக்கு அந்த மேல சொன்ன இவன் கலவி முடிந்து உயிர் உருவாகும்போது நம்மல பார்த்துக்குவானாங்கிற சந்தேகம் அதிகமா இருக்கிறதுதான். ஆணுக்கு பெண்ணோட மனத சம்பாதிக்கவோ அல்லது கவரவோ பேச்சு அதிகமா தேவைப்படுது.
இதுக்கெல்லாம் அடுத்தகட்டம்தான் தொடுதல். அது இன்னும் வலிமையான கம்யூனிக்கேசன். ஆணோட தொடுதல்ல ஆளுமை இருக்கும். அது ரெண்டுவிதமான பொருள் தரும். ஒன்னு பாதுகாப்பு உணர்வு, ரெண்டு அடக்கியாளும் உணர்வு. அதே பெண்களோட தொடுதல்ல ஏற்றுக்கொள்ளுதலும் அரவணைத்தலும் இருக்கும்.
இந்த மூன்று நிலை கம்யூனிக்கேசன் இருக்கு. ஒரு ஆணுப் பெண்ணும் இணையறதுக்கு முன்ன. இந்த மூனு நிலையும் தெளிவா நடக்கனும். அப்பறம்தான் கலவி.
ஆனா சமுதாய வாழ்வுல போர் வந்த பின்ன ஆணோட அடக்கியாளும் பண்பு மேலோங்கிடுச்சு. இதினாலதான் ஆண் பெண்ண தனக்கு அடங்க வேண்டியவளாப் பார்க்க ஆரம்பிச்சுட்டான். இதுதான் இந்த வக்கிரங்களோட அடிப்படை. பார்வை, சொல், தொடுதல் ஆகிய மூனும் வக்கிரத்த வெளிப்படுத்தும்.
அமைதியான சமுதாயத்துல ஆண் தன் வளர் பருவத்துல அம்மாவோட கட்டுப்பாட்டுல இருப்பான். அப்படியான சூழல் பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களோட அடிப்படைப் பண்புல மாற்றத்தக் கொண்டுவர ஏதுவா இருக்கும். அதுதான் கலாச்சாரமா பரிணமிக்குது. இப்ப நம்ம சமுதாயம் மூனு தலைமுறையா அமைதி சூழல்ல இருக்கு. இத பெண்கள் பயன்படுத்தி ஒரு நல்ல ஆண்மகன வளர்க்க முயற்சிக்கனும்.
அதனால முடிவா என்ன சொல்றேனா பாதுகாக்குற ஆண்கள் இருக்க சமுதாயத்துலதான் பெண்கள் பிலிர்ட் செய்ய முடியும்.
No comments:
Post a Comment