Sunday, 30 August 2015

சூழல் காப்பாளர்கள்

ஒரு மரத்தில் சாப்பிட்டு
பிரதியாக எங்கெங்கோ மரம் வளர்க்கும்
நன்றி அறிந்த பறவைகள்!!!

நாளை நிழல் தரும், கனி தரும், மழை தரும், உயிர் வளி தரும் என்று ஏதேதோ காரணங்களுக்காக ஒரு மரம் இரண்டு மரமென நடும் நாமே அதை விளம்பரப்படுத்திக் கொள்ள எவ்வளவோ பிரயத்தனப்படுகிறோம்! ஆனால் எத்தனையெத்தனையோ பிரம்மாண்ட வனாந்திரங்களை எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி விதைத்துப்போகும் பறவைகளிடம் எந்த எதிர்பார்ப்புமில்லை! நாளை பயன்தரும் என்ற வணிக நோக்கமும் இல்லை!!!

ஆனா மனுசங்க நாம எதையுமே ஒரு வணிகமாத்தான் பார்ப்போம். நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஒருத்தருக்கு ஒரு உதவி செய்யறோம்னாலும், நாம செய்யற உதவி அவங்களுக்குப் பயன்படும்கிற எதிர்பார்ப்பு இருக்கும். நம்மகிட்ட இவ்வளவு இருக்கு, நமக்கு இவ்வளவு தேவைப்படும், அதனால இவ்வளவு செய்யலாம்னோ; இன்னைக்கு நாம இந்த வேலைய செய்யணும், அதுக்கு இவ்வளவு நேரம் தேவைப்படும், அப்ப அவங்களுக்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும்னு மனசுக்குள்ள உதவி/சேவை செய்யறதப்பத்தியும் ஒரு கணக்கு ஓடிட்டே இருக்கும். ஆனா பறவைகளுக்கு இந்தக் கணக்கெல்லாம் கிடையாது. குளிர்காலத்துக்கு தாணியங்கள சேமிச்சு வச்சாலும் அந்த தாணியங்கள்ல ஒன்னு ரெண்ட விதையா எச்சத்துல விட்டுட்டுப் போயிடும்!

பூமி தன்னோட சூழல தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்கு. அது புறக்காரணிகளால சமநிலை இழக்கிறதுதான் இயல்பா இருந்தது மனுசன் நாகரீகமடையற வரை!!!

No comments:

Post a Comment