இப்ப தேர்தல் நேரம்கிறதால குடி குடியைக் கெடுக்கும்னு கூப்பாடு போடுறவங்களாம் டாஸ்மாக்க மூடுங்கனு கூப்பாடு போடுறாங்க... அரசும் விற்பனை நேரத்தக் குறைக்கிறோம், பாதிக் கடைகள மூடுறோம்னு கோயபெல்ஸ்கள கட்டவிழ்த்துவிட்டிருக்கு... என்ன செய்யலாம்? டாஸ்மாக்க மூடிடலாமா? பூரண மதுவிலக்க அமல்படுத்திடலாமா?
டாஸ்மாக்க மூடி பூரண மதுவிலக்க அமல்படுத்துனா என்னாகும்? ஒன்னு நிச்சயமா நடக்கும்... பாண்டியிலும், காரைக்காலிலும், பெங்களூரிலும், கேரளக் கள்ளுக் கடைகளிலும் விறபனை ராக்கெட் ஏறிடும் அவ்வளவுதான்... அப்பறம் கள்ளச்சாராயம் காய்ச்சுறது குலத்தொழிலாகிடும்...
என்னோட கருத்து என்னன்னா, சாராயம் குடிக்கிறது தனிமனித உரிமை. அத தடுக்க முடியாது!! ஆனா, அந்த தனி மனிதனுக்கு எவ்வளவு சாராயம் கிடைக்கனும்னு நாம தீர்மானிக்கலாம். அதுக்கு முதல்ல சாராயத்த தலைக்கு மாசத்துக்கு இவ்வளவுதான்னு நிர்ணயம் பண்ணனும். எப்படினா, ஒரு குடும்ப அட்டையில எத்தனை பேரு இருக்காங்களோ அத்தனை பேருக்கு தலைக்கு இவ்வளவு கிலோ சர்கரைனு ரேசன் கடையில விக்கிற மாதிரி, தலைக்கு இவ்வளவு அளவு சுத்த சாராயம்னு ரேசன் கடையிலயே வச்சு வித்துடலாம். அதாவது, சாராயத்தையும் குடும்ப அட்டையில சேர்த்திடலாம்கிறேன்.
எப்படியும் பெரும்பாலான பெண்கள் சாராயம் குடிக்க மாட்டாங்க. அதனால அவங்க பேர சொல்லி ஆண்கள் குடிக்கிறதுக்கு பதிலா, எத்தனை பேர் குடும்பத்துல சாராயம் குடிப்பாங்கனு அவங்களே முடிவு பண்ணி விண்ணப்பம் செய்யனும். இப்ப ஒரு வீட்டுல குடும்பத்தலைவர், அவர் மனைவி, அவர் அப்பா, அம்மா, அவரோட மகள் மகன்னு மொத்தம் ஆறு பேர் இருக்காங்கனு வச்சிக்குங்க, எப்படியும் அந்த மூனு பெண்களும் சாராயம் குடிக்க மாட்டாங்க. தாத்தாவும் குடிய நிறுத்தியிருப்பாரு. அந்த மகன் குடிச்சா வீட்டுல தர்ம அடிதான் கிடைக்கும். குடும்பத் தலைவர் குடிக்கிறாருனு வச்சிக்கிட்டா, அந்த குடும்ப அட்டைய வச்சி ஒருத்தருக்குண்டான அளவு சாராயம் மட்டும்தான் வாங்க முடியும். இதுல என்ன சிறப்புனா, குடிக்கிறவங்க என்ன குடிக்கிறாங்க, எவ்வளவு குடிக்கிறாங்கனு அவங்க குடும்பம் கண்கானிக்க முடியும். இது பலரையும் அளவா (ஏற்கனவே அளவாத்தான் சாராயம் கிடைக்கும்கிற சூழ்நிலையில) குடிக்க விடும். "குடிக்கிறவங்களுக்கும் தாங்கள் மத்தவங்களுக்குத் தெரியாம ஏதோ தப்பான விசயம் செய்யிறோம்கிற குற்ற உணர்வுக்கு பதிலா ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்கும்."
அதோடையும் இந்த குடும்ப அட்டைய மின்னணு முறையில மாத்தனும். அப்பத்தான் எவ்வளவு சாராயம் மொத்தமா மாதம் தேவைப்படுது, எவ்வளவு சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்குனு அரசும் தெரிஞ்சிக்கமுடியும். அப்ப, எந்தெந்த குடும்ப அட்டைகளுக்கு சாராயம் விற்கபட்டிருக்குனு காவல்துறைக்கும் தெரியும். இபப்படிப்பட்ட தகவல்கள ஒரு சர்வர்ல உடனுக்குடன் ஏத்திட்டா, சாராயம் வேண்டாம்னு எழுதிக்குடுத்த யாராச்சும் சாராயம் குடிச்சிட்டு காவல் துறையில மாட்டுனா, அவங்க கடத்தல் சாராயமோ இல்ல கள்ளச்சாராயமோ குடிச்சிருக்காங்ககிறது உறுதியாயிடும்.
காவல்துறைக்கு கள்ளச்சாராயம் கடத்தல் சாராயத்த புடிக்கிறதுக்கு சொல்லித்தரத் தேவையில்ல. தடைய மீறி கள்ளிறக்க விவசாயிகள் முடிவு பண்ணப்போ, எந்தெந்த டாஸ்மாக் கடைகள்ல சராசரிக்கும் குறைவா விற்பனை நடந்திருக்கோ அந்தந்த கடைய சுத்தியிருக்க ஊர்கள்ல கள்ளிறக்குறாங்களானு சோதனை பண்ணாங்க. அந்தளவுக்கு அவங்க புத்திசாளிங்க.
குடிய ஒழிக்க முடியாதுங்கிறது இன்றைய நிதர்சணம். வள்ளுவர் அந்தக்காலத்துல பத்துக் குறள எழுதி குடிக்காதனு சொல்லியிருக்காருனா, நம்மாளுங்க கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடும் கள்ளோடும் முன்தோன்றயிருக்காங்கனு தெளிவாகுது. அதனால, அளவாக்க குடிக்கிறதுக்கு வழி செய்யலாம். அதிகமக் குடிக்கிறவங்கள, திருட்டுத்தனமாக் குடிக்கிறவங்கள வீட்டுல மாட்டிவிட்டுடலாம்.
இப்ப, நான் எப்பவாச்சும் குடிப்பேன். ஆனா வீட்டுல தெரியாது. இனி ரேசன் கடையில வாங்கித்தான் குடிக்கனும்கிற நிலை வந்தா, ஒன்னு நான் வீட்டுல உண்மைய சொல்லனும், இல்லாட்டி குடிய விடனும், இல்லாட்டி என் அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டு அவர்கிட்ட கொஞ்சம் கடன் வாங்கிக் குடிக்கனும். இல்ல நண்பர்கள்கூட பகிர்ந்து குடிக்கலாம்னு பார்த்தா, அந்த பயலுங்க எல்லாரும் அவங்கவங்க வீட்டுல தர்ம அடி வாங்கிட்டு இருப்பானுங்க!!! எது எப்படி இருந்தாலும் என் வீட்டுக்கு நான் என்ன பண்றேனு தெரிஞ்சிடும். அது வரைக்கும் நல்லதுதான்.
No comments:
Post a Comment